Home
News

நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போனின் விலை என்ன?

By Super
நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போனின் விலை என்ன?

நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக ஒரு தகவல் வெளியானது. இந்த செய்தி இந்திய மொபைல் மார்கெட்டையே பரபரபாக்கியது என்று கூட சொல்லலாம். ஏனென்றால் 41 மெகா பிக்ஸலில் கேமராவா? என்று அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இப்போது இந்த ஸ்மார்ட்போனின் புதிய தகவல் என்னவென்றால், பியூர்வியா-808 ஸ்மார்ட்போன் ரூ.29,999 விலையில் இந்தியாவில் கிடைக்கும் என்று ஒரு தகவல் வெளியானது. நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999 அல்ல என்று நோக்கியா தெரிவித்துள்ளது.

இந்த ஸ்மார்டபோன் 4.0 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். அதோடு அமோலெட் தொழில் நுட்பம் கொண்ட தொடுதிரையையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட திரையினை மட்டும் அல்லாமல் இந்த திரையினை பாதுகாக்க இதில் கொரில்லா கிளாஸும் பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் சிறப்பான பாதுகப்பினையும் பெற முடியும். நோக்கியா பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம்-11 பிராசஸரையும் கொண்டுள்ளது. இப்படி இந்த ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பத்தினை பற்றி சொல்லி கொண்டே போகலாம். இந்த ஸ்மார்ட்போன் 29,999 விலையில் இருக்கும் என்ற தகவல் இப்போது மறுக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் இந்த ஸ்மார்ட்போன் விலை விவரத்தினை பற்றிய தகவல்களை நோக்கியா இதுவரை வெளியிடவில்லை. இதனால் நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போனின் விலை 30 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதனால் இதன் சரியான விலை கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X