உங்கள் இன்டர்வியூ மற்றும் வேலையை உறுதி செய்யும் 8 வலைத்தளங்கள்.!

|

"முருகா.. எனக்கொரு 'வேல' கொடு.. 'வேல' கொடு" என்று கதறக்கதற வேண்டினாலும் கூட வேலை ஒன்று கிடைக்காத குதிரைக்கொம்பு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்பதை ஒற்றுக்கொள்கிறேன். ரோட்டில் இறங்கி தேடினால் கிடைக்காதது ஒன்றுமே இல்லை என்பது கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம், எங்கே இறங்கி வேலை ஒன்று தேடி வாங்க சொல்லுங்கள் பாப்போம்.!? - என்ற குமுறல்களையும் ஏற்றுக்கொள்கிறேன்.!

மேலோட்டமாக யோசிப்பின் கூட, ஒரு மூட நம்பிக்கை நம்முள் படர்ந்து கிடக்கிறது என்பது புரியும். அது - முட்டாள்களுக்கும், அதிர்ஷ்டம் இல்லாதவர்களுக்கும் வேலை கிடைக்காது புத்திசாலிகளுக்கும் கொடுத்து வைத்தவர்களுக்கு மட்டுமே இங்கு வேலை, மரியாதையை, பணம், புகழ் எல்லாம். அப்படி கிடையவே கிடையாது நண்பர்களே.. வேலை தேடல் என்று வந்துவிட்டால் யார் ஒருவரை விட ஒருவர் அதிக புத்திசாலி என்பதும், டி20 கிரிக்கெட் போட்டி போல யார் அன்றைய பொழுதில் திறம்பட செயல்படுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி.!

அப்படி திறம்பட செயல்பட நீங்கள் தயாராக இருப்பின் இன்றே செயல்பாட்டை தொடங்குங்கள். ஏனெனில் உங்களுக்கான வேலை எங்கு எப்படி காத்திருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. ஆக இருக்கும் அத்தனை வழிகளையும் பயன்படுத்துங்கள். இங்கே உங்கள் இன்டர்வியூ மற்றும் வேலையை உறுதி செய்யும் 10 வலைத்தளங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. அனைத்திலும் உங்களின் ரெஸ்யூமை பதிவிடுங்கள்.!

நௌக்ரி.கம் (Naukri.com)

நௌக்ரி.கம் (Naukri.com)

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வேலைவாய்ப்பு வலைத்தளம் ஆகும். இது அனைத்து துறைகளிலும் வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே மிகப்பெரிய வலைப்பின்னல் கொண்டுள்ளது.

மான்ஸ்டர் (Monster)

மான்ஸ்டர் (Monster)

இது மற்றொரு முக்கியமான வேலை தேடு வலைத்தளமாகும்.இந்த மான்ஸ்டர்.காமில் சமமான மற்றும் விரிவான நெட்வொர்க் வேலை வழங்குநர்கள் மற்றும் தேடுபவர்கள் உள்ளனர். இந்த தளம் அனைத்து வழிகளிலும் வேலை தேடுபவர்களுக்கு வேலைகளை வழங்குகிறது, மேலும் தகுதிவாய்ந்த திறன் கொண்ட செட்களை சரியான நபர்களுக்குக் காண்பிப்பக்கவும் தவறுவதில்லை.

டைம்ஸ் ஜாப்ஸ் (Times Jobs)

டைம்ஸ் ஜாப்ஸ் (Times Jobs)

டைம்ஸ் குழுவின் துணை நிறுவனமான இந்த தளம், இந்தியாவின் மிக உயர்ந்த வலைத்தளங்களில் ஒன்றாகும். அனைத்து துறைகளிலும் வேலை தேடுவோர் மற்றும் வேலை வழங்குநர்களுக்கு இது சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.

நௌக்ரிஹப் (NaukriHub)

நௌக்ரிஹப் (NaukriHub)

இந்த தளம் வட இந்திய மாநிலங்களில் புகழ் பெற்ற ஒன்றாகும். இந்த தளம் குறிப்பிட்ட தேவைகள் தொடர்புடைய குறிப்பிட்ட வேலை வழங்குநர்களின் மீது அதிக கவனம் செலுத்துகிறது. பல வேலைத் தளங்கள் இந்த தளத்தில் பதிவாகியுள்ளன.

கேரியர்ஜெட் (CareerJet)

கேரியர்ஜெட் (CareerJet)

வேலைகள் தேடும் தள துறையில் ஒரு கணிசமான புரட்சியை உண்டாக்கிய தளம் என்று இதனை குறிப்பிடலாம். பயன்படுத்த மிகவும் எளிதான இந்த தளத்தில் பல்வேறு திறன்பட்ட மக்களுக்கு வேலைகள் குவிந்துள்ளது.

கேரியர்ஏஜ் (CareersAge)

கேரியர்ஏஜ் (CareersAge)

ப்ரெஷர்களுக்கு சிறந்த வேலை தேடு தளம் இது. உடன் அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் பல்வேறு வேலைகள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது. இந்த தளம் 1999-ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிளிக்ஜாப்ஸ் (ClickJobs)

கிளிக்ஜாப்ஸ் (ClickJobs)

இந்த வலைத்தளம் நீங்கள் விரும்பும் நபருடன் தகவல்களை வழங்க தனிப்பயனாக்க அனுமதியை வழங்குகிறது. மேலும் இந்த தளத்தில் உங்கள் சுயவிவரத்தை தரவுத்தளத்தில் வைத்திருக்க உதவுகிறது மற்றும் நோக்கமாகக் கொண்ட தகவலை வெளியிடவும் உதவுகிறது.

ப்ரெஷர்ஸ்வேல்ர்ட் (FreshersWorld)

ப்ரெஷர்ஸ்வேல்ர்ட் (FreshersWorld)

ப்ரெஷர்களுக்கு சிறந்த வேலைகளை வழங்கும் இணையதளங்களில் இதுவும் ஒன்றாகும். பயிற்சி பெற்ற அனுபவமுள்ள வல்லுநர்களுக்கும் இந்த தளம் வாய்ப்புகளை வழங்குகிறது. இண்டர்நெட் மூலம் சரியான நபர்களுடன் இணைய இந்த தளம் உதவுகிறது, உங்கள் விருப்பப்படி தொழில் துறையில் கோரிக்கைகளையும் நீங்கள் பெறலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

உங்கள் ரெஸ்யூமில் இந்த 9 திறன்கள் இருந்தால் உங்களுக்கு வேலை நிச்சயம்.!

Best Mobiles in India

Read more about:
English summary
8 of the Best Job Search Websites (India). Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X