மரத்தில் கார் மோதி உயிரிழந்த 6 பேர்.. கடமையை செய்த Apple iPhone 14!

|

அமெரிக்காவில் கார் மரத்தில் மோதிய விபத்தில் 6 பேர் உயரிழந்தனர். இதை கண்டறிந்த ஆப்பிள் ஐபோன் தானாக போலீஸாருக்கு விபத்து குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அது எப்படி ஆப்பிள் ஐபோன் தானாக எச்சரிக்கை விடுத்தது, விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விவரத்தை பார்க்கலாம்.

விபத்தில் 6 பேர் மரணம்..

விபத்தில் 6 பேர் மரணம்..

அமெரிக்காவில் கார் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த காரில் ஐபோன் 14 இருந்திருக்கிறது. விபத்தை அறிந்த அந்த ஐபோன் 14 தானாகவே அவசரகால எச்சரிக்கை எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அந்த காரில் பயணம் செய்த 21 முதல் 24 வயதுடைய 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகிய 6 பேரும் விபத்தில் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடமையை செய்த ஐபோன் 14

கடமையை செய்த ஐபோன் 14

ஆப்பிள் ஐபோன் 14 இல் உட்பொதிக்கப்பட்டிருந்த அம்சமானது கார் விபத்தை தானாக கண்டறிந்து உடனடியாக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அசோசியேட்டட் பிரஸ்ஸின் அறிக்கைபடி, அமெரிக்காவின் நெப்ராஸ்கா பகுதியில் ஒரு கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 6 பேரும் சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது. அந்த காரில் பயணித்த ஒருவரிடம் ஐபோன் 14 இருந்துள்ளது.

கார் விபத்துக்குள்ளானதை கண்டறிந்த ஐபோன் 14 உடனடியாக அவசரகால உதவி எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் சரியாக தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து கண்டறிதல் அம்சம்

விபத்து கண்டறிதல் அம்சம்

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு புது மாடல்களிலும் புதுமைகளை புகுத்துவது வழக்கம். அதன்படி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 14 சீரிஸ்களில் பல்வேறு புது அம்சங்களை புகுத்தி இருந்தது. அதில் ஒன்று செயற்கைக்கோள் இணைப்பு. இந்த அம்சம் குறித்து அனைவரும் அறிந்ததே. இதைவிட நிறுவனம் ஐபோன் 14 மாடலில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை புகுத்தி இருக்கிறது. அதில் ஒன்று தான் விபத்து கண்டறிதல் அம்சம்.

கடுமையான கார் விபத்து

கடுமையான கார் விபத்து

விபத்து கண்டறிதல் அம்சம் என்று பெயர் குறிப்பிடுவது போல், இந்த அம்சமானது நீங்கள் கடுமையான கார் விபத்தில் சிக்கியிருக்கும் போது உங்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஐபோன் 14 உங்களுடன் இருக்கும்போது விபத்துக்கு உள்ளானால் அதை தானாக கண்டறிந்து அவசர சேவைகளுக்கு டயல் செய்யும்.

எப்படி தானாக அழைப்பு விடுக்கும்?

எப்படி தானாக அழைப்பு விடுக்கும்?

2019 ஆம் ஆண்டு வெளியான பிக்சல் போன்களில் இதே போன்ற அம்சம் இடம்பெற்றிருந்தது. இந்த அம்சத்தின் செயல்முறை, பாதுகாப்புத் தன்மை குறித்து எல்லாம் படித்திருப்போம். ஆனால் ஒரு யூடியூப்பர் ஐபோன் 14 இன் விபத்து கண்டறிதல் அம்சத்தை நேரடியாக சோதித்து பார்த்தார்.

இதை படித்தால் ஐபோன் 14 எப்படி தானாக அழைப்பு விடுத்தது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

சோதனை செய்த யூடியூபர்..

சோதனை செய்த யூடியூபர்..

ஆப்பிள் ஐபோன் 14 இல் விபத்து கண்டறிதல் அம்சம் இருக்கிறது என நிறுவனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து யூடியூபர் ஒருவர் ஆப்பிள் விபத்து கண்டறிதல் அம்சத்தை நேரடியாக விபத்து ஏற்படுத்தி சோதித்தார். டெக்ராக்ஸ் என்ற யூடியூபர் இந்த சோதனை வீடியோவை தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் இடம்பெற்றிந்த காட்சிகளை பார்க்கலாம்.

வெற்றிகரமாக செயல்பட்ட விபத்து கண்டறிதல் அம்சம்

வெற்றிகரமாக செயல்பட்ட விபத்து கண்டறிதல் அம்சம்

ஐபோன் 14 ப்ரோ, கார் இருக்கையின் ஹெட்ரெஸ்ட் உடன் இணைக்கப்பட்ட நிலையில் உள்ளது. ஆள் இல்லாமல் காரை அதிவேகத்தில் இயக்கி ஆளில்லாத மற்றொரு கார் மீது மோதச் செய்யப்பட்டது.

இந்த சோதனையின் ஆரம்பத்தில் ஐபோன் 14 சில தோல்விகளை சந்தித்தாலும் அடுத்தடுத்த சோதனையில் தொடர் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

விபத்து ஏற்பட்ட பத்து வினாடிகளில் இந்த விபத்து கண்டறிதல் அம்சம் செயல்பட்டதாக TechRax தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து முயற்சிகளிலும் சரியாக 10 வினாடிகளில் இந்த அம்சம் செயல்பட்டிருக்கிறது.

10 வினாடி கவுண்டவுன்

10 வினாடி கவுண்டவுன்

கார் விபத்துக்குள்ளானதை கண்டறிந்த ஐபோன் 14 இன் விபத்து கண்டறிதல் அம்சம் பத்து வினாடி கவுண்ட்டவுனைத் தொடங்குகிறது.

இந்த 10 வினாடிக்குள் உரிமையாளர் கவுண்ட்டவுனை ரத்து செய்ய வேண்டும். அப்படி ரத்து செய்யாதபட்சத்தில் அது தானாகவே அவசர சேவைகளை அழைக்கத் தொடங்குகிறது. இதன்மூலம் உங்களுக்கான உதவி தானாக கிடைக்கத் தொடங்குகிறது.

Best Mobiles in India

English summary
6 people died when a car crashed into a tree.. Apple iPhone 14 did the duty

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X