Home
News

6 நம்பமுடியாத Google Chrome எக்ஸ்டென்ஷன்கள்.! கட்டாயம் ட்ரை செஞ்சு பாருங்க.! அப்புறம் விடவே மாட்டீங்க.!

முந்தைய காலங்களில் இணையதளத்தில் ப்ரௌசிங் செய்ய குறிப்பிட்ட சில தளங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், சமீபகாலமாக பல இன்டர்நெட் பிரௌசர்கள் (Internet Browser) மக்கள் மத்தியில் உலா வர ஆரம்பித்துவிட்டது.

என்ன தான் பல பிரௌசர்கள் வந்தாலும், மக்கள் கூகுள் குரோம் (Google Chrome) பிரௌசரை அதிகமாகிப் பயன்படுத்துகிறார்கள். இன்டர்நெட் ப்ரௌசர்களில் கூகுள் குரோம் முதன்மை வகிக்கிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது.

6 நம்பமுடியாத Google Chrome எக்ஸ்டென்ஷன்கள்.! கட்டாயம் ட்ரை செய்யுங்க!

என்னது.! மொத்தம் 1,37,000 Google Chrome எக்ஸ்டென்ஷன்ஸ் டவுன்லோட் செய்ய கிடைக்கிறதா?

இந்த கூகுள் குரோமானது, கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் இதில் பல கவர்ச்சிகரமான அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். அவற்றில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய ஒன்று கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன்கள் (Google Chrome Extensions). கூகுள் குரோமில் சுமார் 1,37,000 எக்ஸ்டென்ஷன்கள் உள்ளன என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள்.. அது தான் உண்மை. அவற்றில் முக்கியமான 6 எக்ஸ்டென்ஷன்களைப் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இந்த 6 எக்ஸ்டென்ஷன்களும், உங்கள் நேரத்தை மிச்சம் செய்யும் என்பதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். இன்றைய சூழ்நிலையில் நேரம் மிச்சமாவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று தானே.!

1. டார்க் ரீடர் (Dark Reader)

கருப்பு அபசகுனமான நிறமாகக் கருதப்பட்டு வந்த நிலையில், இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்தமான நிறமாக மாறிவிட்டது. தாங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் கருமை இருப்பது பலருக்குப் பிடித்துள்ளது. அப்படி, எப்போதுமே வெண்மையான பேக்ரவுண்டையே (Background) பயன்படுத்திச் சளித்துப் போன மக்களுக்கு பிடித்தமான விஷயமாக மாறியது தான் டார்க் தீம் மோடு.

கூகுள் குரோமில் இருக்கும் டார்க் ரீடர் என்ற எக்ஸ்டென்ஷனை பயன்படுத்தினால் அதில் வரும் அனைத்து இணையதளங்களும் டார்க் கலர் பேலட்டாக (Dark Color Pallet) மாற்றப்படும். டார்க் தீமில் (Dark Theme) இயக்கப்படாத இணையத்தள பக்கங்களைக் கூட இது டார்க் தீம் மோடுக்கு மாற்றிவிடும். எல்லா நேரங்களிலும் டார்க் ப்ரௌவுசிங் அனுபவத்தை நீங்கள் பெற வேண்டும் என்று நினைத்தால், கட்டாயம் இந்த டார்க் ரீடர் எக்ஸ்டன்ஷனை பயன்படுத்தலாம்.

6 நம்பமுடியாத Google Chrome எக்ஸ்டென்ஷன்கள்.! கட்டாயம் ட்ரை செய்யுங்க!

2. தி கேமலைஸர் (The Camelizer)

முன்பெல்லாம், பண்டிகை காலத்தில் மட்டும்தான் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், இன்றோ தினமும் ஏதாவது ஒரு பொருள் தள்ளுபடியில் வாங்கக் கிடைக்கிறது. முக்கியமாக அமேசான் தளம் போன்ற இடங்களில் ஒரே பொருள் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு சலுகையுடன் விற்பனை செய்யப்படும். இதில் எப்போது அதிக சலுகை கிடைக்கிறது என்பதை உங்களால் கண்காணிக்க முடியாமல் குழம்பி இருப்பீர்கள்.

ஆனால், இப்படி ஒரு குழப்பம் உங்களுக்குத் தேவையே இல்லை. ஏனெனில், இனி நீங்கள் தி கேமலைசர் எக்ஸ்டென்ஷனை பயன்படுத்தத் துவங்கப் போகிறீர்கள். ஆன்லைனில் விற்பனையாகும் ஒரு பொருளின் விலை எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதனை கண்காணித்துக் காட்டும் வேலையை இது செய்கிறது. மேலும், மலிவான விலை வரும் பொழுது உங்களுக்கு நோட்டிபிகேஷன் (Notification) அனுப்பும். இதன் மூலம் உண்மையான தள்ளுபடி விலையில் உங்களால் பொருட்களை வாங்க முடியும்.

