Home
News

5G வருது டோய்.. DoT அதிகாரி உடைத்த உண்மை.. இந்த தேதியை குறிச்சு வச்சிக்கோங்க.. BSNL 4G-ல் குவிந்த கூட்டம்!

டாட் (DoT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொலைத்தொடர்புத் துறையை (Department of Telecommunications) சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி இனிஷியல் லான்ச் ஃபேஸிற்கு கிடைத்துள்ள வெற்றி மற்றும் அதன் வழியிலான 5ஜி அறிமுகம் குறித்த விவரங்கள் பகிர்ந்துள்ளார்.

பிஎஸ்என்எல்-ன் 4ஜி இனிஷியல் லான்ச் ஃபேஸின் (BSNL 4G Initial Launch Phase) கீழ், பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய வட இந்தியப் பகுதிகள் முழுவதும், பிஎஸ்என்எல் 4ஜி சேவையின் கீழ் 800,000 சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர்.

BSNL 5G வருது டோய்.. DoT அதிகாரி உடைத்த உண்மை!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ( Tata Consultancy Services - TCS) மற்றும் அரசாங்கத்தின் டெலிமேட்டிக்ஸ் டெவலப்மெண்ட் மையம் (Centre for Development of Telematics) ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த உள்நாட்டு நெட்வொர்க்கை தற்போது 8 லட்சம் பேர் பயன்படுத்துவதாக டாட்-ஐ சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிஎஸ்என்எல் 4ஜி-க்கு கிடைத்துள்ள வரவேற்ப்பானது 5ஜி அறிமுகத்தை (BSNL 5G Launch) துரிதப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார் "ஆகஸ்ட் மாதத்திற்குள் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் நெட்வொர்க்கின் மையப்பகுதி நிறுவப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது நாடு தழுவிய திருவிழா காலத்துடன் ஒத்துப்போகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த 12 மாதங்களுக்குள் 5ஜி சேவைகளும் அறிமுகப்படுத்தப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.

BSNL 5G வருது டோய்.. DoT அதிகாரி உடைத்த உண்மை!

பிஎஸ்என்எல் நிறுவனமானது 3,500-க்கும் மேற்பட்ட 4ஜி டவர்களை நிறுவியுள்ளது. இந்த எண்ணிக்கை 20,000 டவர்களை எட்டியவுடன் இந்தியா முழுவதும் முழு அளவிலான.. வணிக ரீதியிலான 4ஜி அறிமுகம் (Commercial 4G launch) நடக்கும். கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் ஆன அஷ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw), பிஎஸ்என்எல்-ன் 4ஜி, 5ஜி அறிமுகம் குறித்த சில விவரங்களை வெளிப்படுத்தி இருந்தார்.

அப்போது அவர், அடுத்த 12 முதல் 24 மாதங்களுக்குள் 100 மில்லியன் 4ஜி வாடிக்கையாளர்களை பெறுவதே பிஎஸ்என்எல்-ன் நோக்கமாகும், இதற்காக நாடு முழுவதும் 100,000 டவர்களை அமைக்கும் திட்டத்தையும் கொண்டுள்ளோம் என்று கூறி இருந்தார். இருப்பினும், உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட 4ஜி நெட்வொர்க்கில் (Domestically built 4G network) ஏற்பட்ட தொடர்ச்சியான சிக்கல்களின் விளைவாக.. நாடு முழுவதுமான வெளியீடு தாமதமாகி கொண்டே போகிறது.

BSNL 5G வருது டோய்.. DoT அதிகாரி உடைத்த உண்மை!

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்.. டாட் அதிகாரிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் பிஎஸ்என்எல் 5ஜி அறிமுகமாகி விடும் என்று நம்பினர். ஆனால் தற்போது இது அடுத்த ஆண்டு இறுதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது அதன் 5ஜி நெட்வொர்க் விரிவாக்கத்தை ஒரு வருடத்தில் "கிட்டத்தட்ட" முடித்துவிட்டது.

பிப்ரவரி 2024 நிலவரப்படி, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் (MNTL) ஆகிய இரண்டும் 86.9 மில்லியன் சந்தாதாரர்களை தன்வசம் கொண்டுள்ளன. அவர்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் 4ஜி சேவைகளை பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணிக்கை ஒரு சரிவாகும். இதற்கு முன்பாக இருந்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 90 -100 மில்லியன் ஆக இருந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரியில், இந்நிறுவனம் 94.1 மில்லியன் சந்தாதாரர்களுடன் 9.36 சதவீத சந்தை பங்கை கொண்டிருந்தது.

சந்தாதாரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர் சங்கம் ஆனது, வோடபோன் ஐடியாவின் 4ஜி நெட்வொர்க்கை (Vodafone Idea 4G Network) பயன்படுத்தி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவைகளை வழங்க அனுமதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. ஆனால் இந்த கோரிக்கை தற்போது வரையிலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது போல் தெரியவில்லை | Source: www.business-standard.com

More from GizBot

Best Mobiles in India

English summary
8 Lakh Customers Joined under BSNL Initial 4G Launch 5G Launch in Next 12 Months
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X