புதின் ஒன்றும் முட்டாள் இல்லை, 'கைவசம்' நிறையா இருக்கு..!!

|

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நாம் நினைக்கும் அளவிற்கு சக்திவாய்ந்தவர் இல்லை என்றும், ரஷ்யாவிற்குள் வெளியாகும் புதின் புகைப்படங்கள் அவரை அன்பான மென்மையான ஒருவராகவும், பிற நாடுகளுக்காக வெளியிடப்படும் புதின் புகைப்படங்கள் அவரை உலகின் சக்தி வாய்ந்த மனிதராகவும் காட்சிப்படுத்துகிறதே தவிர நாம் நினைக்கும் அளவிற்கு சக்திவாய்ந்தவர் இல்லை என்றும் ரஷ்ய எதிர்ப்பு நாடுகள் கூறிக்கொண்டு திரிந்தாலும், தன் நிலைபாட்டையும் தனது பிடிவாத கொள்கைகளையும் எப்போதும் நழுவ விடாது நிற்கும் விளாதிமிர் புதினுக்கு பின்புலமாய் அவரது நாட்டின் அதிநவீன ஆயுதங்கள் துணை நிற்கின்றன என்பது தான் நிதர்சனம்.

அப்படியாக ரஷ்யாவின் வசம், அதாவது புதினின் கைவசம் இருக்கும் உலகை மிரள வைக்கும் வல்லமை கொண்ட அதிநவீன 6 ஆயுதங்கள் மற்றும் அதன் திறன்கள் பற்றிய தொகுப்பே இது..!

06. லேசர்கள் :

06. லேசர்கள் :

லாஸ் (LAWs) எனப்படும் அதிநவீன லேசர் ஆயுத அமைப்பில் (Laser Weapon System) அமெரிக்காவிற்கு இணையாக ஒரு வகைப்படுத்தப்பட்ட நிலையில் ரஷ்யா இருக்கிறது.

ட்ரோன்கள் தொடங்கி கப்பல்கள் வரை :

ட்ரோன்கள் தொடங்கி கப்பல்கள் வரை :

இவ்வகையான அதிநவீன லேசர் ஆயுத அமைப்புகள் மூலம் மிகவும் துல்லியமான முறையில் எதிரிகளின் பறக்கும் ட்ரோன்கள் தொடங்கி கப்பல்கள் வரை தாக்கி அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

05. ஏர் டிபென்ஸ் ஏவுகணைகள் :

05. ஏர் டிபென்ஸ் ஏவுகணைகள் :

உலகின் அதிநவீன ஆயுதங்களின் பட்டியலில் பேல்லிஸ்டிக் மிசைல்ஸ் (ballistic missiles) எனப்படும் கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும் ஆயுதங்களுக்கு எப்போதுமே ஒரு இடம் உண்டு. அப்படியாக ரஷ்யாவிடம் இருக்கும் பேல்லிஸ்டிக் ஆயுதம் தான் எஸ்500..!

செயற்கைகோள்களை கூட தாக்கும் :

செயற்கைகோள்களை கூட தாக்கும் :

எஸ்-500 ஆனது ஒரே நேரத்தில் 5 முதல் 10 கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் ஏவுகணைகளை செலுத்தும் வல்லமை கொண்டது, மேலும் விண்வெளியில் குறைவான சுற்றுவட்டப்பாதையில் இருக்கும் செயற்கைகோள்களை கூட தாக்கும் என்பதும் குறிபிடத்தக்கது.

04. ஹெவி-லிப்ட் ஸ்ட்ராடெஜிக் விமானங்கள் :

04. ஹெவி-லிப்ட் ஸ்ட்ராடெஜிக் விமானங்கள் :

அதாவது, 30 டன் எடை வரையிலாக ஆயுதங்களை சுமக்கும் போர்த்திறஞ்சார்ந்த விமானங்கள். இந்த வரிசையில் மிகவும் அதிநவீன மயமாக்கப்பட்ட ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் தான் - சுக்கோய் டி-50. அடுத்த தலைமுறை : பாக்-டா (PAK -DA)

'ஸ்டீல்த்' தன்மை :

'ஸ்டீல்த்' தன்மை :

பாக்-டா, ரஷ்யா எதிர்நோக்கும் அளவிற்கு ஒரு ஹைப்பர்சோனிக் பாம்மர் விமானமாக இது இல்லாவிட்டாலும் கூட எதிரிகளின் க்ரூஸ் ஏவுகணைகளை கண்டறிந்து தாக்கி அழிக்கும் வகையிலான 'ஸ்டீல்த்' தன்மை (Stealth) கொண்டதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது

03. ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் :

03. ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் :

ரஷ்யாவின் பல ஹைப்பர் சோனிக் ஏவுகணை திட்டங்கள் தோல்விகளில் முடிந்தாலும்கூட, அது தனது முயற்சியை கைவிடுவதாய் இல்லை. ரஷ்யாவின் யூ-71 வெற்றி அடையும் பட்சத்தில் அது மணிக்கு சுமார் 7000 மைல்கள் வேகத்தில் சென்று இலக்குகளை துவம்சம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மோஸ் 2 :

பிரம்மோஸ் 2 :

உடன் ரஷ்யா, இந்தியாவுடன் இணைந்து பிரம்மோஸ் 2 ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை உருவாக்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

02. அணு ஆயுத நீர் மூழ்கிகள் :

02. அணு ஆயுத நீர் மூழ்கிகள் :

ரஷ்யாவின் அதிநவீன நான்காம் தலைமுறை நீர்மூழ்கிகள் உருவாக்கம் பெற்றுக்கொண்டிருக்கும் அதே சமயம் அதன் ஐந்தாம் தலைமுறை நீர்மூழ்கிகளும் திட்டமிடப்பட்டுக் கொண்டிருகின்றன.

ட்ரோன்கள், ரோபோட்கள் :

ட்ரோன்கள், ரோபோட்கள் :

அவைகள் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்ளும் வசதிகளோடு சேர்த்து நீரடிக்குள் செயல்படும் ட்ரோன்கள், சில குறிப்பிட்ட பணிகளை முடிக்கும் வண்ணம் உதவும் உட்கட்டமைப்பு ரோபோட்கள், முக்கியமான அணு ஆயுதம் சுமக்கும் நீர்மூழ்கிகளாய் இருக்கும் என்பது குறிபிடத்தக்கது.

01. ஆப் ஸ்விட்ச் :

01. ஆப் ஸ்விட்ச் :

ஆப் ஸ்விட்ச் - அதாவது எதிரிகளின் தகவல் தொடர்பு மற்றும் ஆயுதங்களுக்கு வழிகாட்டும் அமைப்புகளை தடை செய்யும் ஒரு அதிநவீன மற்றும் தந்திரமான திட்டம்.

ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் வரை :

ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் வரை :

மின்னணுப் போர்முறை அமைப்பு (Electronic warfare system) என்று கூறப்படும் இந்த அமைப்பை கொண்டு பலவகையான ஏவுகணைகள் தொடங்கி ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் வரையிலாக அனைத்து அச்சுறுத்தல்களையும் தடுக்க முடியும்.

Best Mobiles in India

English summary
6 most impressive hi tech weapons of Russia. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X