பெரிய டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனே வாங்கலாம்: ரூ.6,099 முதல் 7 இன்ச் ஸ்மார்ட்போன்- லிஸ்ட்டில் நிறைய இருக்கு!

|

ஸ்மார்ட்போன்கள் என்பது பல்வேறு தேவைக்கும் பிரதானமாக இருந்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் ஸ்மார்ட்போன் சந்தை மிகவும் முன்னோக்கி சென்றது என்றே கூறலாம். கொரோனா பூட்டுதல் காரணமாக நிறுத்தி வைத்திருந்த ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து மொத்தமாக வெளியிடப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வகுப்பு, வீட்டில் இருந்தே வேலை என பல்வேறு தேவைகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் பிரதானமாக இருக்கிறது.

பிரதானமாக இருக்கும் ஸ்மார்ட்போன்கள்

பிரதானமாக இருக்கும் ஸ்மார்ட்போன்கள்

பல்வேறு தேவைகளுக்கு ஸ்மார்ட்போன்கள் பிரதானமாக இருக்கிறது என்பதால் பயனர்கள் பெரிய திரைகளுடன் கூடிய ஸ்மார்ட்போனை வாங்கவே விரும்புகின்றனர். சமீபத்தில் வரக்கூடிய பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 6 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 7 இன்ச் அளவுகளிலேயே வருகின்றன. பட்ஜெட் விலை சாதனத்திலும் கூட பெரிய அளவிலான டிஸ்ப்ளேக்கள் உடனே வருகின்றன.

பெரிய திரையுடன் கூடிய ஸ்மார்ட்போன்

பெரிய திரையுடன் கூடிய ஸ்மார்ட்போன்

பெரிய திரையுடன் கூடிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கான பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. நல்ல பேட்டரி ஆயுள் மற்றும் நீடித்த செயல்திறன் மற்றும் 7 இன்ச் டிஸ்ப்ளே உடன் இந்திய சந்தையில் கிடைக்கக்கூடிய பல்வேறு பிராண்ட்களின் சாதனங்கள் குறித்து பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 சாதனத்தின் விலை ரூ.1,49,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 7.6 இன்ச் டிஸ்ப்ளே அளவுகளில் வருகிறது. இது 2208 x 1768 பிக்சல்கள் தீர்மானத்தோடு டைனமிக் அமோலெட் 2எக்ஸ் டிஸ்ப்ளே வசதியை கொண்டுள்ளது. அதேபோல் இதன் வேரியண்ட் 6.2 இன்ச் டிஸ்ப்ளே 2268 x 832 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் எச்டி ப்ளஸ் டைனமிக் அமோலெட் 2எக்ஸ் கவர் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த சாதனம் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5 என்எம் ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ஆண்ட்ராய்டு 11 ஒன் யுஐ 3.1 உடன் வருகிறது. நானோ மற்றும் இசிம் என இரட்டை சிம் ஆதரவோடு வருகிறது. மூன்று 12 மெகாபிக்சல் பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் 10 எம்பி கவர் ஃப்ரண்ட் கேமரா உடன் வருகிறது. அதேபோல் 5ஜி ஆதரவு, டூயல் 4ஜி வோல்ட்இ இணைப்பு ஆதரவுகளோடு மற்றும் 4400 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 2

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 2

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 2 சாதனத்தின் விலை ரூ.1,49,999 ஆக இருக்கிறது. 7.3 இன்ச் டிஸ்ப்ளே ஆதரவுடன் 2208 x 1768 பிக்சல்கள் தீர்மானத்தை கொண்டிருக்கிறது. 18 இன்ஃபினிட்டி ஓ-டைனமிக் அமோலெட் பிரதான டிஸ்ப்ளே உடன் வருகிறது. 6.2 இன்ச் ஆதரவோடு 2260 x 816 பிக்சல்கள் தீர்மானத்தோடு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இன்பினிட்டி ஃப்ளெக்ஸ் கலர் டிஸ்ப்ளே அணுகலையும் கொண்டிருக்கிறது. ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ 7 என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் உடன் அட்ரினோ 650 ஜிபியு உடன் வருகிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு உடன் வருகிறது. இதில் ஆண்ட்ராய்டு 10 ஒன் யுஐ 2.5 உடன் வருகிறது. அதேபோல் இது இரட்டை சிம் (நானோ+இசிம்) அணுகலை கொண்டுள்ளது. மூன்று 12 மெகாபிக்சல் பின்புற கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. 10 எம்பி கவர், 10 எம்பி முன்புற கேமரா என இரட்டை கேமரா வசதி இருக்கிறது. 5ஜி இணைப்பு ஆதரவு, டூயல் 4ஜி வோல்ட்இ மற்றும் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது.

டெக்னோ ஸ்பார்க் 6 ஏர்

டெக்னோ ஸ்பார்க் 6 ஏர்

டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் சாதனமானது ரூ.9,499 என கிடைக்கிறது. இதன் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கையில், 7 இன்ச் 1640 X 720 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது. இது எச்டி ப்ளஸ் 2.5டி வளைந்த கண்ணாடி காட்சி அணுகலோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஐஎம்டி ஐஎம்ஜி பவர்விஆர் உடன் மீடியாடெக் ஹீலியோ ஏ25 12 என்எம் செயலி உடன் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு கிடைக்கிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஆதரவு இருக்கிறது. இதன்மூலம் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான எச்ஐஓஎஸ் 6.0 அணுகலோடு இது வருகிறது. இரட்டை சிம் கார்ட் அணுகல், 13 எம்பி மற்றும் 2 எம்பி என இரட்டை பின்புற கேமரா வசதியோடு, 8 மெகாபிக்சல் முன்புற கேமரா உடன் இரட்டை 4ஜி வோல்ட்இ அணுகலையும் கொண்டுள்ளது. இதில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

I Kall K380 ஸ்மார்ட்போன்

I Kall K380 ஸ்மார்ட்போன்

I Kall K380 சாதனமானது சில்வர் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.6,099 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 7.12 இன்ச் டிஸ்ப்ளே மல்டி டச் ஆதரவுடன் வருகிறது. இது 480x960 பிக்சல் தீர்மானத்தை கொண்டிருக்கிறது. 13 எம்பி பின்புற கேமரா மற்றும் 8 எம்பி முன்புற கேமராவை கொண்டிருக்கிறது. இதன் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது, இது 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. 64 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவும் இதில் உள்ளது. இரட்டை சிம் மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இதில் 3600 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் விலை

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் விலை

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் விலையானது ரூ.1,73,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 7.3 இன்ச் க்யூஎக்ஸ்ஜிஏ+ டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்எம் பிளாட்ஃபார்ம் உடன் அட்ரினோ 640 ஜிபியு மூலம் இயக்கப்படுகிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 9.0 (பை) ஆதரவோடு வருகிறது. 12 மெகாபிக்சல் டூயல் பின்புற கேமரா, 12 எம்பி மற்றும் 16 எம்பி என மூன்று பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 10 எம்பி டூயல் முன்புற கேமரா வசதி இருக்கிறது. 4ஜி வோல்ட்இ, 4380 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
7 Inch Display Smartphones Available in India: Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X