உங்க ATM பின் நம்பருக்கு பின்னாடி இவ்ளோ மேட்டர் இருக்கா? அடடா! இது தெரியாம போச்சே!

|

தற்போது அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பேமனட், UPI பேமன்ட் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக பிடித்த உணவுகளை வாங்குவது முதல் மின்சார கட்டணம் வரை அனைத்திற்கு இந்த UPI பேமன்ட் தான் அதிகம் பயன்படுகிறது.

 ஏடிஎம் (ATM)

ஏடிஎம் (ATM)

ஆனாலும் மாத இறுதியில் அல்லது துவக்கத்தில் நமது சம்பளப் பணத்தை ஏடிஎம்-களில் எடுப்பதே ஒரு தனி சந்தோஷம் தான். அதாவது ஆன்லைனில்
பணம் அனுப்பி செலவு செய்வதை விட ஏடிஎம்-களில் பணம் எடுத்து செலவு செய்வது தான்தனி சந்தோஷம். அப்படிபட்ட அருமையான நினைவுகளை தரும்ஏடிஎம் (ATM) குறித்து நீங்கள் அறிந்திராத சில சுவாரஸ்யமான உண்மைகளை இப்போது பார்ப்போம்.

உலகின் இரண்டாவது ஏடிஎம் எங்கு நிறுவப்பட்டது?

உலகின் இரண்டாவது ஏடிஎம் எங்கு நிறுவப்பட்டது?

உலகின் முதல் ஏடிஎம் மையம் எங்கு நிறுவப்பட்டது தெரியுமா? அதாவது கடந்த 1967-ம் ஆண்டு லண்டனின் என்ஃபீல்டில் இருக்கும் பார்க்லேஸ் கிளைக்குவெளியே தான் உலகின் முதல் ஏடிஎம் மையம் நிறுவப்பட்டது.

சரி உலகின் இரண்டாவது ஏடிஎம் எங்கு நிறுவப்பட்டது என்ற கேள்வி வரும். அதற்கு ஒரு பதில் உள்ளது. உலகின் இரண்டாவது ஏடிஎம் ஸ்வீடனில் தான் நிறுவப்பட்டது.

ஏடிஎம் பின் நம்பருக்கு  ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.

ஏடிஎம் பின் நம்பருக்கு ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.

ஏடிஎம் கார்ட் மற்றும் அதன் பின் நம்பரை எப்போதும் நாம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஏடிஎம்-களில் பணம் எடுப்பதற்கு நான்கு இலக்க பின் (PIN) நம்பர் தான் பயன்படுகிறது. இந்த நான்கு இலக்க பின் நம்பருக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.

அதாவது ஜான் ஷெப்பர்ட்-பரோன் என்பவர் ஏடிஎம்-களில் பணத்தை எடுப்பதற்காக கணக்கின் உரிமையாளருக்கு மட்டும் தெரிந்த எண்ணை பின்-ஆக பயன்படுத்த முடிவு செய்தார். குறிப்பாக இதற்குவேண்டி அவர் முதலில் ஆறு இலக்கங்களை கொண்ட வரிசையை தான் தேர்வு செய்திருந்தார்.

பின்பு இதுகுறித்து அவர் தனது மனைவி கரோலினாவுடன் ஆலோசித்துள்ளார். ஆனால் அப்போது அவரது மனைவியால் வெறும் 4 இலக்க எண்களை மட்டுமே நினைவில் வைத்துக் கொள்ள முடிந்ததது. எனவே இதன் காரணமாகத் தான் நாம் இப்போது ஏடிஎம்களில் 4 இலக்கங்களை கொண்ட பின்னை பயன்படுத்துகிறோம்.

  சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து

இப்போது கூட பாதுகாப்பு நோக்கங்களுக்காக சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகளில் உள்ள வங்கிகள் ஆறு இலக்கங்களையே பின்னாக (Pin) பயன்படுத்துகிறது.

 நம்ம கேரளாவில் இப்படியொரு ஏடிஎம் இருக்குதா?

நம்ம கேரளாவில் இப்படியொரு ஏடிஎம் இருக்குதா?

கேரளாவில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கேரளாவின் ஷிப்பிங் அண்ட் இன்லேண்ட் நேவிகேஷன் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான படகில் ஏடிஎம் இயந்திரம் ஒன்றை நிறுவியுள்ளது. குறிப்பாக இந்த படகு எர்ணாகுளத்திற்கும் Vypeen-க்கும் இடையே பயணிக்கிறது.

320 பொருட்கள் விற்பனை

320 பொருட்கள் விற்பனை

நீங்கள் நினைப்போது போல் ஏடிஎம்-களில் பணம் மட்டுமே வருவதில்லை. அதாவது தங்க முலாம் பூசப்பட்ட ஏடிஎம் இயந்திரம் அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பேலஸ் ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளது. இது தங்கத்தால் செய்யப்பட்ட 320 பொருட்களை விநியோகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலை வாய்ப்பு, கேம் அணுகலுடன் VI app: யூஸ் பண்ணா கேஷ்பேக் மற்றும் ரிவார்ட் காயின் உறுதி!வேலை வாய்ப்பு, கேம் அணுகலுடன் VI app: யூஸ் பண்ணா கேஷ்பேக் மற்றும் ரிவார்ட் காயின் உறுதி!

 வெள்ளிக்கிழமை தான் சம்பவம்

வெள்ளிக்கிழமை தான் சம்பவம்

வார இறுதி வேலை நாளான வெள்ளிக்கிழமை தான் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து அதிக பணம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த நாளில் தான் அதிக ஏடிஎம் மையங்களில் பணம் தீர்ந்து போவதாக ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

 பிரேசிலில் சூப்பரான வசதி

பிரேசிலில் சூப்பரான வசதி

நம்ம ஊர்களில் இப்போது கூட பின் நம்பர் பயன்படுத்தி பாதுகாப்பாக பணம் எடுக்கிறோம். ஆனால் பிரேசிலில், பாதுகாப்பான வங்கிப் பரிவர்த்தனைகளுக்கான பயோமெட்ரிக் வசதியை கொண்டு மட்டுமே ஏடிஎம்கள் இயங்கி வருகின்றன.

 அண்டார்டிகா

அண்டார்டிகா

உலகின் தனிமையான ஏடிஎம் எங்கு இருக்கிறது நினைக்கத் தோன்றும். ஆனால் அதற்கும் ஒரு பதில் உள்ளது. அதாவது உலகின் தனிமையான ஏடிஎம் அண்டார்டிகாவில் உள்ளது. அண்டார்டிகாவில் இருக்கும் அமெரிக்க ஆராய்ச்சி மையமான McMurdo நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

 உயரமான இடத்தில் உள்ள ஒரு ஏடிஎம்

உயரமான இடத்தில் உள்ள ஒரு ஏடிஎம்

உலகின் மிக உயராமன ஏடிஎம் எங்கு இருக்கிறது தெரியுமா? அது பாக்-சீனா எல்லையில் இருக்கும் Khunjerab Pass என்ற இடத்தில் தான் உள்ளது. குறிப்பாக இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 16,007 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஏடிஎம் பாகிஸ்தான் தேசிய வங்கியால் நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
9 Interesting Facts About ATMs You Didn't Know: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X