Just In
Don't Miss
- Sports
இதெல்லாம் எங்களுக்கு ஒரு ஸ்கோரா? ஊதித் தள்ளிய வெ.இண்டீஸ்.. மண்ணைக் கவ்விய இந்திய அணி!
- News
உள்ளாட்சி தேர்தல்.. திமுக உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவது ஏன்.. கார்த்தி சிதம்பரம் பேட்டி
- Movies
தொடர் தோல்வி.. அது மட்டும் இல்லைன்னா நானே படம் பண்ணிடுவேன்.. ஷாருக்கானின் அதிரடி மாற்றம்!
- Finance
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Lifestyle
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆபிஸ் கம்ப்யூட்டரில் செய்யக்கூடாத 7 விடயங்கள்.!
"நான் என்ன செய்கிறேன் என்று கண்காணிக்கும் அளவு என் கம்பெனி ஒன்னும் பெரிய நிறுவனம் இல்ல" என்று "அட, இதுல என்ன இருக்கு.?" - என்று நீங்கள் சாதாரணமாக நினைக்க இது சில்லி மேட்டர் இல்ல, ரொம்ப சீரியஸான மேட்டர் மக்களே.!
உங்கள் தனிப்பட்ட கணினியில் அதாவது உங்களின் ஆபிஸ் கணினியில் உங்கள் வினோதமான இணைய தேடல் பழக்கங்களை இன்றோடு நிறுத்திக் கொள்வது உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது ஏனெனில் ஒரு நல்ல வாசகரை இழக்க நாங்கள் தயாராக இல்லை. எதை, எப்போது, எப்படி, எங்கு நிகழ்த்த வேண்டுமென்ற தெளிவு வேண்டும். இல்லையெனில் சிக்கல்களை சந்திக்க தயார் நிலை தேவைப்படும்.!

இன்னும் சொல்லப்போனால்
நீங்கள் உங்கள் பணியிட கணினியில் இருக்கும்போது, உங்கள் முதலாளிகளால் நீங்கள் செய்யக்கூடிய எல்லாவற்றையும் கண்காணிக்க முடியும். பணியிட கணினியில் நீங்கள் நிகழ்த்தும் எந்தவொரு தனிப்பட்ட தரவு அல்லது நடத்தையையும் சேகரிக்க முடியும். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு தேடல், கிளிக், அனுப்பிய மின்னஞ்ல், தேடல்கள், ஷாப்பிங், சோஷியல் மீடியா மற்றும் வலைத்தளங்கள் என ஒன்றை விடாமல் கண்காணிக்க முடியும்.

'ஹிஸ்டரி கிளியர்'
ப்ரவுஸிங் செய்த பின்னர் 'ஹிஸ்டரி கிளியர்' செய்வதின் மூலம் நீங்கள் நிகழ்த்திய அனைத்தையும், இணையத்தில் உங்கள் நேரத்தை செலவழித்த எல்லா ஆதாரத்தையும் அகற்றி விட்டதாக நினைத்தால் அது தவறு.

பயன்பாட்டை கண்காணிக்கிறது
பெரும்பாலான ஐடி துறைகள் நீங்கள் என்னதான் உங்களின் ப்ரஸிஸிங் ஹிஸ்டரியை கிளியர் செய்தாலும் உங்களின் கணினி பயன்பாட்டை கண்காணிக்கிறது, குறிப்பாக மிகவும் கேள்விக்குரிய ஒன்றாக கருதப்படும் உங்களின் தேடல்களை கண்காணிக்கிறது. இதனை மனதில் கொண்டு, உங்கள் வேலை தொடர்பான சாதனங்களில் நீங்கள் கண்டிப்பாக விலகியே இருக்க வேண்டும் என்று சில தேடல்கள் பற்றிய தொகுப்பே இது.!

