அட்றா சக்கை.. AI முதல் Battery செட்டிங்ஸ் வரை.. ஒவ்வொரு Android போனுக்கும் வரும் 6 புதிய அம்சங்கள்!
மே 10 ஆம் தேதி நடக்கும் கூகுள் ஐ/ஓ 2023 டெவலப்பர் மாநாடு (Google I/O 2023 Developer Conference) முடிந்த பின்னர், ஆண்ட்ராய்டு ஓஎஸ் (Android OS) கொண்டு இயங்கும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் தாறுமாறாக அப்கிரேட் (Upgrade) ஆகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஏனென்றால் கூகுள் ஐ/0 2023 நிகழ்வின் போது ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ன் புதிய வெர்ஷன் (Android OS New Version) ஆன ஆண்ட்ராய்டு 14 (Android 14) வழியாக என்னென்ன புதிய அம்சங்கள் (New Features) நமது ஸ்மார்ட்போன்களுக்கு வந்து சேரும் என்பது அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட உள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலின்படி ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் ஆனது மேம்படுத்தப்பட்ட தனியுரிமை அம்சங்கள் (Enhanced Privacy Features) அதிக கவனம் செலுத்தும், கூடவே ஏஐ (AI) தொடங்கி கேமரா (Camera), பேட்டரி (Battery) வரையிலாக பல புதிய அம்சங்களை சேர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
01. மேம்படுத்தப்பட்ட ப்ரைவஸி கண்ட்ரோல்கள் (Improved Privacy Controls): ஆண்ட்ராய்டு 14 வழியாக ஆப் பெர்மிஷன்களை (App permissions) மிக எளிதாக கட்டுப்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் ஓஎஸ் ஆனது எந்தெந்த ஆப்கள் தங்கள் டேட்டாவை நிகழ்நேரத்தில் அணுகுகின்றன என்பதையும் பார்க்க அனுமதிக்கும்.
02. இன்னும் 'ஸ்மார்ட்' ஆன ஏஐ: ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போவதால் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ல் "இன்னும் ஸ்மார்ட் ஆன" ஏஐ அம்சங்கள் இடம்பெற்றால் அதில் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றுமே இல்லை.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ல் ஏஐ பவர்டு விர்ச்சுவல் அசிஸ்டென்ட் (AI Powered Virtual Assistant) சேர்க்கப்படலாம். இதனால் நேச்சுரல் லேங்குவேஜை (Natural Language) நன்றாக புரிந்து கொள்ள முடியும் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பதில்களை (Personalised responses) வழங்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
03. வியரபிள்ஸ்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பு (Better Integration with Wearables): ஆண்ட்ராய்டு 14 ஆனது வியரபிள்ஸ்களுடன் ஸ்மார்ட்போன்களை இணைப்பதை இன்னும் எளிதாக்கும். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ன் கீழ் ஸ்மார்ட்வாட்ச்கள், ஃபிட்னஸ் டிராக்கர்கள் மற்றும் பிற வியரபிள் டிவைஸ்களுடனான இணக்கத்தன்மையானது (Compatibility) முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சிறப்பாக இருக்கும்.
04. மேம்பட்ட கேமரா அம்சங்கள் (Advanced Camera Features): கேமராக்கள் ஸ்மார்ட்போன்களின் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்டன. அதை மேலும் மெருகூட்டும் நோக்கத்தின் கீழ், கூகுள் அதன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ல் பல புதிய கேமரா அம்சங்களை சேர்க்கலாம்;மேம்பட்ட கேமரா செட்டிங்ஸ், சிறந்த இமேஜ் ப்ராஸஸிங் மற்றும் மேம்படுத்தப்பட்ட வீடியோ ஸ்டெபிலைசேஷன் சேர்க்கப்படலாம்.
05. மேம்படுத்தப்பட்ட பேட்டரி லைஃப் (Improved Battery Life): ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ல் சிறந்த பவர் மேனேஜ்மென்ட (Power management) அம்சங்கள், சிறந்த பேக்கிரவுண்ட் ஆப் மேனேஜ்மென்ட் (Background app Management) மற்றும் ஆப்டிமைஸ்டு பேட்டரி யூசேஜ் (Optimised battery usage) போன்றவைகளை எதிர்பார்க்கலாம்.
06. மேம்படுத்தப்பட்ட கேமிங் அம்சங்கள் (Enhanced Gaming Features): ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வழியாக கேமிங்கிற்காக டிவைஸின் செயல்திறனை (Performance) மேம்படுத்தும் புதிய கேமிங் மோட் (New Gaming Mode) அறிமுகம் செய்யப்படலாம். மேலும் ஈர்க்கக்கூடிய கேம்களை உருவாக்கவதற்காக டெவெலப்பர்களுக்கான புதிய டூல்களும் (New Tools) அறிமுகப்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








