Home
News

வெயில் காலங்களில் போன் சூடாவதை தடுக்க இந்த 7 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!

தற்போது பல செல்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஆனாலும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் போது எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும்.

அதாவது அதிகப்படியான செயல்திறன் மற்றும் பயன்பாடு காரணமாக, வெயில் காலத்தில் ஸ்மார்ட்போன்கள அதிகளவில் சூடாக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக போன்கள் ஓரளவுக்கு மேல் அதிக வெப்பமானால், உள் பாகங்கள் பாதிக்கப்படலாம். இது செயல்திறன் இழப்பு, பேட்டரி கசிவு போன்ற பல சிக்கல்களை கொண்டுவரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது கோடை காலத்தில் போன் வெப்பமடைவதை தடுத்திட 7 அருமையான குறிப்புகளை இப்போது பார்ப்போம்.

வெயில் காலங்களில் போன் சூடாவதை தடுக்க இந்த 7 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!

காருக்குள் போனை வைக்க வேண்டாம்: பொதுவாக பலர் காரை வெளியிடங்களில் பார்க் செய்யும் போது காரின் உள்ளேயே போனை வைத்து பூட்டி விட்டு செல்கின்றனர். குறிப்பாக இந்த வெயில் காலங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்க்கு மேல் உயரும். எனவே இந்த வெப்பமான சூழ்நிலையில் போன் பேட்டரி கண்டிப்பாகப் பாதிப்படையக் கூடிய வாய்ப்புகள் அதிகம். மேலும் ஐபோன்களை 35 டிகிரிக்கு மேல் அதிக வெப்பநிலையில் வைக்கும் போது அவற்றின் பேட்டரி பாதிக்கப்படும்.

டேஷ் போர்டு: நீங்கள் வண்டி ஓட்டும் போது வாகனத்தின் டேஷ் போர்டு மீது போனை வைக்கலாம். குறிப்பாக இதனால் நேரடியாக சூரிய ஒளி தாக்குதலுக்கு உள்ளாவதால் ஸ்மார்ட்போனின் வெப்பநிலை உயர்ந்து பல பிரச்சனைகள் உண்டாகலாம். எனவே வெயில் காலத்தில் டேஷ் போர்டு மீது போனை வைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

சூரிய ஒளி: நீங்கள் உங்களது ஸ்மார்ட்போனை அதிக நேரம் சூரிய ஒளியில் வைத்திருந்தால் அதிக வெப்பமடையும். பின்பு நேரடியாகச் சூரிய ஒளி படும் இடத்தில் உங்களது போனை சார்ஜ் செய்ய வைத்தால் மேலும் மோசமாகிவிடும். குறிப்பாக சார்ஜிங் மற்றும் சூரிய ஒளியின் வெப்பம் போனின் உட்புற பாகங்களில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

வெயில் காலங்களில் போன் சூடாவதை தடுக்க இந்த 7 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!

சார்ஜிங்: இப்போது அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள் பலவற்றிலும் சார்ஜ் முழுமையானதும் தானாகவே சார்ஜை துண்டித்துக் கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இரவு முழுவதும் போனை சார்ஜ் போடுவது சரியான செயல்முறை அல்ல. அதாவது இதன் மூலம் பேட்டரியில் பாதிப்புகள் உண்டாவதுடன் ஸ்மார்ட்போனின் வெப்பநிலை உயர்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. பின்பு போனை தலையணைக்கு அடியிலும், போர்வைக்கு அடியிலும் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக போன் சூரிய ஒளியில் பயன்படுத்தும் போது வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். எனவே நீங்கள் வெளியிடங்களில் இருக்கும் போது போன் வெப்பமாவது உணர்ந்தால் உடனே சூரிய ஒளி படாத இடத்தில் போனை வைத்துவிடுவது நல்லது. அதேபோல் போன் வெப்பநிலை குறையும் வரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

கூலிங் fan: போனில் நீண்ட நேரம் கேம் விளையாடும் பயனர்கள், மொபைல் போனுக்கு cooling fan வாங்குவது மிகவும் நல்லது. அதாவது தற்போது பல விதமான கூலிங் fan-கள் சந்தையில் உள்ளன. இதனைப் பயன்படுத்தும் போது நீண்ட நேரம் கேம் விளையாடினாலும் போன் வெப்பமடையாமல் தடுத்திடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெயில் காலங்களில் போன் சூடாவதை தடுக்க இந்த 7 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!

போன் கவர்: குறிப்பாக உங்களுடைய போன் அளவுக்கு அதிகமாக வெப்பமடைவதை உணர்ந்தால் உடனே போனின் கவரை நீக்கி சிறிது நேரம் போனை காற்றோட்டமாக வைக்கலாம். பின்பு இதன் மூலம் போனின் வெப்பநிலை குறைய அதிக வாய்ப்புகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
7 tips to prevent your smartphone from overheating this summer : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X