3. ப்ரைவசி பேட்ஜர் (Privacy Badger)

இந்த எக்ஸ்டென்ஷன் ட்ராக்கர்களை (Tracker) பிளாக் (Block) செய்யும். இதன் மூலம் உங்களது பிரைவசிக்கு உத்தரவாதம் கிடைக்கும். யாராலும் உங்கள் ப்ரௌசிங் ஹிஸ்ட்ரியை (Browsing History) பயன்படுத்தி தவறான செயல்பாடுகளில் ஈடுபட முடியாது. மிகவும் பாதுகாப்பான பிரௌசிங் அனுபவத்திற்கு இது கட்டாயம்.

4. பானிக் பட்டன் (Panic Button)

இணையதளத்தை ஆர்வமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது திடீரென யாரேனும் அறைக்குள் வந்தாலோ, அல்லது கணினியை எட்டிப் பார்த்தாலோ, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அவர்களுக்கு தெரியாமல் மறைக்க, அவசர-அவசரமாக ஓபன் செய்து வைத்திருக்கும் டேப்களை (Tab) ஒவ்வொன்றாக க்ளோஸ் (Close) செய்ய ஆரம்பிப்போம்.

ஆனால், இனி அந்த பதட்டம் தேவையே இல்லை. இந்த பானிக் பட்டன் எக்ஸ்டென்ஷனை பயன்படுத்தினால், நீங்கள் ஓபன் செய்து வைத்திருக்கும் அனைத்து டேப்களும் ஒரே சமயத்தில் புக்மார்க்கில் (Bookmark) ஒளிந்து கொள்ளும். உங்களுக்கு தேவைப்படும் போது அதனை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். உண்மையாகவே இந்த பேனிக் பட்டன் ஒரு சிறந்த கண்டுபிடிப்பு தான். ட்ரை செய்து பாருங்கள்.

6 நம்பமுடியாத Google Chrome எக்ஸ்டென்ஷன்கள்.! கட்டாயம் ட்ரை செய்யுங்க!

5. டிக்ரீஸ்ட் ப்ரொடக்டிவிட்டி (Decreased Productivity)

ஒரு சில இணையதளங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் நம்மை சுற்றி இருப்பவர்கள் நாம் என்ன செய்கிறோம் என்பதனை கவனித்துப் பார்க்க நேரலாம். இந்த எக்ஸ்டென்ஷனை பயன்படுத்தும் போது ஒரு இணையதளத்திலிருக்கும் டிசைன்கள் அனைத்தும் மாற்றப்பட்டு பிளைன் டெக்ஸ்ட்டாக (Plain Text) காட்டப்படும். இதனால் தேவையில்லாமல் மற்றவரது கவனம் நம் பக்கம் ஈர்க்கப்படாது. நிம்மதியாக வேலை பார்க்கலாம்.

6. ஃப*க் ஓவர்லே (F*ck Overlay)

ஒரு சில இணையதளங்களில் முக்கியமான தகவல்களை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போது ஆட் பிளாக்கர் (AdBlocker) என்ற நோட்டிபிகேஷன் (Notification) உங்கள் திரையில் பாப் (Pop) ஆகும். ஆட் பிளாக்கரை ஆஃப் செய்தால் மட்டுமே அந்தத் தகவலை உங்களால் தொடர்ந்து படிக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகும். அந்த சமயத்தில் வேறு வழியின்றி ஆட் பிளாக்கரை ஆஃப் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள்.

இனி அப்படி கஷ்டப்படத் தேவையில்லை. இந்த எக்ஸ்டென்ஷனை பயன்படுத்தினால் டர்ன் ஆஃப் ஆட் பிளாக்கர் (Turn off AdBlocker) என்ற நோட்டிபிகேஷன் வரும் சமயங்களில், அந்த இணையதள பக்கத்தை ரைட்-கிளிக் (Right-click) செய்து தடையில்லாமல் தொடர்ந்து படிக்க வேண்டும் (Continue reading without Interruption) என்பதனை தேர்வு செய்யலாம். இதன் மூலம் ஆட் பிளாக்கரை ஆஃப் செய்யாமலேயே உங்களால் படித்து மகிழ முடியும்.

இந்த 6 அட்டகாசமான கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன்களை ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள். மற்றவர்களுடன் இந்த தகவலைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
6 unbelievable google chrome extensions you should try now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X