மர்மமான முறையில் இறந்த 74 நாசா விஞ்ஞானிகள்.!

|

2015 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடந்த விமான விபத்தில் நாசாவைச் சேர்ந்த ஏஜென்ட் ஆல்பெர்டோ பெஹர் (Alberto Behar) உயிரிழந்தார். இதில் என்ன ஆச்சர்யமான செய்தி எனக் கேட்கிறீர்களா? இவரோடு சேர்த்து கடந்த இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்த நாசா விஞ்ஞானிகளின் எண்ணிக்கை 74 என்பதுதான் நமக்கு அதிர்ச்சியான விசயம்.

மர்மமான முறையில் இறந்த 74 நாசா  விஞ்ஞானிகள்.!

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதராங்களைக் கொடுத்த முக்கியமான விஞ்ஞானிகளுள் ஒருவர் பெஹர் (Alberto Behar). இவர் விமான விபத்தில் இறந்தது புதிராக உள்ளது.

 74 விஞ்ஞானிகள்

74 விஞ்ஞானிகள்

உண்மையில், சமீப காலங்களில் நாசாவைச் சேர்ந்த 74 விஞ்ஞானிகள் விபத்து அல்லது தற்கொலை மூலமாக இறந்துள்ளனர். இவ்வளவு எண்ணிக்கையிலான மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

 மருத்துவ அறிஞர்கள்

மருத்துவ அறிஞர்கள்

அனைத்து மரணங்களிலும் உள்ள பொதுவான உண்மை என்னவென்றால், இறந்துபோன அனைவரும், மிகச் சிறந்த பொறியியலாளர்கள் அல்லது மருத்துவ அறிஞர்கள் என்பதுதான். அது மட்டுமல்லாமல், அனைவருடைய மரணமும் சந்தேகத்திற்கு உரியதாக அமைந்து உள்ளது.

ஷேன் ட்ரூமேன்

ஷேன் ட்ரூமேன்

இறந்து போன 74 விஞ்ஞானிகளுள் குறிப்பிடத் தக்க மற்றொருவர் மெலிசா கேட்டுநிடி (Melissa Ketunuti) என்பவர். இவர் ஒரு பெண் மருத்துவர். கேன்சர் நோய் சிகிச்சை நிபுணர். இவர், இவருடைய வீட்டருகே எரிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தார். இவர்களைப் போலவே கிளன் தாமஸ், ஜோயப் லாங் ஆகியோரும் குறிப்பிடத் தக்கவர்கள். எபோலா மற்றும் எய்ட்ஸ் குறித்த சொற்பொழிவுக்காக இவர்கள் இருவரும் தயாராகிக் கொண்டிருந்த பொழுது கொல்லப்பட்டு உள்ளனர்.

இறந்து போன அனைத்து விஞ்ஞானிகளின் மரணத்தைக் காட்டிலும் மிக அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது ஷேன் ட்ரூமேன் என்னும் எலக்ட்ரிகல் இஞ்சினியரின் மரணம் ஆகும். 2012 ஆம் ஆண்டு இவருடைய உடல் சிங்கப்பூரில் உள்ள பிணவறை ஒன்றின் அருகே கண்டெடுக்கப்பட்டது.

ராஜினாமா

ராஜினாமா

பாதுகப்புத் துறைக்குப் பயன்படும் வகையில் இயந்திரம் ஒன்றை சீனாவுக்காகத் தயாரிக்கும் பணியில் ட்ரூமேன் ஈடுபட்டு இருந்த பொழுது அவர் இறந்துள்ளார். ட்ரூமேன் இறப்பதற்கு பல நாட்களுக்கு முன்பிருந்தே தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளதாகத் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வேலையை ராஜினாமா செய்துவிடலாம் என்று எண்ணியிருந்த சமயத்தில் இறந்துவிட்டார். இவருடைய குடும்பத்தினர் இவருடைய மரணத்திற்கான காரணத்தை அறிய மிகப் பெரிய போராட்டம் நடத்தினர். சீன அரசாங்கமும் இவருடைய மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து கூறுவதாக உறுதியளித்தது. ஆனால் சொன்னபடி செய்யவில்லை.

விடை காணமுடியாத கேள்விகள்

விடை காணமுடியாத கேள்விகள்

காரணம் அறிய முடியாத வகையில் இறந்து போன 74 நாசா விஞ்ஞானிகளில் ஓரிருவரைப் பற்றிய செய்திகள்தான் இவை. அனைவரையும் பற்றிய தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன.

இறந்து போன ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் புகழ்ப்பெற்றவர்கள். அவர்களுடைய மரணங்கள் இயற்கையாக நிகழ்ந்தவைகளா? அவர்கள் அறிந்து வைத்திருந்த உண்மைகளின் காரணமாக, அவர்களுடைய வாயை அடைப்பதற்காக நிகழ்ந்தவைகளா? என விடை காணமுடியாத கேள்விகள் பல எழுகின்றன.

