Home
News

ஓஹோ.. முழு நாள் AC யூஸ் செய்தாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? கடைகாரங்க கூட சொல்லாத டிப்ஸ்.. ட்ரை செய்யுங்க!

வெயிலின் வேட்டை துவங்கிவிட்டது. சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் நிழலை தேடி அலைகிறார்கள். நிழலில் பதுங்கி வெளியில் இருந்து தப்பிக்க சிறிது நேரமாவது AC இருக்கும் இடங்களில் மக்கள் மறைவை தேடுகிறார்கள். குளிர்ந்த காற்றை தரும் AC மிக முக்கியமாகிவிட்டது.

வெளியில் செல்பவர்கள், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ATM மையங்கள், AC ரெஸ்டாரண்ட் (restaurant) மற்றும் ஹோட்டல்களில் (hotel) சில நிமிடங்கள் AC காற்றை வாங்க இப்போது அதிகமாக உள்நுழைகிறார்கள். வீட்டிற்க் திரும்பியவுடன் AC-யை ஆன் (ON) செய்து சில் காற்றை சுவாசித்தால் தான் கண்களே இங்கு பிரகாசமாக தெரியத்துவங்குகிறது. அந்த அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் மக்களை இப்போதே வாட்ட துவங்கிவிட்டது.

ஓஹோ.. முழு நாள் AC யூஸ் செய்தாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா?

நாள் முழுக்க AC யூஸ் செய்தாலும் கரண்ட் பில் குறைவாக வரவேண்டுமா?

நாள் முழுக்க ஏசியில் இருக்க தான் பெரும்பாலானோர் ஆசைப்படுகிறார்கள். ஆனால், கரண்ட் பில் (current bill) அதிகமாகிவிடும் என்ற காரணத்தினால் மக்கள் AC-யை தேவைப்படும் நேரங்களில் மட்டும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இன்னும் சில சாமர்த்தியசாலிகள் மட்டும் குறைந்த மின் கட்டணத்துடன் ஏசியை முழு நேரம் பயன்படுத்தி (How to reduce AC current bill) மகிழ்கிறார்கள். AC மின் கட்டணத்தை குறைக்க தெரிந்த சூட்சமத்தை இங்கு வெகு சிலரே அறிந்திருக்கிறார்கள்.

நாள் முழுக்க ஏசியை பயன்படுத்தினாலும், மின் கட்டணம் அதிகரிக்காமல் எப்படி பார்த்துக்கொள்வது என்ற சூட்சமத்தை தான் இந்த பதிவில் உங்களுக்கு சொல்லி தரப்போகிறோம். உண்மையை சொல்ல போனால், AC கடைகளில் உள்ள கடைக்காரர்கள் கூட சொல்லி தராத தந்திரங்களை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ளப்போகிறீர்கள். சரி விஷயத்திற்கு வருவோம். எப்படி குறைந்த மின் கட்டணத்துடன் நாள் முழுக்க ஏசியை பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

1. முதலில் உங்கள் AC டெம்பரேச்சரை (temperature) எப்போதும் நீங்கள் கவனிக்க வேண்டும். குறுகிய நேரத்தில் அதிக குளிர்ச்சி (cooling) தேவைப்படுகிறதென்று AC-யை மிகவும் குறைவான டெம்பிரேச்சர்களில் இயக்கவே கூடாது.

2. 18°C அல்லது அதற்கும் குறைவான டெம்பரேச்சரில் AC-யை இயக்கம் பொழுது உடனே அறை குளிர்ச்சியடையும் என்ற தவறான எண்ணம் எல்லோரிடமும் உள்ளது. இது உண்மையில் வேகமாக மின்சாரத்தை உறுஞ்சு மின்கட்டணத்தை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

ஓஹோ.. முழு நாள் AC யூஸ் செய்தாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா?

இந்த விஷயங்கள் கவனமாக பின்பற்றினால் கரண்ட் பில் கண்டிப்பாக குறையும்:

3. உங்கள் AC சாதனத்தை 24°C டெம்பரேச்சர் அளவில் செட் செய்து பயன்படுத்தினால், மிகவும் குறைவான மின்சாரமே (electricity) தேவைப்படுகிறது என்பதே உண்மையாகும். அதுமட்டுமின்றி, இந்த 24°C வெப்பநிலை மனித உடலுக்கு போதுமான வெப்பத்தை வழங்குகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

4. இன்னும் சரியாக சில வேண்டுமென்றால், ஒவ்வொரு முறையும் நீங்கள் AC வெப்பநிலையை குறைக்கும் பொழுது 6% மின்சார தேவை அதிகமாகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். 20°C முதல் 24°C கீழே குறைந்து 18°C டிகிரி செல்லும் பொழுது உங்கள் AC இருமடங்கு மின்சாரத்தை பயன்படுத்துகிறது.

5. அடுத்தபடியாக நீங்கள் கவனிக்க வேண்டியது AC இன் சுத்தம். உங்கள் வீட்டில் உள்ள AC-யை நீங்கள் 6 மாதத்திற்கு 1 முறை அல்லது வருடத்திற்கு 2 முறை என்று ஜென்ரல் சர்வீஸ் (Ac general service) செய்துகொள்ளலாம். ஆனால், மாதம் தோறும் ஏசி பில்டர்ரை (AC filter) சுத்தம் செய்ய வேண்டும். இதை நீங்களே எளிமையாக யூடியூப் வீடியோ (YouTube video) பார்த்து கூட செய்யலாம்.

6. ஏசி பில்டர்களில் தூசிகள் அடைப்பதனால், உங்கள் ஏசி அறையை வேகமாக குளிர்விக்காது. இதனால், வழக்கத்தை விட அதிக நேரம் ஏசி ஓட வேண்டியதிருக்கும். இதன் காரணமாக மின் கட்டணம் அதிகரிக்கும் என்பதையும் மறக்காதீர்கள். ஏசி பில்டர்களை மாதம் ஒரு முறை சுத்தம் (How to clean AC filter at home) செய்வது மின் கட்டணத்தை குறைக்க உதவும்.

7. கதவு, ஜன்னல் ஆகிவற்றை ஒழுங்காக அடைக்க வேண்டும். மிதமான வேகத்தில் சீலிங் ஃபேனை (ceiling fan) ஏசியுடன் இயக்குவது அறையை வேகமாக குளிர்விக்க உதவும். இதுவும் உங்கள் மின்சார கட்டணத்தை குறைக்க வழிவகுக்கும். இந்த டிப்ஸ்களை எல்லாம் பின்பற்றி உங்கள் ஏசி மின்கட்டணத்தை குறைக்கலாம்.

Best Mobiles in India

English summary
7 Important Tips To Reduce Prolong AC Use and Maintain Low Current Bill Through Out This 2024 Year
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X