07. பொதுவாகவே அதிகமான தேடல்கள் என்பதே மோசமான யோசனைதான்
ஒருவர் எந்த அளவிலான நேரம் மற்றும் அதிர்வெண் கொண்ட தேடல்களை நிகழ்த்துகிறார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். சிலர் நேற்று இரவு நடந்த கிரிக்கெட் போட்டியின் ஸ்கோரை டக்கென்று பார்த்துவிட்டு வேலையை தொடங்குவர், சிலரோ முழு போட்டியின் மாரு ஒளிபரப்பை காண்பர். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. எனவே ஆபிஸ் கணினியில் எந்தவொரு கூகுள் தேடல் நிகழ்த்துவதும் ஒரு மோசமான யோதனை தான் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

06. விடுமுறைகள் அல்லது திருமணங்கள் தொடர்பான திட்டமிடல் இணையதளங்கள்
உங்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளை திட்டமிடும் வேலையை ஆபிஸ் கணினியில் நிகழ்த்துவது என்பதை யாருமே சகித்துக் கொள்ள மாட்டார்கள், அவ்வளவு ஏன், நீங்களே ஒரு முதலாளியாக இருந்தால் கூட இதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். எனவே திருமணங்கள், பார்ட்டிகள் அல்லது விடுமுறைகள் சம்பந்தப்பட்ட எதையுமே ஆராய்ச்சி செய்ய வேண்டும்எந்தவொரு தளங்களையும் பயன்படுத்த வேண்டாம்.

05. டேட்டிங் மற்றும் உறவு தொடர்பான வலைத்தளங்கள்
எங்கே போகலாம் என்ற கூகுள் மேப்ஸ் தேடலே சிக்கல் என்ற பட்சத்தில் ஒருவேளை நீங்கள் டேட்டிங் அல்லது சாட்டிங் போன்ற பணிகளை உங்களின் ஆபிஸ் கணினியில் செய்தால் என்னவாகும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

04. வேலை தேடு தளங்கள்
உங்களின் வேலை உங்களுக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அது இரண்டாம் பட்சம், முதலில் ஒரு புதிய வேலைக்காக உங்கள் பணியிட கணினியை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம். நீங்கள் உங்கள் தற்போதைய வேலை பாத்திரத்தில் மகிழ்ச்சியற்றவராக இருந்தாலும் கூட, உங்களுக்கு நீங்களே ஒரு தீவிர ஆபத்தை உண்டாக்கி கொள்ளாதீர்கள்.

03. சைட் பிஸ்னஸ்
ஒருவேளை நீங்கள் இரண்டாவதாக ஒரு வேலை அல்லது உங்கள் சொந்த வியாபாரத்தில் இயங்குபவராக இருந்தால், அது சார்ந்த எந்தவொரு விடயத்தையும் உங்களின் ஆபிஸ் கணினியில் செய்ய வேண்டாம். சொந்த வியாபாரத்தை இயக்கும் போது பல ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை மறக்க வேண்டாம். உங்கள் இணைய நடவடிக்கைகள் உங்கள் முதலாளிகளுக்கு மிகப்பெரிய சிவப்பு கொடிகளை வழங்கும் என்பதையும் மறக்க வேண்டாம்.

02. சொந்த நிறுவனத்திற்குள்ளே மிகவும் வகைப்படுத்தப்பட்ட தகவல்கள்
ஒரு காரணத்திற்காக வரம்புக்குட்பட்ட விஷயங்கள் உள்ளன என்று உங்களுக்குத் தெரிந்தால் அவற்றை முயற்சி செய்யாதீர்கள், அவற்றை எக்காரணம் கொண்டும் சொந்தமாக அணுக வேண்டாம். இதுபோன்ற விடயங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும் ஏனெனில் அவைகள் உங்கள் நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

01. ஆபாசம் அல்லது பிற பொருத்தமற்ற இணையதளங்கள்
இதை மூளை இல்லாதவர்கள் மட்டுமே ஆபிஸ் கணினியில் நிகழ்த்துவர் இருப்பினும் சிலரால் இதை நிகழ்த்தாமல் இருக்க முடியாவதில்லை. அவர்களை அவர்களே நினைத்தாலும் வேளையில் இருந்து காப்பாற்றுவது கடினம்.

உஷார்.!
3 வகையான ஆன்லைன் ஆபாச பார்வையாளர்கள், மூன்றாவது வகையினர் உஷார்.!
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090