WWDC 2025 நிகழ்வை தெறிக்கவிட்ட டிம் குக்.. Apple-ன் 8 முக்கிய அறிவிப்புகள்.. iOS 26 முதல் VisionOS 26 வரை!
நேற்று (ஜூன் 9 ஆம் தேதி) இரவு தொடங்கிய ஆப்பிளின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (Apple Worldwide Developers Conference) ஆன டபிள்யூடபுள்யூடிசி 2025 (WWDC 2025) நிகழ்வானது ஜூன் 13 ஆம் தேதி வரை நடக்கும் என்றாலும் கூட, இந்நிகழ்வின் ஹைலைட்டே - அதன் கீநோட் (Keynote) தான்.
அறியாதோர்களுக்கு - ஆப்பிள் நிறுவனம் அதன் ஓஎஸ் மீதும், அதன் டிவைஸ்கள் மீதும் என்னென்ன முக்கிய மாற்றங்களை கொண்டுவரும் என்பதன் "இரத்தினச் சுருக்கமே" இந்த கீநோட். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கீநோட்-ஐ முக்கிய அறிவிப்புகள் என்று கூறலாம். அப்படியாக டபிள்யூடபுள்யூடிசி 2025 நிகழ்வின் 10 மிகப்பெரிய அறிவிப்புகள் பற்றிய விவரங்கள் இதோ:

1. அந்தந்த ஆண்டு காலெண்டருக்கு பொருந்தக்கூடிய ஓஎஸ் பெயர்கள்: ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அதன் ஓஎஸ்-களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக மறுபெயரிட்டுள்ளது. அதாவது ஆப்பிள் அதன் ஓஎஸ்-களை வெளியிடப்பட்ட ஆண்டோடு அந்தந்த ஓஎஸ் பெயர்கள் இனி ஒத்துப்போகும்.
அபப்டியாக ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஓஎஸ்களாக - ஐஓஎஸ் 26 (iOS 26), ஐபேட் ஓஎஸ் 16 (iPadOS 26), மேக் ஓஎஸ் 26 (macOS 26), வாட்ச் ஓஎஸ் 26 (watchOS 26), டிவி ஓஎஸ் 26 (tvOS 26) மற்றும் விஷன் ஓஎஸ் 26 (visionOS 26) ஆகியவைகளை அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிளின் புதிய ஓஎஸ் பதிப்புகளுக்கு இடையிலான புரிதலை எளிதாக்கும் நோக்கத்தின் கீழ் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது
2. லிக்விட் கிளாஸ் டிசைன் இன்டர்பேஸ்: ஐபோன்கள், ஐபேட்கள், மேக்ஸ்கள் மற்றும் பிற டிவைஸ்கள் உட்பட ஐஓஎஸ் 26 வழியாக ஆப்பிள் நிறுவனம் அதன் யூஸர் இன்டர்பேஸ்-ஐ மறுவடிவமைப்பு செய்துள்ளது. வெளிப்படையான ஆப் ஐகான்கள், பட்டன்கள், மீடியா கண்ட்ரோல்கள் மற்றும் பிற இன்டர்பேஸ்கள் காரணமாக இந்த வடிவமைப்பு "லிக்விட் கிளாஸ்" என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய டிசைன், லாக் ஸ்க்ரீனுக்கும் வருகிறது.
3. கேமரா, சஃபாரி, போன் மற்றும் பிற ஆப்கள் மறுவடிவமைப்பு செய்யப்படுகின்றன: ஆப்பிள் அதன் முதல் தரப்பு ஆப்களையும் மறுவடிவமைப்பு செய்துள்ளது. இது மிகவும் எளிமையான இன்டர்பேஸ்-ஐ கொண்டுவருகிறது. கேமரா ஆப்பில் வீடியோ மற்றும் புகைப்படத்திற்கான தனி டேப்பும், போர்ட்ரெயிட், சினிமா மற்றும் பிற மோட்களுக்கு இடையில் மாற அனுமதிக்கும் புதிய டூல்பாரும்சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் போன் ஆப்பிலும், சஃபாரி ஆப்பிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
4. புதிய கேம்ஸ் ஆப்: ஆப்பிள் நிறுவனம் அதன் மேக், ஐபோன் மற்றும் ஐபேட்-க்கான பிரத்யேக கேம்ஸ் சென்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. கேம்ஸ் ஆப் ஆனது பயனர்கள் ஆர்கேட் கேம்களை தொடங்கவும் கண்டறியவும் உதவும். இந்த ஆப் பயனர்கள் தங்கள் நண்பர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் தெரிவிக்கும் அல்லது ஒரு சவாலுக்கு அவர்களை அழைக்கும், லீடர்போர்டை கண்காணிக்கும், தகவல் தொடர்பு கருவிகள், ஆடியோ கட்டுப்பாடுகள் மற்றும் பலவற்றை ஒரே இடத்தில் அணுக உதவும்.
