யாருக்கு பாதிப்பு?- இன்று முதல் ஒன்று சேரும் 6 கிரகங்கள்: விளைவு என்ன?
ஜோதிடக் கணிப்பின்படி தனுசு ராசியில் இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு சூரியன், சந்திரன், குரு, சனி, புதன், கேது ஆகிய 6 கிரகங்களும் ஒன்றாக சேர்ந்து ராகுவின் பார்வையை பெறுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து பரவலாக தெரிவிக்கப்படுகிறது.

12 ராசிக்காரர்களுக்கும் பாதிப்பு ஏற்படுமா
மேலும் இதனால் 12 ராசிக்காரர்களுக்கும் பாதிப்பு ஏற்படுமா என்ற காரணங்கள் குறித்து ஜோதிடர்கள் அதன் பலன்களை கணித்து வருகின்றனர். இதையடுத்து பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த கணிப்பை விஞ்ஞானிகள் முற்றிலும் மறுத்து உள்ளனர்.

6 கோள்கள் சேர்ப்பு பாதிப்பு ஏற்படாது: விஞ்ஞானிகள்
6 கோள்களும் ஒன்று இணைவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் சௌந்தரராஜன் தெரிவித்து இருக்கிறார். கோள்கள் ஒன்று சேருவது என்று அவ்வப்போது நிகழும் என்றும் இது பூமியில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளார்.

1962 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு
இதேபோல் கடந்த 1962 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை ராகு தவிர மற்ற 8 கிரகங்கள் மகரராசியில் ஒன்று சேர்ந்தது. அந்த சமயத்தில் உலகம் அழிந்து விடும் என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறியிருக்கிறார்கள். அதை ஒருசில ஜோதிடர்கள் மறுத்தும் இருக்கிறார்கள்.

மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்துள்ளது
அந்த கிரக சமயத்தில் சாலையில் போக்குவரத்து குறைவாகவே இருந்துள்ளது. ரயில், பேருந்து போக்குவரத்துகளிலும் பயணிகள் குறைவாகவே இருந்துள்ளனர். அதற்கு காரணம் அந்த கிரக ஒன்று சேரும் நாளில் கடல் கொந்தளிப்பு ஏற்படும் என்று பரவிய வதந்திதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளைவு என்னவாக இருக்கும்
அதுமட்டுமின்றி கடல் கொந்தளிக்கும் என்று பரவிய வதந்தி காரணமாக கடலோரத்தில் மக்கள் இடம்பெயர்ந்தும் இருக்கிறார்கள் என செய்திகள் அந்த காலக்கட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால் பாதிப்பு என்று எதுவும் ஏற்படவில்லை. அந்த காலக்கட்டம் போலவே தற்போது 6 கிரகங்கள் ஒன்று சேருகிறது. இதனால் விளைவு ஏற்படாது என்று விஞ்ஞானிகள் எடுத்துரைக்கின்றனர். மேலும் ஒன்று சேரும் கிரகங்களால் ஏற்படும் உண்மை விளைவு குறித்து பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications