கூகுளில் வேலை கேட்ட சிறுமி, சுந்தர் பிச்சை சொன்ன பதில் என்ன தெரியுமா?
கூகுள்-ல் வேலைக்கு விண்ணப்பித்த செய்த 7 வயது சிறுமியின் கடிதத்திற்கு ஊக்கப்படுத்துகிறவகையில் சுந்தர் பிச்சை அளித்துள்ள பதில் பற்றிய தகவல்கள் குறித்த பதிவு.
உலகின் முன்னணி இணைய உலவியான கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை கேட்டு கடிதம் எழுதிய சிறுமியின் தன்னம்பிக்கையும், அந்தச் சிறுமியின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ள கூகுள் நிறுவனத்தின் சிஇஓ வான தமிழர் சுந்தர் பிச்சையின் பதிலுமே இன்றைக்கு இணையத்தில் ஹிட்டடித்திருக்கிறது.
அது குறித்த தகவல்கள் கீழே..

கூகுள்-இணைய உலகின் ராஜா:
பதினெட்டு வருடங்களுக்கு முன்பாக அமெரிக்கவைத்த தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்ட உலகின் முன்னணி இணைய உலவியான கூகுள் தனது கால்பதித்த அத்துணை துறைகளிலும் வெற்றியே கண்டுள்ளது.இதற்கு உதாரணங்களாக அதன் துணை இணையத்தளங்களான யூட்யூப்,கூகிள் மேப்,ஜிமெயில் உள்ளிட்ட பலவற்றை நாம் கூறலாம்.

வேலை செய்ய மகிழ்ச்சியான இடம்:
மேலும் உலகிலேயே மகிழ்ச்சியாக வேலை செய்ய ஏற்ற இடமென பணியாளர்கள் குறிப்பிடுவதும் கூகுளைத்தான்.அந்நிறுவனத்தில் தனக்கு ஓர் வேலை கிடைத்து விடாத என நினைப்பவர்கள் ஏராளம்.மற்ற தொழில்நுட்ப துறை நிறுவனங்களில் வேலை செய்வோர்க்குக்கூட கூகுளில் வேலை செய்ய வேண்டுமென்பது நிச்சயம் ஓர் கனவாகத்தான் இருக்கும்.

கடிதம் வழியே வேலை கேட்ட சிறுமி:
இந்நிலையில்,கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை வேண்டுமென கடிதம் எழுதியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் 7 வயது சிறுமி.அவர் பெயர் க்ளோயி பிரிட்ஜ்வாட்டர்.அவர் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ வான தமிழர் சுந்தர் பிச்சை அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்"என் பெயர் க்ளோயி நான் பெரியவளானதும் கூகிள்ல வேலை செய்ய விரும்புறேன்.

என் பெயர் க்ளோயி
இந்நிலையில்,கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை வேண்டுமென கடிதம் எழுதியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் 7 வயது சிறுமி.அவர் பெயர் க்ளோயி பிரிட்ஜ்வாட்டர்.அவர் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ வான தமிழர் சுந்தர் பிச்சை அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்"என் பெயர் க்ளோயி நான் பெரியவளானதும் கூகிள்ல வேலை செய்ய விரும்புறேன்.

அப்டினு சொல்றாரு எங்க அப்பா
எனக்கு சாக்லேட் பாக்டரியில் வேலை செய்யவும் பிடிக்கும்.ஒலிம்பிக்கில் நீச்சல் செய்யவும் பிடிக்கும்.கூகிள்ல வேலை கிடைச்சா பீன் பேக்ல உக்காந்து சறுக்கி விளையாடலாம்னு சொல்றாரு அப்பா.எனக்கு கம்ப்யூட்டர் ரொம்ப பிடிக்கும்.என்கிட்ட டேப்லெட் இருக்கு அதுல நான் கேம் விளையாடுறேன்.அப்பா தந்த கேம் ல ரோபோவ கட்டத்திற்கு மேலயும் கீழயும் நகர்த்தினால் கம்ப்யூட்டரைப்பத்தி அதிகமா தெரிஞ்சுக்கல அப்டினு சொல்றாரு எங்க அப்பா" என்று விரிகிறது அந்த சின்னஞ்சிறு மழலையின் கடிதம்.

படிச்சதுக்கு நன்றி
தனது கடிதத்தில் இறுதியாக,கூகுள்ல வேலைக்கு சேரணும்னா உங்களுக்கு அப்ளிகேஷன் அனுப்பணும்னு என்க அப்பா சொல்றாரு.ஆனா எப்படி அப்ளிகேஷன் அனுப்புறதுனு தெரியல.லெட்டர் எழுதினா போதும்னு அப்பா சொன்னாரு.என் லெட்டர படிச்சதுக்கு நன்றி. நா இத தவிர இன்னும் ஒரு லெட்டர் மட்டும் தான் எழுதியிருக்கேன்.அது கிறிஸ்துமஸ்காக என் அப்பாவுக்கு,"என்று தனது கடிதத்தை நிறைவு செய்கிறாள் அந்த அழகுச் சிறுமி.

கம்ப்யூட்டரும் ரோபோவும்
க்ளோயி-ன் இந்த கடிதத்திற்கு தனது மிகுந்த வேளைப்பளுவுக்கும் இடையில் அந்த தன்னம்பிக்கை சிறுமிக்கு பதில் கடிதம் எழுதி ஆச்சரியப்படுத்தியுள்ளார் கூகுள் நிறுவன சிஇஓ தமிழர் சுந்தர் பிச்சை."டியர் க்ளோயி,உன் கடிதத்துக்கு மிகவும் நன்றி.உனக்கு கம்ப்யூட்டரும் ரோபோவும் பிடிக்குமென்பதில் மகிழ்ச்சி .தொழில்நுப்டபம் குறித்து உனது படிப்பை தொடருவை என நம்புகிறேன்.

பள்ளிப்படிப்பிற்கு பிறகு
நீ கடினமாக உழைத்தால் உன் ஒலிம்பிக் நீச்சல் கனவிலிருந்து கூகுளின் வேலை கிடைப்பது வரை எல்லாம் நிஜமாகும்.உன் பள்ளிப்படிப்பிற்கு பிறகு உனது கடிதத்தை பரிசீளிக்கிறேன்"என பிரிட்டனைச் சார்ந்த 7வயது சிறுமியின் தன்னம்பிக்கைக்கு நம்பிக்கை அளிக்கிற வகையில் பதில் கடிதம் எழுத்தியுள்ளார்.
7 வயது சிறுமியின் தன்னம்பிக்கையும்,கூகுள் சிஇஓ தமிழர் சுந்தர் பிச்சையின் நம்பிக்கையளிக்கிற பதிலும் தானே இப்போது எல்லோருக்கும் தேவைப்படுவது.!

மேலும் படிக்க
புதிய கூகுள் லிஸ்ட் : லிஸ்டை க்ரியேட், எடிட், ஷேர் செய்வது எப்படி.?

