செவ்வாயில் மனிதனுக்கு இவ்வளவு ஆபத்திருக்கிறதா? இந்த 7 காரணங்கள் தெரிந்தால் நீங்க செவ்வாய்க்கு போகமாட்டீங்க..

|

நாசா, விண்வெளி தொடர்பான பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இப்போது நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் முதல் மனித காலனியை செவ்வாய் கிரகத்தில் அமைக்கத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த தகவல் எல்லாம் நாம் அனைவருக்கும் தெரிந்தவொன்றே. ஆனால், உங்களுக்குத் தெரியாத, நாசாவுக்கு மட்டும் தெரிந்த சில விஷயங்கள் எல்லாம் ஏராளமாக இருக்கிறது. குறிப்பாக, நாசாவின் இந்த செவ்வாய் கிரக முயற்சி 30 ஆண்டுகளுக்கு முன்னரே செயல்படுத்தப்பட்டு, நிறைவடைந்திருக்க வேண்டுமென்று சொன்னால் நம்புவீர்களா?

தொடர்ந்து தள்ளிப்போகும் நாசாவின் செவ்வாய் கிரக திட்டம்

தொடர்ந்து தள்ளிப்போகும் நாசாவின் செவ்வாய் கிரக திட்டம்

நம்புங்கள், அது தான் உண்மையும் கூட, நாம் 30 ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் இருந்திருக்க வேண்டும். 70-களின் முற்பகுதியில் அப்பல்லோ சகாப்தத்தின் உச்சத்தில், நாசா ஏற்கனவே அறியப்படாத பல அடுத்தடுத்த திட்டங்களைத் திட்டமிட்டிருந்தது. அதன் திட்டங்களில் பல விண்வெளி நிலையங்களை உருவாக்குதல், சந்திரனுக்குத் தொடர்ச்சியான பயணங்கள் மற்றும் 1980-களில் செவ்வாய் கிரகத்திற்கான முதல் மனித குழு பணி ஆகியவை அடங்கும். ஆனால், பல காரணங்களால் இது தள்ளிப்போனது. குறிப்பாக, செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை உயிர்வாழத் தேவைப்படும் தொழினுட்பம் நம்மிடம் இல்லை.

அறிவியல் ரீதியாக மனிதர்கள் ஏன் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ முடியாது?

அறிவியல் ரீதியாக மனிதர்கள் ஏன் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ முடியாது?

பூமிக்கு மிக நெருக்கமான கிரகமாகச் செவ்வாய் கிரகம் இருந்தாலும், இதன் நிலை பூமியில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டிருக்கிறது. மனிதர்களால் செவ்வாய் கிரகத்தில் இயல்பாக வாழ முடியாது, இதற்குப் பல காரணங்கள் இருக்கிறது. இருப்பினும், அறிவியல் ரீதியாக ஏன் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ முடியாது என்பதற்கான சில முக்கியமான 7 காரணங்களை இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளோம். மனிதர்களாகிய நாம் ஏன் வேற்று கிரகமான செவ்வாய் கிரகத்தில் வாழ முடியாது என்பதை அறிந்துகொள்ளலாம் வாங்க.

ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் சேர்ப்பது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் சேர்ப்பது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?

1. மனிதர்களை உறைய வைக்கும் கடும் குளிர்

1. மனிதர்களை உறைய வைக்கும் கடும் குளிர்

குளிர்காலம் வரும்போது, ​​குளிர்ந்த காலநிலையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், கம்பளி ஆடைகளின் அடுக்குகளில் நம்மை மூடிக்கொள்கிறோம். பூமியில் நிகழும் குளிரை வேண்டுமானால் நாம் இப்படிச் சமாளித்துக்கொள்ளலாம், ஆனால் செவ்வாயில் இந்த போக்கு உதவாது. காரணம், செவ்வாய் கிரகத்தில் சராசரியாக -67°F (-55°C) வெப்பநிலை நிலவுகிறது. பூமியுடன் ஒப்பிடும்போது, ​​பூமியின் அண்டார்டிகாவில் -56°F (-49°C) மிகக் குளிரான வெப்பநிலை உள்ளது. அதில் தப்பிப்பிழைக்கவே மனித இனம் போராட வேண்டியதுள்ளது.

