Home
News

யார் இந்த லிண்டா யாக்காரினோ! ஏன் உலகமே இப்போது இவரை பற்றி பேசுகிறது? இவர் அப்படி என்ன செய்தார்?

டிவிட்டரின் உரிமையாளரான எலோன் மஸ்க் சமீபத்தில் தனது சமூக ஊடக தளத்தில் ஒரு புதிய தலைமை நிர்வாக அதிகாரியைத் தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மஸ்கின் அறிவிப்பு வரவிருக்கும் புது CEO யார் என்பது குறித்த ஆர்வத்தை தூண்டியுள்ளார்.

கடந்த ஆண்டு (2022) எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கினார். அதன் பிறகு அவர் பல மாற்றங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில், பணிநீக்கங்கள், புதிய பதிவு விதிகள் மற்றும் பணம் செலுத்திய சரிபார்ப்பு பேட்ஜ்கள் என்று பல மாற்றங்களை டிவிட்டர் இந்த சமீப மாதங்களில் கண்டுள்ளது. தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் அறிக்கையின்படி, அடுத்த டிவிட்டர் CEO யார் என்பது கணிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த லிண்டா யாக்காரினோ! ஏன் உலகமே இப்போது இவரை பற்றி பேசுகிறது?

என்பிசி யுனிவர்சலில் விளம்பரத் தலைவருடன் தொடர்புடைய லிண்டா யாக்காரினோ (Linda Yaccarino) தான் அடுத்த டிவிட்டர் CEO-வாக இருக்க வாய்ப்புள்ளது என்று ஊகிக்கப்பட்டுள்ளது. டிவிட்டரின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியின் பாத்திரத்திற்கான முன்னணி போட்டியாளராக ஊகிக்கப்படும் லிண்டா யாக்காரினோ பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ. எலான் மஸ்க் இவரை தேர்வு செய்ததற்கான காரணம் இது தானா?

ட்விட்டரின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரிக்கான சிறந்த வேட்பாளராக வதந்தி பரப்பப்பட்ட லிண்டா யாக்காரினோ, 2011 முதல் என்பிசி யுனிவர்சலில் நிர்வாகியாக இருந்து வருகிறார் என்று அவரது லிங்க்ட்இன் சுயவிவரம் தெரிவிக்கிறது. அவர் தற்போது உலகளாவிய விளம்பரம் மற்றும் கூட்டாண்மைகளுக்கான தலைவராக பணியாற்றுகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்.பி.சி யுனிவர்சலில் அவருடைய தற்போதைய பதவிக்கு முன்பு, யாக்காரினோ கேபிள் பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் விளம்பர விற்பனைப் பிரிவை வழிநடத்தி வந்துள்ளார். இவர் பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். இங்கு இவர் லிபெரல் ஆர்ட்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் படிப்பை படித்திருக்கிறார். அவரது தொழில்முறை அனுபவம் 19 ஆண்டுகள் ஆகும். இக்காலத்திற்குள் இவர் பல நிர்வாக பதவிகளை வகித்திருக்கிறார்.

யார் இந்த லிண்டா யாக்காரினோ! ஏன் உலகமே இப்போது இவரை பற்றி பேசுகிறது?

என்பிசி யுனிவர்சலில் சேருவதற்கு முன்பு, டர்னர் பிராட்காஸ்டிங் சிஸ்டத்தில் டர்னர் என்டர்டெயின்மென்ட் விளம்பர விற்பனையின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் சிஓஓ பதவியை லிண்டா வகித்ததாகக் கூறப்பட்டுள்ளது. வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை படி, தொழில்துறையில் விளம்பரத்தின் செயல்திறனை அளவிடுவதற்கான சிறந்த வழிகளை யாக்காரினோ பரிந்துரைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. விளம்பரங்களை விற்பனை செய்வதில் இவர் கெட்டிக்காரராம்.

பிசினஸ் இன்சைடர், லிண்டா யாக்காரினோ ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவதற்கான தனது ஆர்வத்தைப் பற்றி தனது நண்பர்களிடம் கூறியதாக அப்பத்திரிகை தகவல் தெரிவித்துள்ளது. எலோன் மஸ்க்கிற்கு தனது ஆதரவைப் பற்றி அவர் குரல் கொடுத்துள்ளார். டிவிட்டர் நிறுவனத்தை புதுப்பிக்க அவருக்கு போதுமான நேரம் கொடுக்க வேண்டிய அவசியத்தை ஊக்குவித்திருக்கிறார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
7 Important Things To Know About New CEO Of Twitter Linda Yaccarino
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X