ஒரு ரூபாய் காயின் இருந்தால் மொபைல்போன் சார்ஜ் ஏறும்: மாணவி கண்டுபிடிப்பு.!

|

புதிய தொழில்நுட்பங்களுக்கு அனைத்து இடங்களிலும் கண்டிப்பா நல்ல வரவேற்ப்பு கிடைக்கும், மேலும் வருங்காலத்தில் தொழில்நுட்பங்கள் மிகப்பெரிய அளிவில் மனிதர்களுக்கு பயன்படும் என்றே கூறலாம்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை

தற்சமயம் மொபைல்போன்னின் பயன்பாடு அதிளவில் உள்ளது, எளிமையாக கூறவேண்டும் என்றால், மொபைல்போன் இல்லாமல் அணுவும் அசையாது என்றே கூறலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக நேரம் இந்த மொபைல்போன்களை தான் பயன்படுத்துகின்றனர்.

செய்திகள், தகவல்கள்

செய்திகள், தகவல்கள்

குறிப்பாக செய்திகள், தகவல்கள், விளையாட்டு, வங்கி சார்ந்த பணிகள், உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த மொபைல்போன் அருமையாக பயன்படுகிறது, அதாவது மக்களிடம் ஆறாம் விரலாக ஒட்டிக்கொண்டிருக்கும் மொபைல்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்றே கூறலாம்.

பட்ஜெட் விலையில் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த வோடபோன்.பட்ஜெட் விலையில் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த வோடபோன்.

காயின் மொபைல் சார்ஜர்

தொலைதூர பயணம் என்றதும் டூத் பிரஷ், டூத்பேஸ்ட் போன்றவற்றை எடுத்து வைக்கிறோமோ இல்லையோ, மொபைல்போன் சார்ஜர் போன்றவை தான் முதல்தேடலாக இருக்கிறது. ஒருவேளை நீங்கள் சார்ஜர் மறந்து விட்டால், உங்களுக்காவே காயின் மொபைல் பூத் மாதிரி காயின் மொபைல் சார்ஜர் கான்செப்டை கண்டுபிடித்துள்ளார் ஒரு மாணவி.

 மாணவி தர்ஷனா

மாணவி தர்ஷனா

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரோடு பாப்பன்பாளையத் அரசு நடுநிலைப்பள்ளி மாணவி தர்ஷனா என்பவர் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. இவர்தான் காயின் போட்டதும் சார்ஜ் ஏறும் மொபைல்போன் சார்ஜர் சிஸ்டத்தை ஆய்வில் வடிவமைத்துள்ளார்.

தர்ஷனா கூறியது

தர்ஷனா கூறியது என்னவென்றால், எனக்கு மிகவும் பிடித்த பாடம் அறிவியல், ஆசரியர் செய்து காட்டும் ஒவ்வொரு சோதனையும் ஆர்வமாக வீட்டிலும் செய்து பார்ப்பேன், காயின் பாக்ஸ் போன் எப்படி செயல்படுகிறது, என்பதைசோதித்தபோது இந்த ஐடியா வந்தது.

மொபைல்போன் சார்ஜர் சிஸ்டத்தை கண்டுபிடித்தேன்

ஏற்கனவே காயின் போட்டதும் பேப்பர், வாட்டர் பாட்டில், ஸ்வீட் பாக்ஸ் என பல பொருட்கள் வருவது போல் பலர் கண்டுபிடித்துள்ளனர்,இதையே கொஞ்சம் மாற்றியமைத்து, மொபைல்போன் சார்ஜர் சிஸ்டத்தை கண்டுபிடித்தேன்என அந்ந மாணவி கூறினார்.

காயின் எண்ணிக்கைக்கு ஏற்ப சார்ஜ் ஏறும்

காயின் எண்ணிக்கைக்கு ஏற்ப சார்ஜ் ஏறும்

அதாவது ஒரு ரூபாய் காயினை இந்த பாக்ஸில் போட்டதும், இதன் இணைப்பில் உள்ள சார்ஜரில் மொபைல்போன் செருகினால், குறிப்பிட்ட நேரம் சார்ஜ் ஏறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படி உள்ளே போடும்காயின் எண்ணிக்கைக்கு ஏற்ப சார்ஜ் ஏறும் நேரம் கூடிக்கொண்டே போகும் எனக் கூறியுள்ளார் அந்த மாணவி.

கிராமப்புறம், மலைப்பகுதிகளில்

கிராமப்புறம், மலைப்பகுதிகளில்

மேலும் வர்த்த ரீதியாக தொழில் துவங்க நினைபோருக்கு, இந்த கண்டுபிடிப்பு மிகவும் உதவியாக இருக்கும். பின்புகிராமப்புறம், மலைப்பகுதிகளில் நெடுதூரம் பயணம் செய்யும் சமயங்களில் இந்த காயின் சார்ஜர் பூத்தை அமைத்து விட்டால் பலருக்கும் மிக அருமையாக பயன்படும்.

அந்த மாணவி

குறிப்பாக நீண்ட பயணம் செய்வோருக்கு வசதியாக பஸ்களிலும் இதை பொருத்தலாம, மிக உதவியாக இருக்கும் என அந்த மாணவி கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Mobile phone charging student invention of a rupee coin : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X