இந்த 8 விஷயங்களில் ஒன்று உங்கள் போனிலிருந்தால் கூட ஆபத்து.. உடனே செக் செய்து சரி பண்ணுங்க..
மால்வேர் (Malware) தாக்குதலுக்கு பலியாகும் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையில், ஆண்ட்ராய்டு (Android) சாதனங்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 100-ல் 90 சதவீத ஆண்ட்ராய்டு சாதனங்கள் மால்வேர் தாக்குதலால் பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளது என்கிறது டெக் வட்டாரம்.
90 சதவீத அன்றொஇட் ஸ்மார்ட்போன்கள் எல்லாம் மால்வேர் தாக்குதலுக்கு பலியாக வாய்ப்புள்ளது என்றால், உங்கள் போனின் நிலமை என்னவாக இருக்கும் என்று சிந்திக்கிறீர்களா? அப்படியானால், இந்த பதிவு உங்களுக்கானது தான்.. காரணம், மால்வேர் தகுதலால் பாதிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் சாதனங்களை கண்டுபிடிக்க உதவும் 8 விதமான அறிகுறிகளை பற்றி தான் இந்த பதிவில் விரிவாக பார்க்கப்போகிறோம்.

உண்மையில், உங்களிடம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இருக்கிறது என்றால், அதை ஹேக்கர்களால் அணுக முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ளதாக என்று அறிந்துகொள்ள வேண்டுமா? உங்கள் ஸ்மார்ட்போனின் உண்மை நிலமையை சில எளிய தடயங்கள் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும்.
உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை குறிப்பிட்ட சில நுணுக்கமான மாற்றங்களை வைத்து அவற்றை எளிமையாக கண்டறிய முடியும். பெரும்பாலான மக்கள் இப்போது தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களில் தங்கள் முக்கியமான தகவல்களைச் சேமித்து வைத்திருக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு, உங்கள் Android சாதனங்களில் எந்த தீம்பொருளாவது இருக்கிறதா என்பதை அறிந்துகொள்வது முக்கியம்.
தற்போதைய சூழ்நிலையில், சைபர் கிரிமினல்கள் மற்றும் ஹேக்கர்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் வைத்திருக்கும் சொந்த தனிப்பட்ட தகவலை அணுகவும் வாய்ப்புளள்து. அப்படி அணுகினால், அவர்கள் உங்களை மிரட்டி பணம் பறிக்கவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக உங்கள் போனில் இருக்கும் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தி உங்களை பிளாக்மெயில் செய்வதற்கும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மால்வேர்பைட்ஸ் எனப்படும் சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒருவர் தங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கவனிக்க வேண்டிய எட்டு அறிகுறிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளது. இந்த 8 அறிகுறிகளை வைத்து எப்படி, ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பாதிப்படைந்து வருகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

1. உங்கள் போனில் திடீர் தீடீரென தோன்றும் பாப்-அப் மெசேஜ்கள் மால்வேர் தாக்குதலில் அறிகுறியாக இருக்கலாம்.
2. உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனின் டேட்டா பயன்பாட்டில் சீரற்ற அதிகரிப்பு இருந்தால், உங்கள் சாதனம் மால்வேரால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
3. உங்கள் மொபைல் பில்லில், உங்களுக்கே தெரியாமல் சில வித்தியாசமான கட்டணங்களை கண்டால், உங்கள் போனை ஹேக்கர்கள் அணுகி இருக்க வாய்ப்புள்ளது.
4. உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள் எத்தகையது.
5. சம்பந்தமே இல்லாமல், உங்கள் போனிற்கு திடீர் அழைப்புகள் அல்லது மெசேஜ்கள் வந்தால் உங்கள் சாதனம் மால்வேர் தாக்குதலுக்கு பலியாகி இருக்க வாய்ப்புள்ளது.
6. வழக்கத்திற்கு மாறாக, உங்கள் ஸ்மார்ட்போன் வேகமாக அதிக வெப்பமடைகிறது என்றால், உங்கள் போனில் எதோ ஒரு சிக்கல் இருக்கிறதென்று அர்த்தம்.
7. உங்களுக்கே தெரியாமல், உங்கள் மொபைலில் முன்-பின் தெரியாத ஸ்மார்ட்போன் ஆப்ஸ்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால், உங்கள் போன் பதிப்படைந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
8. இறுதியாக, உங்கள் போனின் வைஃபை அல்லது பிற இணைப்புகள் உங்க அனுமதியின்றி தானாகவும் சொந்தமாகவும் செயல்படுகின்றன என்றால் கூடுதல் கவனம் தேவை மக்களே.
இந்த அறிகுறிகளில் ஒன்று அல்லது சில இருப்பது உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தீம்பொருள் இருப்பதாக அர்த்தமில்லை என்றாலும், அதை நீங்கள் பொருட்படுத்தாமல் உடனே கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) போன்ற சரிபார்க்கப்பட்ட இடங்களிலிருந்து எப்போதும் மொபைல் ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்து பராமரிப்பது நல்லது. உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் ஏதேனும் மர்மமான செயலை நீங்கள் கண்டால்,உடனே பாஸ்வோர்டை மாற்ற வேண்டும்.


Click it and Unblock the Notifications








