பூமியில் சூரியன் மறையாத 6 இடங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான் இங்கெல்லாம் சூரியன் மறையாது..

|

பூமியில் இருக்கும் தினசரி வழக்கம் நாள் கணக்கில் பிரிக்கப்படுகிறது. மனிதனின் வாழ்க்கை முறை இந்த நாள் கணக்கில் தான் செயல்படுகிறது. நமக்குக் கிடைக்கும் 24 மணி நேரத்தில் முதல் 12 மணி நேரம் சூரிய ஒளியால் சூழப்பட்டிருக்கிறது. மீதமுள்ள நேரம் இரவு நேரம் சூரிய ஒளி இல்லாமல் மனிதர்கள் ஓய்வு எடுக்கும் நேரமாக அமைந்துள்ளது. இந்த நிகழ்வு தினமும் சுழற்சியாக நடந்து வருகிறது. ஆனால், பூமியில் இந்த சுழற்சி சில இடங்களில் 70 நாட்களுக்கு மேல் நகராமல் அப்படியே பகலாக மட்டுமே இருக்கும் நிலை நிலவுகிறது.

என்ன! வருடத்தில் 70 நாட்களுக்கும் மேலாக சூரியன் மறையாமல் இருக்குமா?

என்ன! வருடத்தில் 70 நாட்களுக்கும் மேலாக சூரியன் மறையாமல் இருக்குமா?

என்னது? வருடத்தில் 70 நாட்களுக்கும் மேலாக சூரியன் மறையாமல் இருக்கிறதா? உண்மை தானா? சும்மா சொல்லாதீங்கப்பா என்று நீங்கள் சந்தேகிக்கலாம். ஆனால், நீங்கள் சந்தேகிக்க வேண்டிய அவசியமே தேவையில்லை, இந்த செய்தி உண்மையானது தான். நாங்கள் சொல்லும் குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் இந்த 6 இடங்களுக்கு நேரில் சென்றால் வெறும் பகல் பொழுதை மட்டும் உங்கள் வாழ்நாளில் அனுபவிக்கலாம்.

சூரிய அஸ்தமனம் இல்லாதா பூமியின் நீண்ட பகல் பொழுது கொண்ட இடங்கள் இது தானா?

சூரிய அஸ்தமனம் இல்லாதா பூமியின் நீண்ட பகல் பொழுது கொண்ட இடங்கள் இது தானா?

உண்மையைச் சொல்லப் போனால் தொடர்ச்சியாக 70 நாட்களுக்குச் சூரிய அஸ்தமனம் இல்லாமல் இந்த பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் அவர்களின் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். சிலருக்கு இது குழப்பமான மனநிலையை உருவாக்குகிறது. குறிப்பாக, இந்த பகுதியில் நிகழும் விசித்திரமான சூரிய நிகழ்வை அனுபவிக்க வெளி ஊர்களில் இருந்து வரும் ​​சுற்றுலாப் பயணிகளுக்கு நேரத்தைக் கண்காணிப்பது மிகவும் சுவாரஸ்யமாக அமைகிறது.

ஆழ்கடலில் விடப்பட்ட 3 இறந்த முதலையின் உடல்கள்.. மூச்சடைத்து போன விஞ்ஞானிகள்.. என்ன நடந்தது தெரியுமா?ஆழ்கடலில் விடப்பட்ட 3 இறந்த முதலையின் உடல்கள்.. மூச்சடைத்து போன விஞ்ஞானிகள்.. என்ன நடந்தது தெரியுமா?

1. நோர்வே

1. நோர்வே

ஆர்க்டிக் வட்டத்தில் அமைந்துள்ள நார்வேயில் சூரியன் தொடர்ச்சியாக 76 நாட்களுக்கு மறையாமல் வெறும் பகல் பொழுதாக மட்டுமே இருக்கிறது. நார்வே 'லேண்ட் ஆப் மிட்நைட் சன்' (Land of the Midnight Sun) என்று அழைக்கப்படுகிறது. இங்கு மே மாதம் துவக்கம் முதல் ஜூலை மாதம் இறுதி வரை சூரியன் மறைவதில்லை. இதன் பொருள் தொடர்ச்சியாக சுமார் 76 நாட்களுக்குச் சூரியன் மறையாமல் இருக்கிறது.