அரசாங்கம்

அரசாங்கம்

இவையெல்லாம் இயற்கையாக நிகழ்ந்தவைகளாக இருக்க முடியாது எனச் சதியாலோசனைக் கோட்பாட்டாளர்கள் கருதுகின்றனர். அரசாங்கம் வெளிப்படுத்தக் கூடாது என நினைத்திருந்த தகவல்களை இவர்கள் தெரிந்து வைத்திருந்த காரணத்தால் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

ஏலியன் இருப்பது உண்மை : நாசா அதிகாரி தகவல்.!!

ஏலியன் இருப்பது உண்மை : நாசா அதிகாரி தகவல்.!!

வேற்றுகிரக வாசம் இருப்பது குறித்து பல்வேறு தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவது சகஜம் என்றாகிவிட்டது. பெரும்பாலும் இவை அதிகாரப்பூர்வ தகவலாக இருப்பதில்லை என்பதால் இது குறித்து யாரும் அதிகம் கவலை கொண்டதில்லை.

எனினும் உலகெங்கும் இருக்கும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் வேற்றுகிரக வாசிகள் இருப்பது உண்மை என்பதை விளக்கும் சான்றுகளை பலமுறை வெளியிட்டு இருக்கின்றனர். இன்றும் பல்வேறு காரணங்களால் இவை குறித்த தகவல் மர்மம் நிறைந்த ஒன்றாகவே இருக்கின்றது.

தகவல்

நிலைமை இப்படி இருக்க வேற்றுகிரக வாசிகள் உண்மையில் இருக்கின்றனர் என்ற வாக்கில் பல நாசா ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாசா

நாசா

பல்வேறு நாசா ஊழியர்களும் ஏலியன் இருப்பதை கிட்டத்தட்ட உறுதி செய்து வரும் நிலையில் நாசா அதிகாரப்பூர்வமாக இத்தகவலை உறுதி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்நிலையில் உலகெங்கும் இருக்கும் சதியாலோசனை கோட்பாட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக நாசாவின் தலைமை ஆராய்ச்சியாளர் எல்லென் ஸ்டோஃபன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தகவல்

தகவல்

ஏலியன் இருப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அடுத்த ஆண்டு வாக்கில் வெளியிடப்படலாம் என வேற்றுகிரக வாசம் சார்ந்த சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உண்மை

உண்மை

இதனிடையே ஸ்டோஃபன் அறிக்கையானது ஏலியன் இருப்பதை மறைமுகமாக உணர்த்துவதாகவே அமைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேரம்

நேரம்

நம் வாழ்நாள் நிறைவடையும் முன் நமது பிரபஞ்சத்தில் வேற்றுகிரக வாசம் இருப்பதை புரிந்து கொள்வோம் என ஸ்டோஃபன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை

உண்மை

இத்தகவல் ஆனது பூமியை தவிர மற்ற கிரகங்களில் வேற்றுகிரக வாசம் இருப்பது நிச்சயம் உண்மை என்பதில் அவர்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளதை உணர்த்துவதாகவே இருக்கின்றது.

அப்போலோ 14 திட்டத்தின் மூலம் விண்வெளி சென்ற வீரர் தன் பேட்டியில் ஏலியன் இருப்பது உண்மை என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல்

தகவல்

இதோடு வேற்றுகரக வாசிகள் இருப்பது குறித்த தகவல்கள் பலமுறை வெளியாகியுள்ளதோடு, அரசாங்கம் மற்றும் நாசா இணைந்து ஏலியன் இருப்பதை மறைக்கின்றன என்ற குற்றச்சாட்டும் பரவலாக நிலவுகின்றது.

ஆதாரம்

ஆதாரம்

முன்னதாக 2011 ஆம் ஆண்டில் நாசா அதிகாரியான சார்லஸ் போல்டன் ஏலியன் இருப்பதை தான் நம்புவதாகவும், ஆனால் இதற்கு தன்னிடம் எவ்வித ஆதாரமும் கிடையாது என்று தெரிவித்திருந்தார்.

கருத்து

கருத்து

இது குறித்து டாக்டர் மிட்செல் கூறியதாவது, 'உலகில் ஏலியன் இருப்பதை மறைக்க நாசா எது வேண்டுமானாலும் செய்யும்' என தெரிவித்திருந்தார்.

கென் ஜான்ஸ்டன்

கென் ஜான்ஸ்டன்

கென் ஜான்ஸ்டனும் ஏலியன் மற்றும் யுஎஃப்ஒ இருப்பது குறித்த தகவல்களை வெளியிட்டார்.

தகவல்களை மட்டும் வெளியிட்ட கென் ஆதாரங்களை வெளியிட மாட்டேன் என கூறினார், இத்தகவல் வெளியானதும் அவர் தனது வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

விண்வெளி மையம்

விண்வெளி மையம்

சர்வதேச விண்வெளி மையத்தின் நேரலை கேமராவில் இருந்து, அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தெரிவது பலமுறை மறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதமும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் சில வினாடிகள் காணப்பட்டது, எனினும் இதுவும் வேண்டுமென்றே மறைக்கப்பட்டது.

யுஎஃப்ஒ

யுஎஃப்ஒ

சர்வதேச விண்வெளி மையம் இல்லாமல் உலகின் பல பகுதிகளில் யுஎஃப்ஒ காணப்பட்டது பதிவு செய்யப்பட்ட நிலையிலும் இது குறித்த தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
74 NASA Scientists Eliminated In The Past Two Years: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more