பதறும் Google.. உங்க போன்ல "இது" இருந்தா... உடனே டெலிட் செய்ங்க.. Goldoson-ஐ சாதாரணமா நினைக்காதீங்க!
கூகுள் (Google) நிறுவனம் ஏன் பதறுகிறது? 60 ஆப்களின் பட்டியல் எதற்காக வெளியிடப்பட்டுள்ளது? அவைகளை ஏன் உடனே டெலிட் அல்லது அன்இன்ஸ்டால் (Delete / Uninstall) செய்ய வேண்டும்? என்பதை புரிந்துகொள்ள வேண்டுமென்றால்.. கோல்டோசன் (Goldoson) என்றால் என்ன என்பதை பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
கோல்டோசன் என்றால் என்ன? கோல்டோசன் என்றால் 60 க்கும் மேற்பட்ட மால்வேர் ஆப்களை உள்ளடக்கிய தீங்கிழைக்கும் சாஃப்ட்வேர் லைப்ரரி (Malicious Software Library) ஆகும். பிரபல பாதுகாப்பு நிறுவனமான மெக்காஃபி (McAfee) மற்றும் கூகுள் (Google) நிறுவனத்தின் கூற்றுப்படி - இந்த 60 ஆப்களில் ஒன்றைக்கூட நீங்கள் பயன்படுத்த கூடாது!

ஏனென்றால் கோல்டோசன் மால்வேரால் "பாதிக்கப்பட்டுள்ள" ஆப்களானது உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆப்களின் முழு பட்டியல் (Lists of apps installed) மற்றும் உங்கள் போனுடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ள வைஃபை மற்றும் ப்ளூடூத் டிவைஸ்களின் தகவல்களை (Information's about Wi-Fi and Bluetooth devices) சேகரிக்க முடியும்.
மேலும் இந்த ஆப்களால் உங்களுடய அனுமதியின்றி பேக்கிரவுண்டில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் விளம்பர மோசடிகளையும் (Ad fraud) செய்ய முடியும். எல்லாவற்றை விடவும் மோசமான விஷயம் என்னவென்றால், கோல்டோசன் லைப்ரரியில் உள்ள 60 க்கும் மேற்பட்ட ஆப்களானது 100 மில்லியனுக்கும் மேலான பதிவிறங்களை கண்டுள்ளது.
கோல்டோசன் மால்வேரால் "பாதிக்கப்பட்ட" 60 க்கும் மேற்பட்ட ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டன. ஆனால் அது மட்டுமே போதாது. குறிப்பிட்ட ஆப்களை தங்கள் மொபைல் போன்களில் ட்வுன்லோட் / இன்ஸ்டால் செய்த அனைவருமே அவைகளை டெலிட் / அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த எச்சரிக்கை இந்தியர்களுக்கு பொருந்தாதது. ஏனென்றால் 60 க்கும் மேற்பட்ட கோல்டோசன் மால்வேர் ஆப்களானது தென் கொரிய சந்தைக்கான கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஒன் ஸ்டோரில் மட்டுமே அணுக கிடைக்கின்றன. எனவே இந்தியா உட்பட பிற பிராந்தியங்களில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்கள் இது குறித்து கவலைப்பட தேவையில்லை. கோல்டோசன் மால்வேரால் "பாதிக்கப்பட்டுள்ள" 60க்கும் மேற்பட்ட ஆப்களின் பட்டியல் இதோ:
Money Manager Expense & Budget
TMAP
Lotte Cinema
Genie Music
Cultureland version
GOM Player
Megabox
LIVE Score Real-Time score
Pikicast
Compass 9: Smart Compass
GOM Audio - Music, Sync lyrics
TV - All About Video
Guninday
Item mania
LOTTE WORLD Magicpass
Bounce Brick Breaker
InfiniteSlice Infinite Slice
Norae bang
SomNote - Beautiful note app
Korea Subway Info: Metroid
GoodTVBible
Happy Mobile Happy Screen
UBhind: Mobile Tracker Manager
Mafu Driving Free
Girl singer WorldCup
FSP Mobile
Audio Recorder
Catmera
Cultureland Plus
Simple Air
Lotteworld Seoul Sky
Snake Ball Lover
Play Geto
Memory Memo
PB Stream
Money Manager (Remove Ads)
Inssaticon - Cute Emoticons
ECloud
SCinema
Ticket Office
Lotteworld Aquarium
Lotteworld Water Park
T map for KT, LGU
Random number
AOG Loader
GOM Audio Plus - Music, Sync
Swipe Brick Breaker
Safe Home
Chuncheon
Fantaholic
Cinecube
TNT
Bestcare Health
InfinitySolitaire
New Safe
Cashnote
TDI News
Eyesting
TingSearch
Krieshachu Fantastic
Yeonhagoogokka


Click it and Unblock the Notifications