5. புதிய ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்கள்: இந்நிகழ்வில் ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் ஆனது ஒரு முக்கிய பகுதியாக இல்லாவிட்டாலும், ஆப்பிள் நிறுவனம் சில புதிய அம்சங்களையும், அதன் ஏஐ அம்சங்களுக்கான மேம்படுத்தல்களையும் அறிவித்தது. முதலாவதாக ஐஓஎஸ் 26 இல் முதல் தரப்பு ஆப்களில் மொழித்தடையை உடைக்கும் ஒரு புதிய நேரடி மொழிபெயர்ப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
மேலும் விஷூவல் இன்டெலிஜென்ஸ் ஒரு பெரிய மேம்படுத்தலை பெறுகிறது. இது பயனர்கள் சமூக ஊடகங்களில் கண்டறிந்த தயாரிப்புகளை வாங்கவும், சாட்ஜிபிடி (ChatGPT) இல் கேள்விகளைக் கேட்கவும் மற்றும் பலவற்றை செய்யவும் உதவும். மேலும் ஆப்பிள் நிறுவனம் ஜெமோஜி (Gemoji) மற்றும் இமேஜ் பிளேகிரவுன்ட்டிற்கான (Image Playground) மேம்படுத்தல்களையும் அறிவித்தது.
6. ஐபேட் ஓஎஸ் 26 இல் புதிய விண்டோவிங் சிஸ்டம்: இந்த ஆண்டு, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபேட்-ஐ, ஐபேட் ஓஎஸ் 26 உடன் ஒரு மேக் செயல்பட வைக்கும் பயனர்கள் அதிக விண்டோக்களை அணுக, பயன்பாட்டு விண்டோக்களின் அளவை மாற்ற, ஸ்க்ரீனை சுற்றி ஆப்களை நகர்த்த, ஒரு புதிய மெனு பார் மற்றும் பலவற்றை அனுமதிக்கும் புதிய விண்டோவிங் சிஸ்டத்தை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.
7. வாட்ச்ஓஎஸ் 26 ஆனது ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் உடன் ஒரு புதிய ஒர்க்அவுட் பட்டி-ஐயும் பெறுகிறது: ஆப்பிள் வாட்ச் இப்போது ஃபிட்னஸ் கண்காணிப்பு மற்றும் இன்-ஆப் செயல்பாடுகளுக்கு ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் ஒருங்கிணைப்பை பெறுகிறது. வாட்ச்ஓஎஸ் 26 உடன், ஆப்பிள் ஒரு புதிய ஒர்க்அவுட் பட்டியையும் (Workout Buddy) அறிமுகப்படுத்துகிறது, இது பயனர்களுக்கு பயிற்சி, ஒர்க்அவுட் சுருக்கங்கள் மற்றும் பலவற்றை வழங்குகிறது.
8. விஷன் ஓஎஸ் 26-க்கான மேம்படுத்தல்கள்: இப்போது இது பிரேம் அகலம், நிறம், ஆழம் மற்றும் பிறவற்றை கஸ்டமைஸ் செய்ய அனுமதிக்கும் இடஞ்சார்ந்த விட்ஜெட்களை பெற்றுள்ளது. பயனர்களின் டிஜிட்டல் பிரதிநிதித்துவங்களை மேம்படுத்த Personas-க்கும் அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இது பிளேஸ்டேஷன் விஆர்2 சென்ஸ் ( layStation VR2 Sense) கண்ட்ரோலர்ஸ் ஆதரவு, அதிக ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களையும் பெற்றுள்ளது


Click it and Unblock the Notifications








