Android ஸ்மார்ட்போன் பயனர்கள் உடனே டெலிட் செய்ய வேண்டிய 8 ஆபத்தான ஆப்ஸ்கள்.!
கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் சில ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக இதுபோன்ற ஆப்ஸ்கள் நமது தினசரி வேலையை எளிமையாக்குகிறது. ஆனால் ஒரு சில ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்
நீங்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது பிளே ஸ்டோரில் இருந்து ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்யும் முன்பு அவற்றின் பாதுகாப்பு அம்சங்களைகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்நிலையில் பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் Maxime Ingrao என்பவர் 8 தீங்கிழைக்கும் ஆப்ஸ்களை கண்டுபிடித்துள்ளார். குறிப்பாக இந்த
ஆப்ஸ்களை பயன்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

8 ஆப்ஸ்கள்
பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் Maxime Ingrao தெரிவித்த தகவலின்படி, தீங்கிழைக்கும் 8 ஆப்ஸ்கள் உங்கள் போனில் இருக்கும் தனிப்பட்ட தகவல்களை திருடும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் இந்த 8 தீங்கிழைக்கும் ஆப்ஸ்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியிருந்தாலும், அவற்றை ஏற்கனவே பதிவிறக்கம் செய்த பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் இன்னமும் இருக்கும். எனவே இவற்றை உடனே டெலிட் செய்வது நல்லது. இப்போது நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய அந்த8 ஆப்ஸ்களின் பட்டியலைப் பார்ப்போம்.

1.Vlog Star வீடியோ எடிட்டர்
வீடியோ எடிட் செய்யபயன்படும் Vlog Star ஆப்ஸ்-ஐ இதுவரை 1 மில்லியனுக்கு அதிகமாக மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். குறிப்பாக இது
ஒரு மோசமான ஆப் வசதியாகும். எனவே இதை உடனே டெலிட் செய்வது நல்லது.

2.கிரியேட்டிவ் 3டி லான்சர் (Creative 3D Launcher)
இந்த Creative 3D Launcher ஆப் ஆனது உங்களது ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் 3டி அம்சத்தை வழங்கக்கூடியது. இதுவரை இந்த செயலியை ஒரு மில்லியனுக்கு அதிகமாக மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். எனவே இதை உடனே டெலிட் செய்ய வேண்டும்.

3.Funny Camera ஆப்
கேமரா பில்டர்களை வழங்கக்கூடியது தான் Funny Camera ஆப். இதன் மூலம் நீங்கள் நினைத்த படங்களை எளிமையாக எடுக்க முடியும். ஆனாலும் இதுவும் மோசம் செய்யக் கூடிய ஒரு ஆப் தான். இதுவரை 500,000+ பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது Funny Camera ஆப். எனவே இதை ஏற்கனவே பதிவிறக்கம் செய்திருந்தால் உடனே நீக்கிவிடுங்கள்.

4. வாவ் பியூட்டி கேமரா (Wow Beauty Camera)
இதுவும் அழகான கேமரா பில்டர்களை வழங்கக்கூடிய செயலி ஆகும். குறிப்பாக Wow Beauty Camera செயலி இதுவரை 100,000+ பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது. ஒருவேளை இந்த செயலியை ஏற்கனவே நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால் நீக்கிவிடுங்கள்.

5.Gif எமோஜி கீபோர்ட்
பெயர் குறிப்பிடுவது போல Gif எமோஜிகளுடன் கூடிய கீபோர்டு ஆப் பயன்பாடாகும். இதுவும் மோசமான ஆப் வசதியாகும். இதுவரை 100,000+ பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது இந்த மோசமான ஆப். உடனே இதை டெலிட் செய்வது நல்லது.

6.ரேசர் கீபோர்டு & தீம்(Razer Keyboard & Theme)
இதுவும் ஒரு ஆபத்தான் கீபோர்டு ஆப் வசதியாகும். குறிப்பாக இது பயனர்களுக்கு Gif எமோஜிகளுடன் தனிப்பயனாக்கப்பட்ட கீபோர்டு அம்சங்களைவழங்குவதாக கூறுகிறது. இதுவரை 100,000+ பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது இந்த ஆப் வசதி. உடனே இதை டெலிட் செய்வது நல்லது.

7.Freeglow Camera 1.0.0 ஆப்
Freeglow Camera 1.0.0 ஆனது இலவச போட்டோகிராபி ஆப் ஆகும். இது 5,000+ பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது. இந்த ஆப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும். எனவே இந்த செயலியை ஏற்கனவே நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால் நீக்கிவிடுங்கள்.

8.கோகோ கேமரா v1.1 (Coco camera v1.1)
Coco camera v1.1 ஆப் ஆனது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படங்களுக்கு ரெட்ரோ நினைவுகளை சேர்க்கிறது. இதுவரை 1000+ பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது இந்த ஆப். உடனே இதை டெலிட் செய்வது மிகவும் நல்லது.

கூகுள் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே தனது பிளே ஸ்டோரில்இருந்து தீங்கிழைக்கும் ஆப்களை நீக்கிய வண்ணம் உள்ளது. அதேபோல்
நீங்கள் பதிவிறக்கம் செய்யும் ஆப்ஸ்களின் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி விரிவாக தெரிந்துகொண்டு அதன்பின்பு ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்தால்நன்றாக இருக்கும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications