இது போனா? இல்லை டேப்லெட்டா? 8.8 இன்ச் டிஸ்பிளே.. ரெடியாகிறது iQOO Pad Air.. இல்லை இல்லை iQOO Pad SE..
ஐக்யூ (iQOO) பிராண்ட் சமீபத்தில் அதன் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான ஐக்யூ 12 (iQOO 12) மற்றும் ஐக்யூ 12 ப்ரோ (iQOO 12 Pro) ஆகிய சாதனங்களை நிறுவனம் அறிமுகம் செய்தன
இவை புத்தம் புதிய, அதீத சக்தி வாய்ந்த, புதிய தலைமுறை சிப்செட் மாடலான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) உடன் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த போன் இப்போது ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய சக்தி வாய்ந்த பிளாக்ஷிப் போனாக காணப்படுகிறது. இதற்கு மத்தியில், நிறுவனம் ஐக்யூ நியோ 9 (iQOO Neo 9) சீரிஸ் மாடலை இந்த டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு மத்தியில், சமீபத்திய வதந்தி ஒன்று, ஐக்யூ பிராண்ட் சைலெண்டாக புதிய டேப்லெட் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட ஐக்யூ பேட் டேப்லெட் மாடலின் வாரிசாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஐக்யூ பேட் ஏர் (iQOO Pad Air) அல்லது ஐக்யூ பேட் எஸ்இ (iQOO Pad SE) என்ற பெயருடன் வெளிவரக்கூடும்.
குறிப்பாக, இது டேப்லெட் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ஐக்யூ நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் இந்த புதிய டேப்லெட் சாதனம் சிறிய வடிவத்துடன், ஸ்மார்ட்போனை (smartphone) விட சற்று பெரியதாகவும், வழக்கமான டேப்லெட் (tablet) சாதனங்களை விட கொஞ்சம் சிறியதாக இருக்கும் என்று லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், எதிர்பார்க்கப்படும் ஐக்யூ பேட் ஏர் (iQOO Pad Air) அல்லது ஐக்யூ பேட் எஸ்இ (iQOO Pad SE) டிவைஸ் 8.8' இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. புதிய வெய்போ (weibo) பக்கத்தின் வழியாக வெளியான தகவல் படி, இது 8.8' இன்ச் டிஸ்பிளே அளவு கொண்ட iQOO டேப்லெட் மீது நிறுவனம் வேலை செய்வது உறுதியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, iQOO நிறுவனம், டைமென்சிட்டி 9300 (Dimensity 9300 SoC) சிப்செட் உடன் இயங்கும் புதிய டேப்லெட் மாடல் குறித்த தகவல்கள் இணையத்தில் லீக் செய்யப்பட்டது. இது ஐக்யூ பேட் 2 (iQOO Pad 2) சாதனமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது மலிவு விலையில் தரமான டேப்லெட் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை குறிவைத்து, நிறுவனம் 8.8' இன்ச் கொண்ட குட்டி iQOO டேப்லெட்டை உருவாக்குவது போல் தெரிகிறது.
2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் விவோ பேட் 3 (Vivo Pad 3) சந்தானத்திற்கு பிறகு, இந்த 8.8' இன்ச் iQOO டேப்லெட் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோ பேட் 3 டேப்லெட் சாதனம், விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 (Vivo X Fold 3) சீரிஸ் போல்டபில் போன்களுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 2024 இல் இந்த குட்டி டேப்லெட் சாதனத்தை நாம் எதிர்பார்க்கலாம்.
துரதிர்ஷ்டவசமாக, iQOO பேட் ஏர் பற்றி கூறப்படும் வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதன் விலைக்கு ஏற்ற சிறப்பம்சங்களுடன் இது சந்தையில், தனக்கான ஒரு தனி இடத்தை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் அதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








