8.7 லட்சம் மொபைல் சந்தாதாரர்கள் அவர்களது இணைப்பு இழக்க நேரிடும், ஏன்.?

"ஒன்று இணைப்பை துண்டிக்க வேண்டும் அல்லது நிதி ரீதியிலான தண்டனையை பரிந்துரைக்க வேண்டும்" - தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா.!

|

1.7 கோடி வாடிக்கையாளர்களில் சுமார் 8.7 லட்சம் வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்பு துறை சரிபார்ப்பானது, விதிமுறைகளின் கீழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயம் நேற்று (புதன்கிழமை) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உள்ளானது.

அப்போது "கடந்த 2016 ஆம் ஆண்டு மற்றும் தற்போதைய 2017-ஆம் ஆண்டு (அதாவது பிப்ரவரி 28, 2017 வரை) 1.71 கோடி (சிஏஎப்) வாடிக்கையாளர் கையகப்படுத்துதல் படிவங்களில் சுமார் 8.76 லட்சம் வாடிக்கையாளர் கையகப்படுத்துதல் படிவங்கள் ஆனது தொலைத்தொடர்பு அமலாக்கம், வள மற்றும் கண்காணிப்பால பரிந்துரைக்கப்படும் சரிபார்ப்பு விதிமுறைகளுக்கு இணக்கமாக இல்லை" என்று தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

பரிந்துரை

பரிந்துரை

தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்கள் அவர்களின் வாடிக்கையாளர் சேர்ப்பின் போது கேவ்வைசி (KYC) விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கட்டாயமாகிறது

கட்டாயமாகிறது

அதன் வழியே தான் அனைத்த வாடிக்கையாளர்களும் கட்டாயமாக சரிபார்ப்பிற்கு உள்ளாக்கப்படவேண்டும் என்பது கட்டாயமாகிறது. இந்த சந்தாதாரர் சரிபார்ப்பு வழிமுறைகளை உள்துறை அமைச்சகம் (எம்ஹெச்ஏ) ஆலோசனையுடன் தொலைத்தொடர்பு துறையால் வெளியிடப்பட்டுள்ளன.

துண்டிக்க வேண்டும்

துண்டிக்க வேண்டும்

"இதில் விதிமீறல் நிகழ்ந்துள்ளதால் சேவை வழங்குநர் ஆனது குறிப்பிட்ட மொபைல் சந்தாதாரர்களுக்கு ஒன்று இணைப்பை துண்டிக்க வேண்டும் அல்லது நிதி ரீதியிலான தண்டனையை பரிந்துரைக்க வேண்டும்" என்றும் அமைச்சர் கூறினார்.

மறு-சரிபார்ப்பு

மறு-சரிபார்ப்பு

சமீபத்தில், ஓராண்டு என்ற காலவரம்பிற்குள் ஆதார் அடையாளம் சார்ந்த இகேவ்வைசி (eKYC) மூலம் அனைத்து மொபைல் சந்தாதாரர்களுக்கும் மறு-சரிபார்ப்பு நிகழ்த்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பாரத்நெட்

பாரத்நெட்

அமைச்சர் மேலும் கூறுகையில் "உலகளாவிய சேவை ஆப்ளிகேஷன் நிதியம் நிறுவனங்களின் நிதி உதவியுடன் கிராமப்புற பகுதிகளில் குடிமக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கான பாரத்நெட் உள்கட்டமைப்பானது நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அமைக்க வேண்டிய கட்டாயத்தையும் முன்வைத்தார்.

அங்கீகாரம்

அங்கீகாரம்

மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கிராமப்புற தொலைபேசி பரிமாற்றங்களில் 25000 பொது வைஃபை ஹாட்ஸ்பாட்களை அமைக்கும் திட்டத்திற்கு அங்கீகாரம் பெற்றுள்ள தகவலையும் பகிர்ந்தார்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ப்ரைம் மெம்பருக்கு சக்கரை பொங்கல், மற்றவர்களுக்கு வெறும் பொங்கல்.!

Best Mobiles in India

Read more about:
English summary
8.7 lakh mobile subscribers may lose their connection. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X