80% வாகன ஓட்டிகள் மாறிட்டாங்க., அடிக்கடி சுங்கச்சாவடியில் பயணிப்பவரா நீங்கள்: இதோ பாஸ்டேக் விவரம்!
அனைத்து சுங்கச்சாவடிகளில், பிப்ரவரி 16-ம் தேதி முதல் பாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வருகிறது. குறிப்பாக பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுங்கச்சாவடியில் நீண்ட வரிசை
அதாவது நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொள்ளும்போது சுங்கச்சாவடியில் நீண்ட வரிசைகளில் நீங்கள் காத்திருப்பது என்பது சற்று எரிச்சலை உருவாக்கக்கூடிய விஷயம் தான். அதுவும் குறிப்பாக நீங்கள் வார இறுதி பயணத்தில் இருக்கும்போது இந்த எரிச்சல் இரட்டிப்பாக மாறக்கூடும். இந்த சிக்கலை நிவர்த்தி செய்யவே இந்திய அரசு சமீபத்தில் கட்டாய பாஸ்டேக் பயன்முறையை அறிமுகம் செய்தது.

பாஸ்டாக் கணக்கிலிருந்து கட்டணம் கழிக்கப்படும்
மின்னணு கட்டண வசூல் ஃபாஸ்டேக் என்பது ஒரு மின்னணு கட்டண வசூல் முறையாகும், இப்போது இந்த சேவையை இந்தியாவின் ஒவ்வொரு பெரிய வங்கியும் வழங்கிவருகிறது. நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் பொருத்தப்பட்ட எந்தவொரு வாகனமும் சுங்கச்சாவடியில் வாகனத்தை நிறுத்தாமல் கட்டணத்தை செலுத்தி டோல் கேட்டை எளிதாகக் கடந்து செல்ல முடியும். மேலும், கட்டணம் உங்கள் பாஸ்டாக் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, சுங்கச்சாவடிகளில் உள்ள அனைத்து லேன்களும் நேற்றுமுதல் பாஸ்டேக் லேன்களாக மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாஸ்டேக் பெற்று செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நீங்கள் பாஸ்டேக் எடுக்கவில்லை என்றால் உடனடியாக எடுத்துவிடுவது நல்லது. பாஸ்டேக் வங்கி, ஆன்லைன் சேவைகள் மூலம் ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் பாஸ்டேக் ஸ்டிக்கர் விற்பனைக்கு தனியாக சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி 80 சதவீத வசூல் சுங்கச்சாவடியில் பாஸ்டேக் மூலமாக நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 80 சதவீத வாகனங்களின் வசூல் சுங்கச்சாவடியில் பாஸ்டேக் மூலமாகவே நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாடு முழுவதும் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சுமார் 570 நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளையும், தமிழகத்தில் இருக்கும் 48 சுங்கச்சாவடிகளையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி சுற்றி சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் தங்களது சொந்த கார்களுக்கு மாதம் ரூ.275 செலுத்தி அட்டை பெற்றுக் கொண்டால். அந்த சுங்கச்சாவடியில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications