வரும் ஜூனில் புதிய ஐபேட்: ஆப்பிள் தகவல்

Posted By: Karthikeyan
வரும் ஜூனில் புதிய ஐபேட்: ஆப்பிள் தகவல்

வரும் ஜூனில் ஐபோன்-5 அறிமுகமாகும்போது 7.85 இன்ச் திரை கொண்ட ஒரு புதிய ரக ஐபேடையும் ஆப்பிள் அறிமுகப்படுத்த உள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

இந்த புதிய 7.85 ஐபேட் ஆப்பிள் ஐபேட் மற்றும் ஐபேட் 2 ஆகியவை கொண்டிருந்த அதே 1024x786 ரிசலூசனைக் கொண்டிருக்கும் என்று அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் இந்த புதிய ஐபேட் வரும் ஜூன் மாதத்தில் கலிபோர்னியாவில் நடைபெறும் டபுள்யுடபுள்யுடிசி (வேர்ல்டு வைட் டிவலப்பர்ஸ் கான்பரன்ஸ்) கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படும் என்று ஆப்பிள் அதிகாரி க்ரூபர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சிறிய டேப்லெட்டை அறிமுகம் செய்தன் மூலம் எதிர்காலத்தில் இந்த டேப்லெட் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று அவர் நம்புகிறார்.

இதன் விலை 199 டாலரிலிருந்து 299 அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்