Jio, Airtel சிம்களுக்கு குட்பை! மாதாந்திரம் ரூ.166 க்கு 1 ஆண்டு வேலிடிட்டி, 600GB, வாய்ஸ், SMS.. BSNL சம்பவம்!
பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அந்த அதிக பயனர் தளத்தை ஈர்ப்பதற்காக பல மலிவான ரீசார்ஜ் திட்டங்களை ஊக்குவித்து வருகிறது. அரசுக்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனத்திடம் ரூ.107 முதல் தொடங்கும் ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன.
ஒருவேளை நீங்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் பல நன்மைகளை வழங்கும் நீண்ட கால ரீசார்ஜ் திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால், பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது 1 வருடம் அல்லது 365 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.1,999 மதிப்புள்ள திட்டத்தை கொண்டுள்ளது. மாதந்தோறும் ரூ.166 என்கிற செலவில் 12 மாதங்களுக்கு போதும் போதும் என்கிற அளவிற்கு நன்மைகளை வாரி வழங்குகிறது!

ஒப்பிட்டு பார்க்கும் போது, ஏர்டெல் நிறுவனமானது அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுடன் 30ஜிபி டேட்டாவை 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் ரூ.2,249 க்கு வழங்குகிறது. மேலும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் 365 நாள் ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.3,599 ஆகும். எப்படி பார்த்தாலும் பிஎஸ்என்எல் ரூ.1,999 திட்டம் மிகவும் மலிவான விருப்பமாக இருக்கிறது.
பிஎஸ்என்எல்-ன் ரூ.1,999 ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளை பொறுத்தவரை இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் மொத்தம் 600ஜிபி டேட்டா ஆகியவைகளை வழங்கும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் அல்லது 1 ஆண்டு ஆகும்
இந்த திட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வட்டங்களிலும் உள்ள பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த ஒன்-டைம் ரீசார்ஜ் ஆனது மாதாந்தோறும் ரீசார்ஜ் செய்யும் தேவையை நீக்குவது மட்டுமின்றி, 1 ஆண்டு முழுவதும் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய அனைத்து முக்கிய நன்மைகளையும் மலிவான விலைக்கு வழங்குகிறது.
சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனமானது, தனது மொபைல் சேவைகளை முயற்சி செய்து பார்க்க விரும்பும் புதிய பயனர்களுக்காக வெறும் ரூ.1 க்கு ஆசாதி கா பிளான் (Azadi Ka Plan at Rs.1) என்கிற சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது
வெறும் ரூ.1 என்கிற விலையின் கீழ் கிடைக்கும் இந்த திட்டம், தினமும் 2ஜிபி டேட்டா (Daily 2GB Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் (Daily 100 SMS) ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இது அனைத்தும் 30 நாட்கள் செல்லுபடியாகும் (30 Days Validity) மற்றும் உங்களுக்கு இலவச பிஎஸ்என்எல் சிம் கார்டும் (Free BSNL SIM Card) கிடைக்கும்.
இந்த சலுகை 2025 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். ஆர்வமுள்ள பயனர்கள் இந்த சலுகையை பெற தங்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது சில்லறை விற்பனையாளரை அணுகலாம். இது நிச்சயமாக பிஎஸ்என்எல் சேவையை நோக்கி புதிய பயனர்களை ஈர்க்கும். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் உள்ள மக்கள் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை முயற்சிக்க ஊக்குவிக்கப்படுவார்கள்.
இதன் மூலம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சந்தாதாரர் தளம் விரிவாகலாம். தற்போதைக்கு பிஎஸ்என்எல்-ன் சந்தாதாரர் தளம் மோசமான நிலையில் உள்ளது. டிராய் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி,பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது 305,766 வயர்லெஸ் சந்தாதாரர்களை (ஜூன் 30, 2025 நிலவரப்படி) இழந்து உள்ளது.


Click it and Unblock the Notifications








