ஆளுக்கு 2 BSNL சிம் கார்டு பார்சல்.. 300 நாட்கள் வேலிடிட்டி.. 600GB டேட்டா.. அள்ளி கொடுக்கும் அரசாங்க கம்பெனி!
2024 ஜூலை 3 ஆம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் அறிவித்த ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் திட்டங்களின் மீதான விலை உயர்வு நடைமுறைக்கு வந்தது. ஜூலை 4 ஆம் தேதி முதல் விஐ என்று அழைக்கப்படும் வோடாபோன் ஐடியா நிறுவனமும் அதன் ரீசார்ஜ் திட்டங்களின் மீதான விலை உயர்வை அமல் படுத்தியுள்ளது. ஆகமொத்தம் இந்தியாவில் உள்ள 3 தனியார் டெலிகாம் நிறுவனங்களுமே அதிகரிக்கப்பட்ட விலைகளை நடைமுறைப்படுத்திவிட்டன.
மொத்த இந்தியாவையம் உலுக்கிய இந்த "விலை உயர்வு புயலில்" சிக்காத ஒரே டெலிகாம் நிறுவனம்.. அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் மட்டுமே ஆகும். ஒரு பேச்சுக்கு கூட, ஓரிரண்டு திட்டங்களின் விலைகளை கூட உயர்த்தாமல் பிஎஸ்என்எல் நிறுவனமானது மிகவும் புத்திசாலித்தனமான வேலையை பார்த்துள்ளது.

பான் இந்தியா அடிப்படையிலான 4ஜி சேவைகளை இன்னும் அறிமுகம் செய்யவில்லை என்றாலும் கூட.. ரூ.600 வரை விலை உயர்த்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் திட்டங்களை ரீசார்ஜ் செய்வதற்கு பிஎஸ்என்எல்-ன் திட்டங்கள் எவ்வளவோ பராவாயில்லை என்றெண்ணி.. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் புதிய வாடிக்கையாளர்கள் வந்துசேறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய வருவாயை அதிகரிப்பதற்காக மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களை 25% வரை விலை உயர்த்தி உள்ளன. இந்த திடீர் நடவடிக்கையானது, இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை கடுமையாக பாதித்துள்ளது; இன்னும் பாதிக்கும்!
இதிலிருந்து தப்பிக்க.. அடுத்தடுத்த மாதங்களில் ரீசார்ஜ் செய்வதற்காக உங்கள் பாக்கெட்டில் விலைபோகும் பெரிய-பெரிய ஓட்டைகளை தவிர்க்க.. பிஎஸ்என்எல் சேவைக்குள் நுழையலாம். குறிப்பாக உங்களுக்கு நீண்ட கால வேலிடிட்டியை வழங்கும் ஒரு மெயின் ரீசார்ஜ் இருந்தால் போதும்.. அதன் பெரிய அளவிலான டேட்டா நன்மைகள் எதுவும் தேவை இல்லை என்றால்.. நீங்கள் முதலில் செய்ய வேண்டியது ஒரு பிஎஸ்என்எல் சிம் கார்ட்டை வாங்குவது தான்!
பிஎஸ்என்எல் நிறுவனமானது 150 நாட்கள், 300 நாட்கள் மற்றும் 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியை கொண்ட திட்டங்களை மிகவும் மலிவான விலைக்கு வழங்குகிறது. அதென்ன திட்டங்கள்? அவைகளின் விலை நிர்ணயம் என்ன? நீண்ட கால வேலிடிட்டியை தவிர்த்து வேறு என்னென்ன நன்மைகளை வழங்குகின்றன? இதோ விவரங்கள்:
பிஎஸ்என்எல் ரூ.397 திட்டம்: பிஎஸ்என்எல் நிறுவனம் பொதுவாக திருவிழாக் காலங்களில் ரூ.397 திட்டத்தை வழங்கும். இது மொத்தம் 150 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் முதல் 30 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். டேட்டா நன்மையை பொறுத்தவரை 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும்.
பிஎஸ்என்எல் ரூ.797 திட்டம்: இந்த திட்டம் முதல் 60 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited calls for the first 60 days) வழங்கும். டேட்டா நன்மையை பொறுத்தவரை 2ஜிபி டேட்டாவை வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 300 நாட்கள் ஆகும்.
பிஎஸ்என்எல் ரூ.1999 திட்டம்: வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை விரும்பும் பயனர்களுக்கு இதுவொரு பெஸ்ட் ரீசார்ஜ் ஆகும். இது 365 நாட்கள் செல்லுபடியாகும். இது 600ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், பிஎஸ்என்எல் ட்யூன்கள் மற்றும் பல்வேறு மூன்றாம் தரப்பு சேவைகளுக்கான சந்தாக்களை வழங்குகிறது.
இருப்பினும், பிராந்தியம் மற்றும் மாநிலத்தின் அடிப்படையில் மேற்கண்ட 3 திட்டங்களிலும் விலைகளில் சிறிய அளவிலான வித்தியாசத்தை நீங்கள் காணலாம். பிஎஸ்என்எல் நிறுவனமானது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சேவைகளை வழங்குகிறது என்றாலும் கூட, முன்னரே குறிப்பிட்டபடி இது 4ஜி சேவைகளை பான்-இந்தியா அடிப்படையில் அறிமுகம் செய்யவில்லை என்பதால், ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ வழங்கும் சேவைகளுடன் ஒப்பிடும்போது (சில இடங்களில்) கொஞ்சம் பலவீனமானதாக இருக்கலாம். அதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