இந்த காலத்தில் நீங்கள் நோர்வே சென்றால் வெறும் பகல் பொழுதை அனுபவிக்கலாம்

இந்த காலத்தில் நீங்கள் நோர்வே சென்றால் வெறும் பகல் பொழுதை அனுபவிக்கலாம்

நோர்வேயின் ஸ்வால்பார்டில் (Svalbard), ஏப்ரல் 10 முதல் ஆகஸ்ட் 23 வரை சூரியன் தொடர்ந்து பிரகாசிக்கிறது. இது ஐரோப்பாவின் வடக்கே வசிக்கும் பகுதி. இந்த குறிப்பிட்ட காலத்தில் இந்த இடத்திற்கு உங்கள் வருகையை நீங்கள் திட்டமிட்டு, இரவு இல்லாத நாட்களை நேரடியாக அனுபவிக்கலாம்.

30% நீராலான 'மறைக்கப்பட்ட' கடல் உலகம் கண்டுபிடிப்பு.. உயிர்கள் இருக்க வாய்ப்பா? விஞ்ஞானிகளின் கருத்து என்ன?30% நீராலான 'மறைக்கப்பட்ட' கடல் உலகம் கண்டுபிடிப்பு.. உயிர்கள் இருக்க வாய்ப்பா? விஞ்ஞானிகளின் கருத்து என்ன?

2. கனடா

2. கனடா

கனடாவின் வடமேற்குப் பகுதிகளில் ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே இரண்டு டிகிரிக்கு மேல் நுனாவுட் (Nunavut) என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடம் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு மேலாக முழு சூரிய ஒளியைக் காண்கிறது. ஆம் வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் இங்கு சூரியன் அஸ்தமனம் ஆகாமல் அப்படியே பகல் பொழுதை நீடிக்கிறது. அதேசமயம், குளிர்காலத்தில் இந்த இடம் தொடர்ந்து 30 நாட்களுக்கு முழுமையாக இருளை பார்க்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட பகல் பொழுது மற்றும் நீண்ட இரவுப் பொழுதை அனுபவிக்க விரும்பும் நபர்கள் நேரடியாகக் கனடாவின் நுனாவுட் பகுதிக்குச் செல்லாம்.

3. ஐஸ்லாந்து

3. ஐஸ்லாந்து

கிரேட் பிரிட்டனுக்குப் பிறகு ஐரோப்பாவின் மிகப்பெரிய தீவு என்றால் அது ஐஸ்லாந்து ஆகும். மேலும் கொசுக்கள் இல்லாத அதிசய நாடாகவும் ஐஸ்லாந் அறியப்படுகிறது. கோடை காலத்தில் ஐஸ்லாந்தின் இரவுகள் தெளிவாக இருக்கும். ஆனால், அதேசமயம் ஜூன் மாதத்தில் இங்குச் சூரியன் மறைவதில்லை. மிட்நைட் சன் என்று அழைக்கப்படும் நள்ளிரவு சூரியனின் முழு மகிமையில் பார்வையிட நீங்கள் ஆர்க்டிக் வட்டத்தில் உள்ள அக்குரேரி நகரம் மற்றும் கிரிம்சி தீவுக்குச் (Akureyri and Grimsey Island) செல்லலாம்.

பால்வெளி விண்மீன் மண்டலத்தில் அடையாளம் தெரியாத புதிய 'புதிர்' கண்டுபிடிப்பு.. விஞ்ஞானிகள் குழப்பம்..பால்வெளி விண்மீன் மண்டலத்தில் அடையாளம் தெரியாத புதிய 'புதிர்' கண்டுபிடிப்பு.. விஞ்ஞானிகள் குழப்பம்..

