Home
News

NEW RULES ஜூலை 1 முதல் அமல்.. வங்கி, ஆதார், பாஸ்போர்ட், ITR, TDS.. ஒரே நேரத்தில் 7 நிதிசார் மாற்றங்கள்!

2026 ஜூலை 1 ஆம் தேதி முதல் பல முக்கியமான நிதிசார் மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. இந்த மாற்றங்கள் வரி செலுத்துவோர், வங்கி வாடிக்கையாளர்கள், கிரெடிட் கார்டு பயனர்கள், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) விண்ணப்பதாரர்கள் மற்றும் ஆதார் அட்டைதாரர்கள் ஆகியோரை பாதிக்கக்கூடும். இப்படியாக ஜூலை 2026 இல் அமலுக்கு வரவுள்ள 7 முக்கிய நிதிசார் மாற்றங்கள் குறித்த விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2 தாக்கல் செய்வதற்கான காலக்கெடு (ITR-1, ITR-2 deadlines): ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2 படிவங்களை சமர்ப்பிக்கும் வரி செலுத்துவோருக்கு, 2025-26 நிதியாண்டிற்கான (2026-27 மதிப்பீட்டு ஆண்டு) வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2026 ஆகும்.

NEW RULES ஜூலை 1 முதல் அமல்.. ஒரே நேரத்தில் 7 நிதிசார் மாற்றங்கள்!

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை தவறவிடுவது அபராதம், குறிப்பிட்ட வரி முறைகளை தேர்ந்தெடுப்பதில் கட்டுப்பாடுகள் மற்றும் தகுதியான இழப்புகளை (eligible losses) எதிர்கால மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு கொண்டு செல்வதில் (carry forward) தடைகள் போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

2. எஸ்பிஐ கிரெடிட் கார்டு மாற்றங்கள் (SBI credit card changes): குறிப்பிட்ட போன்பே எஸ்பிஐ (PhonePe SBI) கிரெடிட் கார்டுகளுக்கான 'ரிவார்டு பாயிண்ட்' (reward point) திட்டத்தில் மாற்றங்களை எஸ்பிஐ கார்டு (SBI Card) அறிவித்துள்ளது. இவைகள் ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வருகின்றன.

இந்த மாற்றம் போன்பே எஸ்பிஐ கிரெடிட் கார்டு பர்பிள் (PURPLE) மற்றும் போன்பே எஸ்பிஐ கிரெடிட் கார்டு செலெக்ட் பிளாக் (SELECT BLACK) ஆகிய கார்டு வைத்திருப்பவர்களை பாதிக்கிறது. ஏனெனில், ரிவார்டு பாயிண்டுகளை பெறுவதில் புதிய வரம்புகளும், ரிவார்டு பாயிண்டுகள் கிடைக்காத பரிவர்த்தனைகளின் விரிவான பட்டியலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

3. எச்டிஎப்சி கிரெடிட் கார்டு மாற்றங்கள் (HDFC Credit card changes): ஜூலை 1, 2026 முதல், எச்டிஎப்சி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஒரு காலண்டர் காலாண்டிற்குள் (calendar quarter) மூன்று முறை உள்நாட்டு விமான நிலைய ஓய்வறைகளை (lounge) இலவசமாக பயன்படுத்திக்கொள்ளத் தகுதி பெறுவார்கள். இதற்கு, அதற்கு முந்தைய காலாண்டில் அவர்கள் குறைந்தபட்சம் ரூ.60,000 செலவு செய்திருக்க வேண்டும்.

உதாரணமாக, ஜூலை - செப்டம்பர் 2026 காலாண்டில் ஓய்வறை வசதியை பெற, எச்டிஎப்சி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் ஏப்ரல் மற்றும் ஜூன் 2026 க்கு இடைப்பட்ட காலத்தில் ரூ.60,000 அல்லது அதற்கு மேல் செலவு செய்திருக்க வேண்டும். செலவு அடிப்படையிலான இந்த தகுதி விதிமுறை, அதை தொடர்ந்து வரும் ஒவ்வொரு காலாண்டிற்கும் பொருந்தும்.

4. பாஸ்போர்ட் கட்டணங்கள் மாற்றம் (Passport fees changes): சாதாரண மற்றும் 'தட்கல்' (Tatkal) விண்ணப்பதாரர்கள் இருவருக்கும் கடவுச்சீட்டு பெறுவது விரைவில் அதிக செலவு ஆகும் விஷயமாக மாறவுள்ளது. வெளியுறவு அமைச்சகம், சாதாரண மற்றும் தட்கல் கடவுச்சீட்டுகளுக்கான (இந்தியா மற்றும் வெளிநாடுகளில்) சேவை கட்டணத்தை ஜூலை 1, 2026 முதல் உயர்த்துகிறது.

5. வங்கி தயாரிப்புகளை தவறான முறையில் விற்பனை செய்வது குறித்த புதிய விதிகள் (mis-selling of bank products new rules): வங்கிகள் நிதி தயாரிப்புகளை தவறான முறையில் விற்பனை செய்வதை கட்டுப்படுத்த ஆர்பிஐ (RBI) புதிய விதிகளை அறிவித்துள்ளது. புதிய விதிமுறைகளின்படி, தவறான முறையில் விற்கப்பட்ட தயாரிப்புகளை வாங்கிய வாடிக்கையாளர்கள், முழு தொகையையும் திரும்ப பெறவும், இழப்புகளுக்கான இழப்பீட்டை பெறவும் உரிமை பெறுவார்கள். இந்த விதிகள் ஜூலை 1, 2026 அன்று அமலுக்கு வருகின்றன.

6. டிடிஎஸ் வைப்புக்கான காலக்கெடு (TDS deposit deadline): வருமான வரி சட்டம், 2025-ன் விதிகளின் கீழ் மதிப்பீட்டு அதிகாரியால் (Assessing Officer) காலாண்டு வைப்புக்கான ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தால், ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான 'மூலத்தில் பிடித்தம் செய்யப்படும் வரி'யை (TDS) செலுத்துவதற்கான கடைசி தேதி ஜூலை 7 ஆகும்.

7. ஆதார் அட்டையில் இலவச இமெயில் அப்டேட் (Aadhaar Card Free Email Update): ஜூலை 1 ஆம் தேதி முதல், ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியை (Email Address) புதுப்பிப்பதற்கான ரூ.75 கட்டணத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தற்காலிகமாக ரத்து செய்து உள்ளது. இந்த சேவை அடுத்த ஆறு மாதங்களுக்கு (அதாவது டிசம்பர் 31, 2026 வரை) முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

Best Mobiles in India

English summary
7 Financial changes New Rules from July 1 on ITR TDS Aadhaar Passport SBI HDFC Bank and more
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X