கேம் விளையாட 11 லட்சத்தை காலி செய்த 6 வயது சிறுவன்.! பதறிப்போன தாய்.! ஆப்பிள் நிறுவனத்தின் மீது புகார்.!

|

வீடியோ கேம் விளையாடுவது என்றால் பெரியவர்கள் தொடங்கி சிறியவர்கள் வரை அனைவருமே குதூகலம் ஆகிவிடுவர், அதுவும் இளைஞர்களை பற்றி சொல்லவே தேவையில்லை. அதுவும் இந்த காலத்தில் 2D, 3D கேம்கள் என பல வந்தவண்ணம் உள்ளன, மனிதனின் ஓய்வு நேரத்தில் வீடியோ கேம் விளையாடியது போய் தற்போது இளைய தலைமுறையினர் பலர் எந்நேரமும் அதிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர் எனலாம்.

 இந்த கேம்கள் மனிதனை தன்

அந்த அளவுக்கு இந்த கேம்கள் மனிதனை தன் கட்டுபாட்டில் வைத்துள்ளது என்பதை நம் அனைவரும் அறிந்ததே ஆகும். இந்நிலையில்
அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவன் ஆப்பிள் ஐபேடில் கேம் விளையாடி 11 லட்சம் ரூபாயை வீணாக்கியதால் பெற்றோர்அதிர்ச்சியடைந்தனர்.

ஜார்ஜ் ஜான்சன் என்ற 6 வயது மகன்

நியூயார்க் பகுதியை சேர்ந்த ஜெஸ்சிகா ஜான்சனுக்கு, ஜார்ஜ் ஜான்சன் என்ற 6 வயது மகன் உள்ளார். குறிப்பாக ஜெஸ்சிகாவீட்டில் இருந்து வேலை பார்ப்பதும், அவரின் அன்பு மகன் ஜெஸ்சிகாவின் செல்போனில் கேம் விளையாடுவது வாடிக்கை.

Amazfit GTR 2e மற்றும் Amazfit GTS 2e ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.. என்னவெல்லாம் இருக்கு இந்த வாட்சில்?Amazfit GTR 2e மற்றும் Amazfit GTS 2e ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.. என்னவெல்லாம் இருக்கு இந்த வாட்சில்?

டந்த ஜூலை மாத துவகத்தில்

மேலும் கடந்த ஜூலை மாத துவகத்தில் ஜெஸ்சிகாவின் கணக்கில் இருந்து 25 முறை பணம் எடுக்கப்பட்டது ஜெஸ்சிகாவுக்கு தெரியவந்துள்ளது. மொத்தமாக 2500 டாலர்கள் எடுக்கப்பட்டது. எனவே வங்கிக்கணக்கில் ஏதேனும் மோசடி நடைபெறுவதாக நினைத்த ஜெஸ்சிகா வங்கியில் புகார் அளித்துள்ளார்.

ஜூலை மாத இறுதியில்

அதுவும் ஜூலை மாத இறுதியில் அவர் கணக்கில் இருந்து சுமார் 16.293 டாலர்கள் எடுக்கப்பட்டது. இதனை அடுத்து வங்கியின் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். அதன்பின்பு தான் தெரியவந்துள்ளது இதற்கு காரணம் வங்கி மோசடி அல்ல. தன்னுடைய மகன் விளையாடிய கேம்தான் என்று. மேலும் மகன் விளையாடியது ஆப்பிள் நிறுவனம் தொடர்புடைய கேம் என்பதால், ஆப்பிள் நிறுவனத்தை தொடர்புகொண்டு கேட்டுள்ளார் ஜெஸ்சிகா.

ஜெஸ்சிகாவின் 6 வயது மகன் ஜார்ஜ்,

அதன்பின்பு ஜெஸ்சிகாவின் 6 வயது மகன் ஜார்ஜ், ஐபேடில் உள்ள சோனிக் போர்ஸ் என்ற கேம் விளையாடியதும் அதில் வழங்கப்படும் கோல்டு காயின்ஸை பெறுவதற்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் வரை செலவிட்டதும் தெரியவந்தது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக பணம் எடுக்கப்பட்டு மொத்தமாக இந்திய மதிப்பில் சுமார் 11 லட்சம் வரை ஜெஸ்சிகா பணத்தை இழந்துள்ளார். உடனடியாக நடந்த விவரத்தை ஆப்பிள் நிறுவனத்திற்கு புகாராக தெரிவித்துள்ளார். ஆனால் இரண்டு மாதத்துக்கு மேல் சென்றுவிட்டதால்பணத்தை திருப்பித் தர முடியாது என கைவிரித்துவிட்டது ஆப்பிள நிறுவனம்.

விளையாட்டில் வரும் பணம்

மேலும் இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டியுள்ள தாய் ஜெஸ்சிகா குறிப்பிட்டது என்னவென்றால், விளையாட்டில்வரும் பணம் நிஜ பணம் என என் மகனுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவன் சிறுவன், விளையாட்டுப்பையன் என்று தெரிவித்துள்ளார்.

சிறுவர்களிடம் மொபைல் உள்ளிட்ட சில

குறிப்பாக சிறுவர்களிடம் மொபைல் உள்ளிட்ட சில சாதனங்களை கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டுமென ஆப்பிள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. மேலும் எங்களது தயாரிப்புகளில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. உங்களது வங்கிக்கணக்குகளை சரியாக லாக் செய்து வைக்க ஆப்ஷன்கள் உள்ளன. குழந்தைகள் பயன்படுத்தும் நிலை இருந்தால் வங்கி கணக்குகளை கவனமாக லாக்செய்துவைக்கலாம் என்று தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

News Source: indiatimes.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
6-Year-Old Spent Over Rs 11 Lakh On Game On Mom's iPad, Apple Refused To Refund: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X