2. செவ்வாய் கிரகம் ஏற்கனவே சேதமடைந்துவிட்டது

2. செவ்வாய் கிரகம் ஏற்கனவே சேதமடைந்துவிட்டது

பூமியில் ஓசோன் படலம் எவ்வாறு சிதைவடைகிறது மற்றும் பூமியின் பசுமையை நாம் எவ்வாறு இழக்கிறோம் என்பதைப் பற்றி புகார் செய்து வருகிறோம். நமது தரத்தின்படி, நாம் செவ்வாய் கிரகத்திற்குச் சென்றால், இந்த செய்தி நிச்சயம் வித்தியாசமாக இருக்காது. ஏனெனில், செவ்வாய் கிரகத்தில் ஏற்கனவே சேதம் செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள வளிமண்டலம் பூமியில் உள்ள ஆய்வக வெற்றிடத்தைப் போன்று மிகவும் மெல்லியதாக உள்ளது. செவ்வாய் கிரகத்தின் சராசரி மேற்பரப்பு அழுத்தம் மனித உயிர் வாழ்வதற்கான வரம்பான 6 சதவீத ஆம்ஸ்ட்ராங் யூனிட்டிற்கு கீழே உள்ளது.

ரூ.300 முதல் ரீசார்ஜிங் ஃபேன்.. கரண்ட் இல்லாவிட்டாலும் சில்லுனு காத்து வாங்கலாம்.. உடனே வாங்குங்கள்..ரூ.300 முதல் ரீசார்ஜிங் ஃபேன்.. கரண்ட் இல்லாவிட்டாலும் சில்லுனு காத்து வாங்கலாம்.. உடனே வாங்குங்கள்..

3. சில நிமிடங்களில் உயிர் இழந்துவிடுவீர்கள்

3. சில நிமிடங்களில் உயிர் இழந்துவிடுவீர்கள்

உங்கள் ஸ்பேஸ்சூட் அல்லது காப்ஸ்யூலில் கசிவு போன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஒரு பிரத்தியேக குழு உங்களிடம் இருந்தாலும், தீர்வுக்காக அதிகாரிகளை அணுகும் நேரத்தில், நீங்கள் இறந்துவிடுவீர்கள். காரணம், செவ்வாய் கிரகத்தில் 96 சதவீதம் கார்பன் டை ஆக்சைடு, 1.93 சதவீதம் ஆர்கான் மற்றும் 1.89 சதவீதம் நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மற்றும் நீரின் தடயங்கள் நிறைந்துள்ளது. எனவே ஆக்ஸிஜன் பற்றாக்குறை உங்களைக் கொல்ல போதுமானது. ஒருவேளை உங்கள் ஸ்பேஸ்சூட்டில் சிறிய கிழியல் ஏற்பட்டால் நிலைமை என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

4. செவ்வாய் மண் உயிர் வாழ்வதைச் சிரமமாக்கும்

4. செவ்வாய் மண் உயிர் வாழ்வதைச் சிரமமாக்கும்

செவ்வாயில் உயிர் வாழ்வதே கடினமாக இருக்கும். உணவில் இருந்து வெப்பநிலை, வளிமண்டலம் வரை, அனைத்தும் விரோதமானவை. செவ்வாய் கிரகத்தில் ஒரு வாழ்க்கை வடிவத்தின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் வழங்கும் போதுமான ஆய்வு அல்லது ஆராய்ச்சி எதுவும் கைகொடுக்கவில்லை. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு வறண்டு, தூசி நிறைந்தது மற்றும் அழுக்குகளால் மூடப்பட்டிருக்கும். இருப்பினும், விஞ்ஞானிகள் உணவை வளர்ப்பதில் முன்னேறியுள்ளனர், ஆனால் பூமியின் மண் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதில் கலந்த பின்னரே அதுவும் சாத்தியமானது.

