மைக்ரோசாஃப்ட்டிடம் 'ஷொட்டு' வாங்கிய பாகிஸ்தான் சிறுவன்!

Posted By: Staff
மைக்ரோசாஃப்ட்டிடம் 'ஷொட்டு' வாங்கிய பாகிஸ்தான் சிறுவன்!

8 வயது நிரம்பிய பாகிஸ்தானிய சிறுவன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தேர்வில் தொழில் நுட்ப வல்லுநர் என்ற சான்றிதழை பெற்றிருக்கிறார்.

இப்பொழுது இருக்கும் குழந்தைகள் கருவறையிலயே கம்ப்யூட்டர் படிப்பை முடித்துவிடுகிறார்கள் போலும். ஏனெனில் 8 வயது நிரம்பிய சிறுவன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மூலம மேற்கொள்ளப்பட்ட தேர்வை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

தொழில் நுட்ப வல்லுநர் என்ற சான்றிதழையும் பெற்றுள்ளார் என்ற இந்த செய்தி, இன்றைய தலைமுறை குழந்தைகள் எந்தளவு தொழில் நுட்ப சாதனங்களின் மேல் பற்று கொண்டிருக்கிகறார்கள் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது.

ஒருங்கிணைந்த இணையதள நெறிமுறை பிரிவில் (இன்டர்நெட் புரோட்டோகால்) மற்றும் டொமெய்ன் நேம் சிஸ்டம்ஸ் ஆகிய பிரிவுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய கணினி தொழில்நுட்ப தேர்வில், 8 வயது நிரம்பிய ஷஃபே தோபானி என்ற இவருக்கு நிறைஞர் சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

இவரது தந்தை ஷாவ் தோபானி, தொழில் நுட்பம் சார்ந்த ஒரு நிறுவனத்தில் பணி புரிகிறார். தனது மகன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் நிறைஞர் சான்றிதழை பெற்றது மிக பெருமையான ஒரு விஷயம் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஷஃபே தோபானி, 13 மாதங்கள் இந்த தேர்விற்காக தீவிரமாக பயின்று வந்ததாகவும் இவரது தந்தை தெரிவித்திருக்கிறார்.

தொழில் நுட்பம் சார்ந்து இவருக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக இந்த தேர்வில் 91 சதவிகிதம் பெற்று, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் நிறைர் சான்றிதழையும் பெற்றிருப்பது இந்த செய்தியை படிப்பவர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒன்று.

இத்தகைய சிறிய வயதில் தொழில் நுட்பம் சம்மந்தமாக நிறைஞர் சான்றிதழ் பெற்றவர்கள் இருப்பது சாத்தியமில்லை என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி தாமஸ் ஜென்சன் தெரிவி்த்திருக்கிறார்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot