'அன்ஃப்ரெண்ட்' செய்ய வேண்டிய 7 வகையான மக்கள்..!!

Written By:

சுவாசம், நீர், உணவு, உடை, உறைவிடம் என்ற மனிதனின் அத்தியாவசிய பட்டியலில் 'ஃபேஸ்புக்' என்ற சமூக வலைதளமும் 'மெல்ல மெல்ல' இணைந்து கொண்டே வருகிறது என்பது தான் நிதர்சனம்.

சொல்லப்போனால்... சிரிப்பது, அழுவது, உண்பது, காதலிப்பது என ஃபேஸ்புக்கில் தான் பெரும்பாலானோர்கள் - தாங்கள் நினைக்கும் பிரபலத்தன்மையான வாழ்வை - வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

'அன்ஃப்ரெண்ட்' செய்ய வேண்டிய 7 வகையான மக்கள்..!!

நம்மையும், நம் சுயத்தையும் பாதிக்காத வரையிலான ஃபேஸ்புக் பயன்பாடு என்பது மிகவும் புத்திசாலித்தனமான ஒரு காரியமாகும். மீறி பாதித்தால், பாதித்து கொண்டிருந்தால் இப்போதே திரும்பி விடுவது நல்லது. திரும்ப முடியாத நிலைக்கு சென்று விட்டீர்களா..? சரி, அப்போது கீழ் தொகுக்கப்பட்டிருக்கும் 7 வகையான ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ்களை 'அன்ஃப்ரெண்ட்' (Unfriend) செய்யலாமா என்பதை மறுபரிசீலனையாவது செய்யுங்கள்..!!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
01. அரசியல் :

01. அரசியல் :

எப்போதுமே அரசியலைப்பற்றி மிகவும் ஆத்திரமாக பேசும் (முக்கியமாக அரசியல் அறிவு இல்லாத) ஃபேஸ்புக் நண்பர்களை கழட்டி விடுவது நல்லது. இம்மாதிரியான மக்கள் நிஜத்தில் சமூகவாதிகளே அல்ல என்பது தான் நிதர்சனம்.

02. நெகடிவ் :

02. நெகடிவ் :

அவ்வப்போது 'நெகடிவ்'வாக இருப்பது மனித இயல்பு தான், ஆனால் எப்போதுமே 'நெகடிவ்'வாக இருந்தால் அது பிறரை எளிதில் ஆதிக்கம் செலுத்தி பாதிக்கும். ஆக அம்மாதிரியான நண்பர்களை 'கட்' செய்வது நல்லது.

03. முன்னாள் :

03. முன்னாள் :

ஒருவரை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில், அவரை முழுமையாக விலகி இருப்பதுதான் மனநிலைக்கு மிகவும் நல்லது. அப்படியாக முன்னாள் காதலி, முன்னாள் காதலன், முன்னாள் நண்பர் என யார் ஃபேஸ்புக் நண்பராக இருந்தாலும் அவர்களை பின் தொடாராமல் 'அன்ஃப்ரெண்ட்' செய்வது நல்லது.

04. சமூக ஒப்பீடு :

04. சமூக ஒப்பீடு :

எல்லோரும் ஒவ்வொரு வகையில் முன்னேற்றம் கண்டவர்கள் தான், இருப்பினும் சில ஃபேஸ்புக் நண்பர்களை உங்களோடு இணைத்து சமூக ஒப்பீடு செய்யாமல் இருக்க முடியவில்லை எனில் அவர்களை 'அன்ஃப்ரெண்ட்' செய்துவிட்டு உங்களை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.

05. கவன ஈர்ப்பு :

05. கவன ஈர்ப்பு :

வசீகரம் என்பது வேறு, பிறரின் கவனத்தை ஈர்க்க நினைப்பது என்பது வேறு. அப்படியாக எப்போதுமே உங்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து கொண்டே இருக்கும் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு 'டாட்டா' சொல்வது நல்லது.

06. வீண் பெருமை :

06. வீண் பெருமை :

வீண்பெருமை மற்றும் தற்பெருமை பாராட்டுபவர்களை விட ஒரு பெரிய ஃபேஸ்புக் இம்சை இருக்கவே முடியாது. இம்மாதிரியானவர்கள் பொய்யாக வாழ்ந்து சுயவிளம்பரம் செய்வது மட்டுமின்றி அதை உங்களுக்கும் கற்றுக்கொடுத்து விடுவார்கள். ப்ளீஸ் அன்ஃப்ரெண்ட்..!

07. அபத்தம் :

07. அபத்தம் :

நீங்கள் என்ன போட்டோ போஸ்ட் செய்தாலும், என்ன ஸ்டேடஸ் அப்டேட் செய்தாலும், அவ்வளவு ஏன், ஏதாவது கமெண்ட் செய்தாலும் கூட உங்களை அபத்தமாக கிண்டல் செய்யும், வேண்டுமென்றே கலாய்க்கும் 'வெட்டி' ஃபேஸ்புக் நண்பர்களை ஹாயாக அன்ஃப்ரெண்ட் செய்துவிட்டு இயல்பாக வாழுங்கள்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
7 Types Of People You Should Unfriend On Facebook. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot