முகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.!
கடந்த 22 மாத காலத்திற்குள், ரிலையன்ஸ் ஜியோ 215 மில்லியன் வாடிக்கையாளர்களை திரட்டியது.
முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்;களில் ஒருவர், குறிப்பாக இவர் அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும்.குறிப்பாக இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் சேவைகளை அதிக நாட்கள் இந்நிறுவனம் மட்டுமே வழங்கியது. தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி அவர்கள் 44.3 பில்லியன் டாலருடன் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளார்,மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கு விலை 1,099.8 ரூபாயாக அதிகரித்துள்ளது, குறிப்பாக முன்பை விட 1.6%
அதிகரித்துள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்1999 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் ஜாம்நகர் பகுதியில் திறக்கப்பட்டது, முகேஷ் அம்பானியின் கை படாத ஒரு வியாபாரமே இல்லை. இந்தியாவில் இருந்துகொண்டே உலக பெருநிறுவனங்களிடம் போட்டியிடும் அம்பானியின் திறமைகி அவரின் ஒரு சுத்திகரிப்பு நிறுவனம் சான்றாகும். குஜராத்தின் ஜாம்நகரில் அமைந்துள்ள அந்த சுத்திகரிப்பு ஆலையானது, நாள் ஒன்றிற்கு 668000 பீப்பாய்கள் என்கிற கொள்ளவவை கொண்டுள்ளது. அதாவது இது உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாகும் என்று அர்த்தம்.
முகேஷ் அம்பானிக்கு இது ஒரு வெற்றியாக இருந்தது, அவர் இந்த சுத்திகரிப்பு ஆலையின் கட்டுமானம் மற்றும் விரிவாக்கத்தை மேற்கொண்டபோது, அது சவாலாக இருந்தது என்பதையும் உறுதி செய்தார்.

ரிலையன்ஸ் ஜியோ
கடந்த 22 மாத காலத்திற்குள், ரிலையன்ஸ் ஜியோ 215 மில்லியன் வாடிக்கையாளர்களை திரட்டியது. இந்த வியத்தகு சாதனையானது எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்தினாலும் இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொலைதொடர்பு வட்டராத்தில் இப்போது வரை ஜியோ முதல் இடத்தை பிடித்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

கலிஃபோர்னியா
முகேஷ் அம்பானி கலிஃபோர்னியாவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துக் கொண்டிருந்தார், அந்த சமயம் அவரது
அப்பாவின் உடல்நிலை மிகவும் மோசமானதால் இந்தியாவிற்கு திரும்பினர். அம்பானி இங்கு வந்தபின்பு பாலியஸ்டர் ஃபில்மென்ட் யார்ட் (PFY) உற்பத்தி ஆலையை திறந்தார்.

முகேஷ் அம்பானி உலகின் மிக விலை உயர்ந்த வீடு
மும்பையில் அம்பானி குடும்பத்தின் பெரிய வீடு 400,000 சதுர அடி பரப்பளவில் உள்ளது, இதன் மதிப்பு 2 பில்லியன் டாலர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக விலை உயர்ந்த வீடு ஆகும்.

ஆண்டு வருமானம்
முகேஷ் அம்பானியின் ஆண்டு வருமானம் ரூ.15 கோடி ஆகும். உடனே வாயை பிளக்க வேண்டாம். இன்னொரு விஷயத்தையும் கேளுங்கள். இந்த சம்பளம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாறாமல் உள்ளது. முகேஷ் அம்பானியின் நிறுவனமானது, இந்தியாவின் மொத்த வரி வருவாயில் கிட்டத்தட்ட 5மூ பங்களிப்பு ஆட்கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் நிலவரப்படி அம்பானி நிறுவனத்தின்
மதிப்பு சுமார் 110 பில்லியன் டாலர்கள் ஆகும்.

ஒரு குடும்பத்துக்கு 600 வேலையாட்கள்.!
உலகின் மிக விலையுயர்ந்த குடியிருப்புக்கான சொந்தகாரமும் நம்ம அம்பானி தான். தெற்கு
மும்பையில் அமைந்துள்ள அவரின் வீட்டின் பெயர் அன்டிலியா ஆகும். மொத்தம் 27 மாடிகள் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் 600-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நிக் நேம்:
முகேஷ் அம்பானியின் என்னவென்றால் முகு என்று தான் அழைப்பார்களாம், மேலும் அவர் வாழ்க்கையில் மதுவை ருசித்ததில்லை.பின்பு சைவ உணவை அதிகம் விரும்புவார் அம்பானி, அதன்படி டால்-ரோட்டி மற்றும் பருப்பு, அரிசி
சப்பாத்தி போன்றவற்றை எடுத்துக்கொள்வார்.


Click it and Unblock the Notifications