சோலார் ஹீட்டர் கண்டுபிடித்த 8வயது சிறுமிக்கு நியூக்லியர் சயின்ஸ் விருது!

|

மெக்ஸிகோவின் சியாபாஸ் நகரைச் சேர்ந்த 8 வயது சிறுமியான ஸ்சிட்சில் குவாடலூப் குரூஸ், முற்றிலும் சூரிய சக்தி மூலம் இயங்கி தண்ணீரை சூடாக்கும் சாதனத்தை உருவாக்கியதற்காக UNAM இன் அணுசக்தி அறிவியல் நிறுவன விருதை பெற்றுள்ளார்.

சோலார்ஹீட்டர் கண்டுபிடித்த 8வயது சிறுமிக்கு நியூக்லியர் சயின்ஸ் விருது

இந்த சாதனம் மறுசுழற்சி செய்யப்பட்ட மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறது. சிறுமியின் இந்த கண்டுபிடிப்பு முதல்தர உலக நாடுகளுக்கு தேவையற்றதாகத் தோன்றினாலும், அவரது சமூகத்தில்சூடான நீரினை பெறுவதற்கு ஒரே ஆதாரம் மரத்துண்டுகளை எரிப்பது மட்டுமே. இது சுற்றுச்சூழலுக்கு புகையை வெளியிட்டு மாசு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் காடுகள் அழிப்பிற்கும் வழிவகுக்கும்.

சோலார்ஹீட்டர் கண்டுபிடித்த 8வயது சிறுமிக்கு நியூக்லியர் சயின்ஸ் விருது

அறிவியல் செயல்திட்டங்கள் மற்றும் போட்டிகளில் பங்கேற்பதை பெரிதும் விரும்பும் இந்த சிறுமி, தனது தொழில்நுட்ப அறிவை விரைவாக பயன்படுத்தி, முதலில் தனது வீட்டிலும் பிறகு உலகம் முழுவதும் மாற்றத்தை கொண்டுவருபவர்.

சூரிய சக்தி மூலம் இயங்கும் இந்த நீர் சூடாக்கி (சோலார் ஹீட்டர்), தண்ணீரை சூடாக்க மரத்தை நம்பியிருக்கும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உதவும் திறனைக் கொண்டுள்ளது. குளிர்கால காலைவேளையில் பயனாளிகளுக்கு ஒரு சூடான குளியல் அனுபவத்தை கொடுக்கும் அதேசமயம் இது சுற்றுச்சூழலையும் காப்பாற்றும்.

சோலார்ஹீட்டர் கண்டுபிடித்த 8வயது சிறுமிக்கு நியூக்லியர் சயின்ஸ் விருது

அவரது குடும்பத்தினர் இந்த சாதனத்தை தங்கள் வீட்டின் கூரையில் நிறுவியுள்ள நிலையில், இது அவர்களது வீட்டிற்கு தேவையான சூடான நீரை வழங்க உதவுகிறது. ஆனால் இந்த புத்திசாலி சிறுமி எப்போதும் மிக விரைவாக குளித்துமுடித்து விடுகிறார். ஏனென்றால் அவளுடைய சிறிய சகோதரனுக்கும் குளிக்க சிறிது சூடான தண்ணீர் தேவை என்பதால்.

சோலார்ஹீட்டர் கண்டுபிடித்த 8வயது சிறுமிக்கு நியூக்லியர் சயின்ஸ் விருது

இது அச்சிறுமியின் 8 வயதில் உள்ள புத்திசாலித்தனம் தான். இதுபோன்ற புதுமையாக சிந்திக்கும் மற்றும் அக்கறையுள்ள குழந்தைகள் நம்மை சுற்றியிருக்கும் போது நமது எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.

நாமும் இச்சிறுமியின் தொழில்நுட்ப அறிவை வியந்து பாராட்டுவோம்.

Source: Alfredo Alvarez, Imagen Television

Best Mobiles in India

English summary
8 Year-Old Mexican Girl Wins Nuclear Sciences Prize For Inventing A Solar Water Heater: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X