Home
News

திடீரென வெடித்து சிதறிய மொபைல் போன்.! பறிபோன 8-வயது சிறுமியின் உயிர்.! நடந்தது இதுதான்.!

இப்போது அறிமுகமாகும் புதிய புதிய ஸ்மார்ட்போன்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவருகின்றன. குறிப்பாக சீன நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு இந்தியாவில் கம்மி விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன. ஆனால் இந்த அதிநவீன ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக சார்ஜ் செய்து கொண்ட ஸ்மார்ட்போனில் கேம் விளையாடுவது, வீடியோ பார்ப்பது போன்றவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்நிலையில் கேரளாவில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலியான சம்பவம் மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென வெடித்து சிதறிய மொபைல் போன்.! பறிபோன 8-வயது சிறுமியின் உயிர்.!

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தில் இடத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமார் என்பவரின் மகள் ஆதித்யா ஶ்ரீ (8 வயது சிறுமி) நேற்று இரவு 10.30 அளவில் மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மொபைல் போன் வெடித்துச் சிதறியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்போன் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அந்த சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். பின்பு இந்த சிறுமியின் அம்மா கூட்டுறவு வங்கியின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

அதேபோல் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குழந்தைகளிடம் நீண்ட நேரம் போன் கொடுக்க வேண்டாம் என்று பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றர். அதேபோல் போன் வெடிப்பதற்கான காரணம் என்னவென்றால். செல்போனில் இருக்கும் பேட்டரி மட்டும்தான். பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது. அப்போது செல்போனும் தானாக வெடிக்கிறது. பேட்டரி வெடிப்பதற்குக் காரணம், சார்ஜர் மட்டும்தான். ஒரு மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும்.

ஆனால் வேறு ஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது. எடுத்துக்காட்டாக, குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது. இதனால் சார்ஜ் சரியாக நிக்காமல் அடிக்கடி பேட்டரி லோ ஆகும்.

அதன் காரணமாக மொபைல் போன் நீண்ட நேரமோ அல்லது இரவு முழுவதுமோ சார்ஜ் போடும் நிலை ஏற்படுகிறது. அப்படி பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே
வருகையில் ஒருகட்டத்தில் வெடித்து சிதறுகிறது. எனவே மொபைலுக்கு என்று வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டும் சார்ஜ் போடுவது மிகவும்நல்லது.

அதேபோல் குறைந்த விலை போன்களை தேர்வுசெய்வதை விட, போன்களில் இருக்கும் பாதுகாப்பு அம்சம், சிப்செட், பேட்டரி உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு அதன்பின்பு போன்களை வாங்குவது மிகவும் நல்லது. விலை சற்று உயர்வாக இருந்தாலும் நிறைய பாதுகாப்பு அம்சங்களை கொண்ட போன்களை வாங்குவது நல்லது.

அதேபோல் சார்ஜ் போட்டுக்கொண்ட போன் பேசுவது, வீடியோ பார்ப்பது, கேம் விளையாடுவது போன்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும். அதாவது போனை
முழுவதும் சார்ஜ் போட்ட பின்பு அதை எடுத்து பயன்படுத்து நல்லது.

Best Mobiles in India

English summary
8-year-old girl died when her cell phone exploded in Kerala : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X