ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் 60 சதவகித குரோம் பயன்பாடு பாதுகாக்கப்படுகிறது

|

கூகுளின் புதிய பிளாக் போஸ்ட்டின் படி, ஆண்ட்ராய்டின் 60 சதவிகித குரோம் பயன்பாடு பாதுகாக்கப்படுவது தெரியவந்துள்ளது. முன்னதாக ஒரு ஆண்டிற்கு முன் இந்த எண்ணிக்கை 42 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் 60 சதவகித குரோம் பயன்பாடு பாதுகாக்கப்படுகிற

சமீபத்திய ஆய்வுகளில் கூகுள் குரோம் மிகவும் பாதுகாப்பான பிரவுசர் என்பது தெரியவந்துள்ளது. பல்வேறு பாதுகாப்பு மற்றும் உயர் ரக தொழில்நுட்பம் மூலம் ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கும் தளங்களை கண்டறியும் நுட்பங்களை அதிவேகமாக மேற்கொள்ளும் எனறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரோமின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அதன் பாதுகாப்பு தரத்தை உயர்த்துவதே இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தரவுகளை பாதுகாப்பதற்கென தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் குரோம் பாதுகாப்பு மேளாலர் எமிலி ஸ்கெக்டர் இதுகுறித்த வலைத்தள பதிவில், வாடிக்கையாளர்கள் தவறான தளத்தை பயன்படுத்த முயலும் போது எச்சரிக்கை செய்து அவர்களுக்கு உதவியாக இருப்பதோடு, அவர்களின் நேரத்தை சேமித்து, தளங்களின் பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

ரெடி ஆகிக்கோங்க.! உங்களை குறிவைக்கிறது சாம்சங் கேலக்ஸி எஸ்9 & எஸ்9 ப்ளஸ்.!ரெடி ஆகிக்கோங்க.! உங்களை குறிவைக்கிறது சாம்சங் கேலக்ஸி எஸ்9 & எஸ்9 ப்ளஸ்.!

குரோம் இயங்குதளம் மற்றும் மேக் மூலம் மேற்கொள்ளப்படும் குரோம் பயன்பாடுகளில் 75 சதவிகிதம் பாதுகாக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டில் மேக் இயங்குதளத்தில் 60 சதவிகிதமாகவும், குரோம் இயங்குதளத்தில் 67 சதவிகிதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் 100/71 தளங்களில் HTTPS பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஜப்பானில் HTTPS ப்ரோடோகால் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
HTTPS usage surge recently in Japan; large sites like Rakuten, Cookpad, Ameblo, and Yahoo Japan all made major headway towards HTTPS in 2017.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X