4. அலாஸ்கா

4. அலாஸ்கா

அலாஸ்காவில் உள்ள பாரோ (Barrow) இடத்திலும் சூரியன் மறைவதில்லை. மே மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஜூலை இறுதி வரை இங்கு உண்மையில் சூரியன் மறைவதே இல்லை. இது நவம்பர் தொடக்கத்தில் இருந்து அப்படியே அடுத்த 30 நாட்களுக்கு தலைகீழாகச் செயல்படுகிறது. இந்த குறிப்பிட்ட காலத்தில் சூரியன் உதிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது துருவ இரவு நேரம் என அழைக்கப்படுகிறது. கடுமையான குளிர்கால மாதங்களில் முழு நாடு இருளில் இருக்கும் என்பதையும் இது குறிக்கிறது. பனி மூடிய மலைகள் மற்றும் மயக்கும் பனிப்பாறைகளுக்குப் புகழ்பெற்ற இந்த இடத்தை கோடை அல்லது குளிர்காலத்தில் பார்வையிடலாம்.

5. பின்லாந்து

5. பின்லாந்து

ஆயிரம் ஏரிகள் மற்றும் தீவுகளின் நிலம் என்று அழைக்கப்படும் பின்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் சூரியன் மறைவதில்லை. இங்கு கோடைக்காலத்தில் மட்டும் தொடர்ச்சியாக 73 நாட்களுக்குச் சூரியன் அஸ்தமனம் ஆகாமல் நிலையான பகல் பொழுதை மட்டும் மக்கள் அனுபவிக்கின்றனர். இந்த காலகட்டத்தில், சூரியன் சுமார் 73 நாட்களுக்குத் தொடர்ந்து பிரகாசிக்கிறது. அதேசமயம், குளிர்காலத்தில் இந்த பகுதி சூரிய ஒளியைப் பார்க்காது.

மரணம் இல்லாத வாழ்க்கையின் வாசலை திறக்க துடிக்கும் ஜெஃப் பெசோஸ்.. வினோதமான முயற்சி.! வெற்றியில் முடியுமா?மரணம் இல்லாத வாழ்க்கையின் வாசலை திறக்க துடிக்கும் ஜெஃப் பெசோஸ்.. வினோதமான முயற்சி.! வெற்றியில் முடியுமா?

பூமியில் அதிக நேரம் விழித்திருக்கும் மக்கள் மற்றும் அதிக நேரம் உறங்கும் மக்கள் எங்குள்ளனர்?

பூமியில் அதிக நேரம் விழித்திருக்கும் மக்கள் மற்றும் அதிக நேரம் உறங்கும் மக்கள் எங்குள்ளனர்?

இதில் கூடுதல் சுவாரசியமான தகவல் என்னவென்றால், இங்கு வசிக்கும் மக்கள் தான் பூமியில் அதிக நேரம் விழித்திருக்கும் மக்களாகக் கருதப்படுகின்றனர். காரணம், தொடர்ச்சியான சூரிய பிரகாசத்தினால் இவர்கள் கோடையில் குறைவாக உறங்குகின்றனர். அதேநேரத்தில், குளிர்காலத்தில் நிகழும் நீண்ட இரவு நேரத்தின் காரணமாக இங்கு வசிக்கும் மக்கள் அதிகமாகத் தூங்குவதாகக் கூறப்படுகிறது.

6. ஸ்வீடன்

6. ஸ்வீடன்

இறுதியாக நமது பட்டியலில் இருக்கும் பகுதி ஸ்வீடன் ஆகும். இங்கு மே தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரை இங்கு நள்ளிரவில் தான் சூரியன் மறையும். அதேபோல், மறைந்த சிறிது நேரத்தில் அதிகாலை 4 மணியளவில் நாட்டில் மீண்டும் சூரியன் உதயமாகும். ஸ்வீடனில் தொடர்ச்சியான சூரிய ஒளியின் காலம் வருடத்தின் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும். இங்கு இருக்கும்போது நீங்கள் நீண்ட சூரிய ஒளி நாட்களை அனுபவிக்க முடியும். ​​

சூரியன் மறையாமல் இருக்கும் இடங்களை பற்றி தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்

சூரியன் மறையாமல் இருக்கும் இடங்களை பற்றி தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்

இது வெகுவாக சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. பூமியில் இப்படி சூரியன் மறையாமல் இருக்கும் இடங்களை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறோம். இந்த தகவல் பற்றி தெரியாதவர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்துகொள்ளுங்கள். கூடுதல் சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
6 Midnight Sun Places On Earth Where The Sun Never Sets : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X