வீட்டிலிருந்தபடி PAN கார்டு போட்டோவை இவ்வளவு சுலபமாக மாற்ற முடியுமா? கட்டணம் எவ்வளவு தெரியுமா?வீட்டிலிருந்தபடி PAN கார்டு போட்டோவை இவ்வளவு சுலபமாக மாற்ற முடியுமா? கட்டணம் எவ்வளவு தெரியுமா?

5. உங்கள் மூச்சு திணறும்.. பார்வை மங்கலாகும்

5. உங்கள் மூச்சு திணறும்.. பார்வை மங்கலாகும்

செவ்வாய் கிரகம் உங்களுக்காக என்ன வைத்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் மூச்சடைத்துப் போவீர்கள். காரணம், செவ்வாயில் நிறையத் தூசி மற்றும் தூசிப் புயல்கள் உள்ளன. ஒவ்வொரு செவ்வாய்க் கோடையிலும், தோராயமாக ஒவ்வொரு இரண்டு பூமி வருடங்களுக்கு, உலகளாவிய தூசி புயல்களின் அதிக வாய்ப்பை நீங்கள் சந்திக்க நேரிடும். இவை சில வாரங்கள் நீடிக்கும் என்பதனால் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். தூசியான பாலைவன மணல் புயல் உங்கள் பார்வையை மங்கலாக்கும்.

6. செவ்வாய் சென்றால் அட்ஜஸ்ட் செய்ய பழகவேண்டும்

6. செவ்வாய் சென்றால் அட்ஜஸ்ட் செய்ய பழகவேண்டும்

பூமியே தாய்க்கப்பால் என்பதால், செவ்வாய் கிரகத்தில் எதிர்காலத்தில் வசிப்பவர்களுக்குக் கண்டிப்பாக இங்கே இருந்து பேக்அப் தேவைப்படும். ஆனால், இது நினைக்கும் நேரத்தில் எல்லாம் கிடைக்காது. மருந்துகள் முதல் தொழில்நுட்ப பொருட்கள் வரை அனைத்திற்கும் செவ்வாய் கிரகவாசிகள் பூமியை நம்பியிருப்பார்கள். சிவப்பு கிரகத்திற்கான உங்கள் பயண நேரம் சுமார் ஆறு முதல் ஏழு மாதங்களாகும். மேலும், 26 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே பூமியில் இருந்து ஒரு ஏவுகணை செவ்வாய் நோக்கிப் பயணிக்கும் என்பதால், நீங்கள் அதுவரை அட்ஜஸ்ட் மட்டுமே செய்ய முடியும்.

அடுத்த வாரம் வானத்தில் தோன்றும் அதிசயம்: 'ஸ்ட்ராபெரி மூன்'.. நிலவு இப்படி சிவப்பாக தெரிய காரணம் என்ன?அடுத்த வாரம் வானத்தில் தோன்றும் அதிசயம்: 'ஸ்ட்ராபெரி மூன்'.. நிலவு இப்படி சிவப்பாக தெரிய காரணம் என்ன?

7. செவ்வாயில் மனித இனப்பெருக்கம் சிக்கலாகும்

7. செவ்வாயில் மனித இனப்பெருக்கம் சிக்கலாகும்

செவ்வாய் கிரகத்தில் மனித இனப்பெருக்கம் சிக்கலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் மனித காலனி உருவாக்கப்பட்டால், காலனியை விரிவுபடுத்த இனப்பெருக்கம் ஒரு முக்கிய காரணியாக இருக்கும். இருப்பினும், செவ்வாயில் உடலுறவு என்பது நீங்கள் ஈடுபடக்கூடிய விஷயங்களில் ஒன்றல்ல. அப்படி, ஈடுபட்டாலும், குறைந்த ஈர்ப்பு விசையில் பெண்கள் கர்ப்பம் தரிப்பது சந்தேகம் என்கின்றனர் மருத்துவர்கள். செவ்வாய் கிரகத்தில் ஈர்ப்பு விசை பூமியைவிடக் குறைவாக இருக்கிறது. இது பூமியின் 38 சதவிகிதம் ஈர்ப்பு விசையை மட்டுமே கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
7 Reasons Why Humans Cannot Live On Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X