Home
News

மிகவும் ஆபத்தான 9 Mobile போன்கள்! இந்தியால இதை தப்பித்தவறி கூட வாங்கிடாதீங்க!

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள்.. இது போல தான் நமது கைகளிலும் இருக்கும் ஸ்மார்ட்போன்களும் சில நேரங்களில் நமது உயிரை குடிக்கும் நஞ்சாக மாறிவிடுகிறது. பொதுவாக ஸ்மார்ட்போன்களை மனிதர்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடாது என்று மருத்துவர்களால் எச்சரிக்கப்படுகிறது.

பொதுவாக சில ஸ்மார்ட்போன் (smartphone) மாடல்களை அளவுக்கு மீறி நாம் பயன்படுத்தும் போது தான் அது ஆபத்தாகிறது. ஆனால், இந்தியாவில் விற்பனையாகும் சில ஸ்மார்ட்போன் மாடலக்ளை நீங்கள் வாங்கினால், உடனே ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டீர்கள் என்கிறது சமீபத்திய கண்டுபிடிப்பு. ஆம், கேட்கவே ஷாக்கிங் ஆக இருக்கிறதல்லவா? ஆனால், இது தான் உண்மை.

மிகவும் ஆபத்தான 9 Mobile போன்கள்! தப்பித்தவறி கூட இதை வாங்கிடாதீங்க!

இந்தியாவில் தற்போது விற்பனையாகும் 9 ஸ்மார்ட்போன் மாடல்கள் மிகவும் ஆபத்தான ஸ்மார்ட்போன் சாதனங்கள் (Dangerous smartphone) என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த 9 ஸ்மார்ட்போன் மாடல்களில், தலைசிறந்த பிராண்ட்களின் சில பிரீமியம் சாதனங்கள் கூட ஆபத்தான ஸ்மார்ட்போனாக பட்டியலிடப்பட்டுள்ளது தான் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதில் ஆப்பிள் சாதனம் கூட சேர்க்கப்பட்டுள்ளது என்பது நம்மைக் கவலைப்படச் செய்கிறது.

சரி வாருங்கள், இந்தியாவில் எந்த மாடல் ஸ்மார்ட்போன்கள், என்ன காரணத்தினால் ஆபத்தானவை என்று பார்க்கலாம். இந்தியாவில் வாங்க கிடைக்கும் 9 பாதுகாப்பற்ற அல்லது மிகவும் ஆபத்தான ஸ்மார்ட்போன் மாடல் என்று பட்டியலிடப்பட்ட சாதனங்களின் விபரங்களை இப்போது பார்க்கலாம். என்ன காரணத்தினால் இந்த சாதனங்களை மிகவும் ஆபத்தான ஸ்மார்ட்போன்கள் என்று பட்டியலிட்டுள்ளனர் என்ற விபரத்தையும் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

1. Motorola Edge ஸ்மார்ட்போன் சீரிஸ்
2. ZTE Axon 11 5G
3. OnePlus 6T
4. Sony Xperia XA2 Plus
5. Google Pixel 3 XL
6. Google Pixel 4a
7. Oppo Reno 5 5G
8. OnePlus 6
9. iPhone 8

இந்த பட்டியலில் உள்ள முதல் smartphone சாதனம் மோட்டோரோலா நிறுவனத்திடம் இருந்து வெளிவந்த Motorola Edge ஸ்மார்ட்போன் சீரிஸில் அமைந்துள்ளது. இந்த மாடல் அதிகளவு RF கதிர்வீச்சை வெளிப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த சாதனம் மிகவும் ஆபத்தான ஸ்மார்ட்போன் மாடலாக கருதப்படுகிறது.

மிகவும் ஆபத்தான 9 Mobile போன்கள்! தப்பித்தவறி கூட இதை வாங்கிடாதீங்க!

அடுத்தபடியாக, இந்தியாவில் விற்பனையாகும் ZTE Axon 11 5G மாடல் பாதுகாப்பற்ற ஸ்மார்ட்போன் சாதனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இதுவும் மனிதர்களின் ஆரோக்கியத்திற்குக் கேட்டு விளைவிக்கும் அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மாடலை வாங்க வேண்டாம் என்று ஆராய்ச்சி குழு நேரடியாகவே தெரிவித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

பேங்க்லெஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற ஸ்மார்ட்போன் சாதனமாக வளம் வந்த மாடல் தான் OnePlus 6T. இந்தியாவில் அதிக பயனர்களை கொண்ட மற்றும் தலைசிறந்த பிராண்ட் ஆக கருதப்படும் ஒன்பிளஸ் பிராண்டில் இருந்து வெளிவந்த இந்த மாடலும் அதிகமான நஞ்சு கதிர்வீச்சை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

மனித உடலுக்கு தகாத கதிர்வீச்சை வெளிப்படுத்தும் ஆபத்தான ஸ்மார்ட்போன் சாதனமாக இந்த Sony Xperia XA2 Plus பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, Google Pixel 3 XL மற்றும் Google Pixel 4a ஆகிய சாதனங்கள் கூட, மிகவும் ஆபத்தான ஸ்மார்ட்போன் மாடலாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்பது வேதனை. இந்த மாடல்கள் சரியான பயனர் அனுபவத்தை வழங்கவில்லை என்றும், இதில் சில ஆபத்துகள் உள்ளதென்றும் பேங்க்லெஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

Oppo Reno 5 5G ஸ்மார்ட்போன் மாடலும் அதிகமான அபாயகரமான கதிர்வீச்சை வெளிப்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. ஜெர்மன் பெடரல் ஆபீஸ் ஃபார் ரேடியேஷன் ப்ரொடெக்ஷன் வெளியிட்ட தகவலின் படி, OnePlus 6 சாதனம் ஆபத்தான சாதனமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இறுதியாக, Apple நிறுவனத்திற்குச் சொந்தமான iPhone 8 மாடல் மட்டும் மனிதர்களால் பயன்படுத்தப் பாதுகாப்பானது அல்ல என்று கூறப்பட்டுள்ளது. இந்த 9 மாடல்களும் ஆபத்தான ஸ்மார்ட்போன் மாடல்கள் என்று பதிவாகியுள்ளன.

Best Mobiles in India

English summary
9 most unsafe and dangerous smartphone models that you should avoid buying and using right now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X