சிறு துரும்பும் பல் குத்த உதவும்: இனிமே கலக்குவோம்ல.!
"சிறு துரும்பும் பல் குத்த உதவும்" - என்ற பழமொழி ஞாபகம் இருக்கிறதா.?? இனி எப்போதும் ஞாபகத்தில் இருக்கும், மறக்கவே மாட்டீர்கள். அதெப்படி.? - என்று கேட்கிறீர்களா.?? சொல்கிறேன்.
சின்ன ரப்பர் பேண்ட், பயன்படுத்தாத பழைய சிரிஞ்ச் (syringe) தொடங்கி காலியான வாட்டர் பாட்டில்கள் வரை நாள்தோறும் குப்பைதொட்டிக்குள் போடப்படும் பல பொருட்கள் மிகவும் பயன்தரும் பொருட்களென்று கூறினால் நம்புவீர்களா.?? - நம்பித்தான் ஆக வேண்டும்.
ஸ்டார் வார்ஸ் பிரியர்களுக்கான 5 கேஜெட்கள் அல்லது சேகரிப்புகள்.!
இங்கே தொகுக்கப்பட்டுள்ள புத்திசாலித்தனமான 13 ஸ்மார்ட்போன் ஹேக்ஸ்களை பற்றி அறிந்து கொண்டபின், ஒரு குண்டூசியை தூக்கியெறிக்கூட நூறு முறை யோசிப்பீர்கள்.
ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #10
எப்போதுமே ஒரு ஸ்டைலஸ்தனை (stylus) தான் பயன்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை, அவசரத்திற்கு பேட்டரி ஒன்றையும் பயன்படுத்தலாம். பேட்டரியின் எதிர்மறை பக்கத்தை கொண்டு தன திரையை தொட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #09
பேப்பர் கிளப் (Paperclip) தளர்ந்து விட்டால் தூக்கிப்போட்டு விடாதீர்கள் அதனை கொண்டு போன் ஸ்டாண்ட் ஒன்றை செய்யுங்கள். இப்போது தொலைபேசி கீழே விழுமென்ற கவலை இல்லாமல் வீடியோக்களை பார்க்கலாம்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #08
மிகவும் குளிர்கிறதென்பதால் கையுறை அணிந்து கொண்டீர்களா.? ஆனால் கையுறை போட்டுக்கொண்டே ஸ்மார்ட்போனை இயக்க முடியவில்லையா.? கவலையை விடுங்கள். உங்கள் விரல் மீது சில அலுமினிய தாள்களை சுற்றிக்கொள்ளுங்கள், இப்போது டச் வேலை செய்யும்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #07
ஸ்மார்ட்போன்களின் போர்ட்களில்/ துளைகளில் உள்ள அழுக்கு மற்றும் தூசியை சுத்தம் செய்ய ஒரு ஊசியை பயன்படுத்தவும். ஊசியில் ஏற்றப்பட்ட காற்றை வெளிப்படுவதின் மூலம் மிகவும் சிறிய அளவிலான சுத்தத்தை பெறலாம்; பெரிய அளவிலான சுத்தத்தை எதிர்பார்க்க வேண்டாம்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #06
நீங்கள் ஒரு பொறுமையான திறமைசாலியாய் இருப்பின், பலூன் ஒன்றின் மூலம் ஒரு ஸ்மார்ட்போன் கேஸை உருவாக்கலாம். முதலில் பாதி கொள்ளளவில் பலூனை ஊதி, பின் அதனுள் தொலைபேசி திணிக்க, பலூன் ஒரு கையுறை போன்று உங்கள் ஸ்மார்ட்போனில் ஒட்டிக்கொள்ளும்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #05
ஒரு டேப் மற்றும் சில ரப்பர் பேண்டுகளில் இருந்து உங்கள் மிக எளிமையான "ட்ரைபாட்" ஒன்றை செய்திட முடியும். ஸ்மார்ட்போனை டேப்பிற்குள் திணித்து, ரப்பர் போட்டு விழாத வண்ணம் லாக் செய்துகொள்ளவும். இந்த "டேப் ட்ரைபாட்" ஆனது பார்க்கும் பாதி வீடியோவை இது மறைக்கும் என்றாலும் கூட செல்பீக்கள் மற்றும் விடியோக்கள் எடுக்க சிறப்பாக பயன்படும்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #04
நீர் நிரப்பட்ட வாட்டர் பாட்டில் ஒன்றை உங்களின் பிளாஷ் லைட்டின் மீதி நிலைநிறுத்த உங்களால் ஒரு நைட் லேம்ப்தனை உருவாக்க முடியும். பெரிய அளவிலான பிரகாசத்தை எதிர்பார்க்க முடியாதெனினும்; இரவு நேரங்களில் பிறரை தொந்தரவு செய்யாத அளவு இது உதவும்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #03
ரிஸ்க் எடுக்க விரும்பினால் உங்களின் ஸ்மார்ட்போனை நீருக்கடியில் அனுப்பி புகைப்படம் எடுக்க விரும்பினால் ஒரு ஆணுறை உங்களுக்கு நிச்சயம் உதவும்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #02
நம்பினால் நம்புங்கள் உங்கள் இயர்போனின் வயரில் உள்ள பொத்தான் ஒரு கேமரா ட்ரிகர் பட்டன் ஆகும். கருவியுடன் செருகி, கேமராவை ஆன் செய்து எங்காவது நிலைநிறுத்திய பின்னர் ஹெட்போன் பொத்தானை அழுத்தவும், போட்டோ தானாக கிளிக் ஆகும்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #01
அசைவப்பிரியர்களே இது உங்களுக்கான ஸ்பெஷல் ஹேக் என்றே கூறலாம். சரிபாதியாக உடையப்பெற்ற முட்டையோடு ஒன்றை எடுத்து உங்களின் பிளாஷ் லைட்டின் மேல் கவிழ்த்தி மிகவும் கவனமாக டேப் ஒன்று போட்டு ஒட்டிவிட்டால் - பிரகாசமான ஸ்பாட் லைட் ரெடி.!


Click it and Unblock the Notifications