ஆர்டர் செய்ததோ எல்ஜி டிவி, டெலிவரி ஆனதோ ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மரப்பலகை.!

|

சில நேரங்களில் அல்ல, பெரும்பாலான நேரங்களிலும் ஆன்லைன் ஷாப்பிங் என்பது பகடைகளை உருட்டி தாயம் விழ வைக்கும் ஒரு விளையாட்டை போன்றது தான். அந்த சூதாட்டத்தில் சிலர் துல்லியமாக வெல்வர் (அதாவது எதிர்பார்த்து ஆர்டர் செய்த பொருள் அப்படியே கைக்கு கிடைக்கும்), மற்ற சிலர் மிகவும் மோசமாக தோல்வி அடைவர் (அதாவது ஆர்டர் செய்த பொருளுக்கும், வந்து இறங்கிய பொருளுக்கும் துளிகூட சம்பந்தம் இருக்காது).!

கேமரா பிரியர்களே.. இதோ விவோ X21-ஐ நம்பி வாங்க 6 காரணங்கள்.!கேமரா பிரியர்களே.. இதோ விவோ X21-ஐ நம்பி வாங்க 6 காரணங்கள்.!

அப்படியாக ஆன்லைன் ஷாப்பிங்கில் மிக மோசமான பகல் கனவுகளை சந்தித்த 10 உண்மையான "'டெலிவரி" சம்பவங்களை பற்றிய தொகுப்பே இது. முதலில் சிரியுங்கள் பின்னர் கொஞ்சம் சிந்தியுங்கள்.!

01.

01.

அளவீடுகளை பற்றிய விவரங்களை ஒருமுறை பார்த்து விடுவது நல்லது. இல்லையெனில் விளையாடும் என்று நம்பி வாங்கிய பொருளை, பூனை வேடிக்கை தான் பார்க்கும், அதை நீங்கள் வேடிக்கை பார்க்க வேண்டியதாய் இருக்கும்.!

02.

02.

கருப்பு நிற ஸ்வெட்பேண்ட்ஸ் ஆர்டர் செய்தவருக்கு டெலிவரி ஆனதோ பஞ்சவர்ண கலரில் ஒரு பேண்ட்.! இதை போட்டுட்டு போனா நாய் தொறத்துமே சிஸ்டர்.!

03.

03.

சறுக்காமல் வழுக்காமல், மலைகளில் அல்லது குன்றுகளில் ஏற உதவும் ஹைக்கிங் ஷூக்களை ஆர்டர் செய்தவருக்கு டெலிவரி ஆனதோ ஹீல்ஸ் ஷூ.! சத்திய சோதனை.!

04.

04.

இவர் ஒரு 50 நாற்காலிகளை ஆன்லைன் ஏலத்தில் வாங்கியுள்ளார். டெலிவரி ஆன பின்னர்தான் தெரிந்தது அதெல்ல ஆபிஸ் நாற்காலிகள் அல்ல, எலிமென்டரி ஸ்கூல் நாற்காலிகள் என்று..! மறுபடியும் ஏலம் விட்ருங்க பாஸ்.! வேற வழி இல்ல.!

05.

05.

ஹாலோவீனை (அதாங்க பேய் போல வேஷம் கட்டி கொண்டாடுற திருவிழா) கொண்டாட "டைட்ஸ்" ஒன்றை ஆர்டர் செய்த நம்ம ஜிம் பாடிஅண்ணனுக்கு டெலிவரி ஆனதை நீங்களே பாருங்களேன்.!

06.

06.

ஆன்லைனில் ஆர்டர் பண்ணும் போது கூட "இதை" நான் கவனிக்கல.! ஆனா.. ரோட்டுல போற வர்றவங்க எல்லாரும் ஒருமுறைக்கு ரெண்டுமுறை என் டிஷர்ட்டை உத்து உத்து பார்க்கும் போது தான் புரிஞ்சுது.. ஈபிள் கோபுரம் இருப்பது லண்டனில் அல்ல. பாரீஸில் என்று.!

07.

07.

அரை இன்ச் சொலேனாய்டு வால்வ் (solenoid valve) ஆர்டர் பண்ண நம்ம அதிர்ஷ்டக்கார அண்ணனுக்கு டெலிவரி ஆனதோ.. 7 அடி உயரமான டெடி பியர்.! மச்சம் இருக்காமல்.. அதுக்காக இப்படியா.?

08.

08.

ஆன்லனில் 'கஸ்டம் பேமிலி போட்டோ ப்ரேம்' ஆர்டர் செய்தேன். வந்து சேர்ந்ததோ.. ஏதோவொரு சீன குடும்பத்தின் போட்டோ ப்ரேம், அதுவும் அவர்கள் பென்குயின்களை வேடிக்கை பார்ப்பது போன்று போட்டோஷாப் செய்யப்பட்ட பேமிலி போட்டோ ப்ரேம்.! டபுள் கடுப்பு.!

09.

09.

முன் பின் அறியாத, நம்பிக்கை இல்லாத வெண்டர்களிடம் இருந்து டிவியை வாங்குவது என்பது ஒரு மிக மிக மோசமான ஐடியாவாகும். எல்ஜி டிவி ஆர்டர் செய்து ஏதோவொரு டூப்ளிகேட் டிவி வந்தால் கூட பரவாயில்லை. டிவி போன்றே ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மரப்பலகை வந்துள்ளது. என்ன செய்ய.?

Most Read Articles
Best Mobiles in India

English summary
9 People Who Deeply Regret Shopping Online. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X