இந்த மொபைல் போன் அம்சங்கள் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

|

நம்முடன் எப்போதும் இருக்கும் மொபைல் போன்களில் நாம் அறியாத, நமக்கு தெரியாத பல்வேறு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. சில அம்சங்கள் நம் அன்றாட வாழ்வில் பயன்தரக்கூடியதாக இருக்கிறது. அவற்றில் சிலவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

இன்ஃப்ராரெட் ரேடியேஷன்

இன்ஃப்ராரெட் ரேடியேஷன்

உங்களது டி.வி. ரிமோட் சரியாக இயங்குகிறதா என்பதை மிக சுலபமாக சரிபார்க்க முடியும். இதற்கு ஸ்மார்ட்போன் கேமரா முன் டி.வி. ரிமோட்டை இயக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது டி.வி. ரிமோட் சீராக இயங்கினால் கேமராவில் சிவப்பு நிற வெளிச்சம் தெரியும்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

பயணங்களின் போது புகைப்படங்களை எடுக்க நேரமில்லாதவர்கள், பானரோமிக் புகைப்படங்களை எடுக்கலாம். பின் மொபைல் போனின் கேமராவில் பானரோமிக் மோடில் புகைப்படங்களை எடுக்கலாம்.

ட்வின்

ட்வின்

புகைப்படங்களில் பானாரோமிக் மோட் சென்று உங்களை நீங்களே இரட்டை தோற்றத்தில் படமாக்கிக் கொள்ளலாம். இதற்கு பானரோமிக் மோடில் உங்களை படம் பிடித்துக் கொண்டு பின் கேமராவை நண்பரிடம் கொடுத்து உங்களை படம்பிடிக்க சொல்லுங்கள். இவ்வாறு செய்யும் போது ஒரே ஃபிரேமில் உங்களுடன் நீங்கள் இருக்கும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

கெஸ்ட் மோட்

கெஸ்ட் மோட்

உங்களது மொபைலை மற்றவர்களிடம் வழங்கும் போது, ஸ்மார்ட்போனினை கெஸ்ட் மோடில் வைக்கலாம். இதை செயல்படுத்த ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- உங்களது ப்ரோஃபைல் மற்றும் ஆட் கெஸ்ட் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

ஸ்மார்ட்போன் கண்ணாடி

ஸ்மார்ட்போன் கண்ணாடி

பார்வையில் குறைபாடு கொண்டிருப்பவர்கள் ஸ்மார்ட்போன் கேமராவில் சூம்-இன் செய்து காட்சிகளை அருகில் பார்க்கலாம். விளையாட்டு போட்டிகளை நேரில் பார்க்கும் போது இது பயனுள்ளதாக இருக்கும்.

ஆட்டோ அன்லாக்

ஆட்டோ அன்லாக்

ஸ்மார்ட்போனில் ஸ்மார்ட் அன்லாக் ஆப்ஷன் மூலம் சேஃப் ஏரியாஸ் ஆப்ஷனை செயல்படுத்திக் கொண்டால், ஸ்மார்ட்போன் தானாக அன்லாக் ஆகும்.

ஸ்மார்ட்போன் ரேடியேஷன்

ஸ்மார்ட்போன் ரேடியேஷன்

ஸ்மார்ட்போனின் நீல நிற மின்விளக்கு கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். இந்த பிரச்சனையை சரி செய்ய சில அம்சங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு நீல நிற மின்விளக்கை குறைக்கும் ஃபில்ட்டர்கள் ஸ்மார்ட்போனில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனை செயல்படுத்த அதற்கென செயலிகளை டவுன்லோடு செய்யலாம்.

அல்ட்ராவைலட் ஃபிளாஷ்லைட்

அல்ட்ராவைலட் ஃபிளாஷ்லைட்

ஃபிளாஷ் செட்டிங் கொண்ட ஸ்மார்ட்போனை எடுத்து அதில் நீலம் மற்றும் பர்ப்பிள் நிற ஸ்டிக்கி டேப் எடுத்துக் கொள்ளவும். இனி ஒருபக்கத்தில் டிரான்ஸ்பேரன்ட் டேப் ஃபிளாஷ் மீது ஒட்ட வேண்டும். அடுத்து அதன் மீது நீல நிற மார்க்கர் கொண்டு நிறம் பூசவும். இதன் மீது மற்றொரு டேப் ஒட்டி அதன் மீது மீண்டும் நீல நிறம் பூசவும். முதல் லேயரில் பர்ப்பிள் நிறம் பூசப்பட்டிருக்க வேண்டும். இருள் நிறைந்த சூழல்களில் ஃபிளாஷ்லைட் ஆன் செய்யும் போது அல்ட்ராவைலட் எஃபெக்ட் பார்க்க முடியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
8 Interesting Features of Our Phones That Will Be Useful for Anyone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X