மிஸ்டு கால் மூலம் ரூ.1.86 கோடி அபேஸ்- ஹேக்கர்களின் புதுபாணி.!
ஹேக்கர்கள் இன்று உலகம் பூராவும் பரவிக் கிடக்கின்றனர். அவர்கள் புது புது பாணிகளை கையாண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாத விடயமாக இருக்கின்றது. அரசாங்காத்தாலும் ஹேர்களை கட்டுப்படுத்த
ஹேக்கர்கள் இன்று உலகம் பூராவும் பரவிக் கிடக்கின்றனர். அவர்கள் புது புது பாணிகளை கையாண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாத விடயமாக இருக்கின்றது.

அரசாங்காத்தாலும் ஹேர்களை கட்டுப்படுத்த முடிவில்லை. இன்று வங்கிகள் முதல் அரசு நிறுவனங்கள் வரை ஹேர்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொழில் அதிபரின் வங்கி கணக்கில் இருந்து, ரூ.186 கோடி அபேஸ் செய்யப்பட்டுள்ளது. இது எப்படி நடந்தது என்று பார்க்கையில், அவரது செல்போனுக்கு 6 மிஸ்டுகள் வந்துள்ளது. இதன் மூலம் அவரது வங்கி கணக்கு மற்றும் புது சிம்கார்டு பயன்படுத்தி நவீன கொள்ளை அரங்கேறியுள்ளது.

ஹேர்க்களின் புது தொழில்நுட்பம்:
ஏற்கெனவே பயன்படுத்தி வரும் செல்போன் எண்ணை, வேறொரு சிம்முடன் பதிவுசெய்து கொள்ளும் சிம் ஸ்வாப் நடைமுறையைப் பயன்படுத்தி புதுவகையான மோசடி அரங்கேற்றப்படுகிறது.

பறிபோகும் சிம்கார்டு எண்:
சிம் கார்டின் பின்புறம் உள்ள 20 இலக்க தனித்துவ எண்ணை முறைகேடான வழிகளில் பெற்று, இந்த மோசடி அரங்கேற்றப்படுகிறது.

தொலைபேசி சேவை நிறுவனம் போல பேச்சு:
மொபைல் சேவை நிறுவனத்தில் இருந்து அழைப்பது போல அழைத்து, இணைப்பின் வேகத்தை அதிகரிப்பது அல்லது கூடுதல் டேட்டா வழங்குவது போல பேசி, ஒன்று எண்ணை அழுத்துங்கள் என்று கூறுவார்கள். அப்படி அழுத்திவிட்டால் பயனாளர் அறியாமலேயே சிம் ஸ்வாப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு விடும்.

ஹேர்களிகள் அட்டகாசம்:
தூண்டில் போடும் மின்னஞ்சல்கள், போலியான வங்கி இணையத் தளங்கள், மால்வேர்கள் மூலமும் இதுபோன்ற விவரங்களை பெற்றுவிடும் ஹேக்கர்கள் அதன் பிறகு, மோசடியை அரங்கேற்றுகிறார்கள்.

புது சிம் வாங்கும் ஹேக்கர்கள்:
சிம் ஸ்வாப் கோரிக்கை செல்போன் சேவை நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டவுடன், உரிமையாளரின் செல்போனில் உள்ள சிம் செயல்படாது. ஆனால் அதே எண்ணுடன் வேறொரு சிம்மை பயன்படுத்தும் ஹேக்கர்கள், ஓடிபி உள்ளிட்ட எண்களைப் பெற்று வங்கிக் கணக்குகளில் பணத்தை எடுத்து விடுகின்றனர்.

ஹேர்க்களிடம் அனைத்தும் இருக்கும்:
இதற்கு வசதியாக வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்டு போன்றவற்றை ஏற்கெனவே அவர்கள் திருடி வைத்திருப்பதும் உண்டு.

வங்கி கணக்கில் ரூ.1.86 லட்சம் அபேஸ்:
இந்நிலையில், மும்பை மாஹிம் பகுதியை சேர்ந்த ஜவுளி தொழிலதிபர் ஒருவருக்கு கடந்த டிசம்பர் 27ஆம் தேதி 6 மிஸ்டு கால்கள் வந்துள்ளன. அதன் பிறகு செல்போன் எண் செயல்படவில்லை. மறுநாள் தமது வங்கிக் கணக்கில் இருந்து 1 கோடியே 86 லட்ச ரூபாய் பணம், டெல்லி, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டிருப்பது அந்த தொழிலதிபருக்கு தெரியவந்துள்ளது.

ரூ.20 லட்சம் மட்டும் மிஞ்சியது:
வங்கியில் விரைந்து புகார் அளித்தும் 20 லட்ச ரூபாய் பணத்தை மட்டுமே காப்பாற்ற முடிந்துள்ளது. இதுகுறித்து தொழிலதிபர் அளித்த புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹேர்களின் புதுபாணி:
தற்போது ஹேர்கள் சிம் ஸ்வாப் என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கி விட்டனர். இதனால் அனைத்து விவரங்களும் ஹேர்களிடம் இருக்கும் இதில் இருந்து தப்பிப்பது நம் கையில் தான் இருக்கின்றது. நமது விவரங்கள் குறித்து மற்றவரிகளிடம் தெரிவிக்க கூடாது.

ஹேர்க்களின் புது அவதாரம்:
மேலும் சிம் ஸ்வாப் எனப்படுவது ஹேர்களின் பயன்படுத்தும் புது தொழில்நுட்பமாகவும் இருக்கின்றது. ஹேர்கள் இதுபோன்று பல்வேறு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து திருடுகின்றனர்.


Click it and Unblock the Notifications