Home
News

கனவிலும் நினைக்கவில்லை: ஜெப் பெசோஸ் உடன் விண்ணுக்கு செல்லும் 82 வயது பெண்- யார் இவர் தெரியுமா?

1960-களில் நாசாவின் விண்வெளி வீரர் பயிற்சி திட்டத்தை நிறைவேற்றிய 13 பெண்களில் ஒருவர் தற்போது அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உடன் விண்வெளிக்கு பயணிக்க உள்ளார்.

82 வயதான பெண் பைலட்

82 வயதான பெண் பைலட்

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 82 வயதான பெண் பைலட்டுடன் விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். இவர் 1961 முதல் 1963 ஆம் ஆண்டு வரை நாசாவில் விண்வெளி வீராங்கனை பயிற்சியை முடித்தவர். இவரது பாலினம் காரணமாக விண்வெளி வீரர் ஆக மறுத்துவிட்டார். அமெரிக்க ராணுவத் தளத்திலும், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திற்கும் ஏர் பாதுகாப்பு இன்ஸ்பெக்டராக இருந்தார். முதல் பெண் பயிற்றுவிப்பாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

82 வயதான பெண் வாலி ஃபங்க்

82 வயதான பெண் வாலி ஃபங்க்

இதையடுத்து ஜெப் பெசோஸ், அவரது தம்பி மார்க் உடன் 82 வயதான பெண் வாலி ஃபங்க் என்பவரும் செல்ல இருக்கிறார். இதன்மூலம் விண்வெளிக்கு பயணம் செய்யும் மிக வயதான நபர் என்ற பெருமையை வாலி ஃபங்க் பெற இருக்கிறார். இதுபோன்று பயணம் மேற்கொள்வேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என ஃபங்க் தெரிவித்தார்.

ப்ளூ ஆரிஜின் நிறுவனம்

ப்ளூ ஆரிஜின் நிறுவனம்

ஜெஃப் பெசோஸ் என்று கூறியதும் நினைவுக்கு வருவது அமேசான் நிறுவனம்தான். ஜெஃப் பெசோஸ் அடுத்தடுத்த இலக்கோடு அவரது விண்வெளி தொடர்பான ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ப்ளூஆரிஜின் நிறுவனத்தின் நியூ செப்பர்ட் விண்கலம் ஜூலை 20 ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது.

ஜூலை 20 ஆம் தேதி விண்ணுக்கு பயணம்

ஜூலை 20 ஆம் தேதி விண்ணுக்கு பயணம்

ஜூலை 20 ஆம் தேதி விண்ணுக்கு செல்லும் நியூசெப்பர்டு விண்கலத்தில் மொத்தம் 6 பேர் பயணம் மேற்கொள்ளலாம். இதில் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது தம்பி விண்வெளி பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். மீதமுள்ள இருக்கைகள் ஏலத்தில் விற்க முடிவு செய்யுப்பட்டது.

159 நாடுகளை சேர்ந்தவர்கள் போட்டி

159 நாடுகளை சேர்ந்தவர்கள் போட்டி

அதன்படி நடந்த ஏலத்தில் விண்வெளி செல்வதற்கான இருக்கைக்கு 159 நாடுகளை சேர்ந்தவர்கள் போட்டிப் போட்டனர். இந்த போட்டியில் ஏழாயிரத்து ஐந்நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். விண்வெளி பயணத்துக்கான டிக்கெட் ஏலம் விடப்பட்டதில் அதிகபட்சமாக ஒருவர் ரூ.205 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார். 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ.205 கோடிக்கு ஏலம் போனதாக மட்டும் ப்ளூஆர்ஜின் நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் ஏலம் எடுத்த நபரின் பெயர் தெரிவிக்கவில்லை.

ஆன்லைன் வர்த்தக தளங்களில் முன்னணி

ஆன்லைன் வர்த்தக தளங்களில் முன்னணி

மேலும் அடுத்தக்கட்டமாக நான்கு மற்றும் ஐந்தாவது பயணிகள் விவரம் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் உள்ள ஆன்லைன் வர்த்தக தளங்களில் முன்னணிகளில் ஒன்றாக இருப்பது அமேசான். இதன் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அடுத்த மாதம் 20 ஆம் தேதி ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரர் மார்க்கும் விண்வெளிக்கு பறக்க இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ப்ளூ ஆர்ஜின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ்

ப்ளூ ஆர்ஜின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ்

ப்ளூ ஆர்ஜின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ், தனக்கு ஐந்து வயதில் இருந்தே விண்வெளிக்கு பயணிக்க வேண்டும் என கனவு கண்டதாக குறிப்பிட்டார். ஜெஃப் பெசோஸ் அடுத்த மாதம் விண்வெளிக்கு பறக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இவரது அவரது சகோததர் மார்க்கும் செல்கிறார். இந்த பயணம் ஜூன் 20 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மேலே செலவழிக்கும் நான்கு நிமிடங்கள் உட்பட 10 நிமிடங்கள் பயணம் நீடிக்கும்.

கர்மன் கோட்டிற்கு மேலே நான்கு நிமிடங்கள்

கர்மன் கோட்டிற்கு மேலே நான்கு நிமிடங்கள்

கர்மன் கோட்டிற்கு மேலே நான்கு நிமிடங்கள் செலவழிக்க இருக்கின்றனர். கர்மன் கோடு என்பது பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையில் அங்கீகரிக்கப்பட்ட எல்லையை குறிக்கிறது. புதிய ஷெப்பர்ட் ராக்கெட் மற்றும் காப்ஸ்யூல் காம்போ ஆறு பயணிகளுடன் பூமியில் இருந்து 62 மைல்-க்கு மேலாக பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
82 Year Old Female Travelling in to Space with Amazon Founder Jeff Bezos
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X