Just In
- 5 hrs ago
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- 5 hrs ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
- 6 hrs ago
பட்ஜெட் விலையில் பக்காவான ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறக்கும் Infinix: அறிமுக தேதி இதுதான்.!
- 6 hrs ago
வானில் தோன்றிய விசித்திரமான உருவம்.! மொத்த ஊரும் ஆன்னு அண்ணாந்து பார்த்த அதிசயம்.!
Don't Miss
- News
நிலுவை தொகை இருந்தால் செலுத்துங்கள்.. தவறினால் இணைப்பு துண்டிப்பு.. சென்னை குடிநீர் வாரியம் வார்னிங்
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- Lifestyle
குளிர்காலத்துல இந்த ஆரோக்கியமான பானங்களை குடிப்பது... உங்க உடலுக்கு பல அதிசயங்கள செய்யுமாம்!
- Movies
கலக்கலாக வந்த கமல்... அதிர வைத்த ஹவுஸ்மேட்ஸ்... தொடங்கியது பிக் பாஸ் கிராண்ட் பினாலே
- Sports
"யார்பா அது முரட்டு ஆளா ஓடுற" ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
2023-ல் செம்ம டிமாண்ட் ஆகி.. கேட்பதை விட அதிக சம்பளம் கொடுக்க போகும் 6 வேலைகள்!
2023 ஆம் ஆண்டில் படுபயங்கரமாக 'டிமாண்ட்' ஆகி, நீங்கள் கேட்பதை விட அதிக சம்பளத்தை வாங்கப்போகும் 6 வேலைகளை (Jobs) பற்றிய தொகுப்பே இது!
அதென்ன வேலைகள்? இந்த 6 வேலைகளும் 2023 ஆம் ஆண்டில் மட்டும் தான் டிமாண்ட் ஆகுமா அல்லது அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே நிலை தொடருமா? இதோ விவரங்கள்:

06. ஃபுல்-ஸ்டாக் டெவலப்பர் (Full-stack developer)
பெரும்பாலும் ஃபுல்-ஸ்டாக் டெவலப்பர்கள், ஒரு வெப்சைட் (Website) அல்லது வெப் அப்ளிகேஷனின் (Web Application) ஃப்ரன்ட் எண்ட் (Front End) மற்றும் பேக் எண்ட்டில் (Back End) வேலை செய்கிறார்கள்.

இந்த வேலை ஏன் டிமாண்ட் ஆகும்?
நீங்கள் ஒரு வெப்சைட் அல்லது வெப் அப்ளிகேஷனை அணுகும்போது நீங்கள் பார்க்கக்கூடிய பகுதியே ஃப்ரன்ட் எண்ட் ஆகும். அதாவது கிராஃபிக்கல் யூசர் இன்டர்பேஸ் (Graphical User Interface - GUI) எனப்படும் இன்டர்ஆக்டிவ் விஷூவல் காம்போனென்ட்ஸே ஃப்ரன்ட் எண்ட் ஆகும்.
பேக் எண்ட் என்பது - வெப்சைட் அல்லது வெப் அப்ளிகேஷனை செயல்பட வைக்கும் கோட்-ன் (Code) ஒரு பகுதியாகும். அதை "சர்வர்-சைட்" என்றும் கூறலாம்.
இப்படியாக A முதல் Z வரையிலான பொறுப்புகளை கையில் எடுத்துக்கொள்வதால் ஃபுல்-ஸ்டாக் டெவலப்பர் வேலைக்கு எப்போதுமே செம்ம டிமாண்ட் இருக்கும். அது 2023 ஆம் ஆண்டில் இன்னும் அதிகரிக்கலாம்!

05. இன்பர்மேஷன் செக்யூரிட்டி அனலிஸ்ட் (Information security analyst)
இன்பர்மேஷன் செக்யூரிட்டி அனலிஸ்ட் என்பது ஒரு நிறுவனத்தின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகள் மற்றும் சிஸ்டம்களை பாதுகாப்பதற்கு பொறுப்பான சைபர் செக்யூரிட்டி நிபுணர் ஆவார்.

இந்த வேலை ஏன் டிமாண்ட் ஆகும்?
சைபர்-அட்டாக்களில் இருந்து நிறுவனத்தின் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க நெட்வொர்க் அட்மின்ஸ் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவதே ஒரு இன்பர்மேஷன் செக்யூரிட்டி அனலிஸ்ட்டின் முக்கிய கடமை ஆகும்!
தகவல்களை பாதுகாக்க விரும்பும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு நல்ல இன்பர்மேஷன் செக்யூரிட்டி அனலிஸ்ட் தேவை. அதுமட்டுமின்றி, இந்த வேலை 2023 ஆம் ஆண்டில் மட்டுமின்றி 2031 ஆம் ஆண்டு வரையிலாக டிமாண்ட் ஆன ஒரு வேலையாகவே இருக்க போகிறதாம்!

04. கிளவுட் இன்ஜினியர் (Cloud engineer)
ஒவ்வொரு வணிகத்திற்கும் - கிளவுட் கம்ப்யூட்டிங் மிகவும் முக்கியம். ஏனென்றால், இது ஹார்ட்வேர் செட்டப்பின் கட்டுப்பாடுகளை நீக்குகிறது. அதாவது நெகிழ்வான மற்றும் அளவிடக்கூடிய சூழலில் பெரிய அளவிலான டேட்டா ஸ்டோரேஜையும், டேட்டாவிற்கான ரிமோட் அக்செஸையும் அனுமதிக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் கிளவுட் சர்வீஸ்கள் ஆனது வெறுமனே ஒரு பேக்கப் ஆக மட்டுமின்றி டிசாஸ்டர் ரிக்கவரிக்கும் (Disaster recovery) வழிவகுக்கிறது. எனவே கிளவுட் இன்ஜினியர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இந்த வேலை ஏன் டிமாண்ட் ஆகும்?
2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, 94 சதவீத நிறுவனங்கள் ஒருவித கிளவுட் சேவையைப் பயன்படுத்துகின்றன.
மேலும் உலகளாவிய கிளவுட் கம்ப்யூட்டிங் சந்தையும் வளர்ந்து கொண்டே வருகிறது. ஆக 2023 ஆம் ஆண்டில் முன்னெப்போதை விடவும் கிளவுட் இன்ஜினியர்களுக்கு தேவை மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. மெஷின் லேர்னிங் இன்ஜினியர் (Machine learning engineer)
மெஷின் லேர்னிங் இன்ஜினியரிங் என்பது டேட்டா சயின்ஸ் மற்றும் சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் இடையேயான சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் ஒரு துறையாகும்.

இந்த வேலை ஏன் டிமாண்ட் ஆகும்?
மெஷின் லேர்னிங் இன்ஜினியர்ள் - டேட்டா சயின்ஸ் குழுவின் முக்கியமான உறுப்பினர்களாக செயல்படுகின்றனர். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் - செயற்கை நுண்ணறிவை ஆராய்ச்சி செய்தல், உருவாக்குதல் மற்றும் வடிவமைத்தலே இவர்களின் முக்கிய பணிகள் ஆகும்
அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் இருந்த AI மற்றும் மெஷின் லேர்னிங் ஆனது இப்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது என்பதை நாங் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
அதுமட்டுமன்றி மெஷின் லேர்னிங்கிற்கு "அழைப்பு விடுக்கும்" ஆப்களின் எண்ணிக்கையும் கூட அதிகரித்து கொண்டே வருகிறது. அதாவது செல்ப்-ட்ரைவ் கார்கள், ஸ்பீச் ரிக்கக்னைசேஷன், இமேஜ் ரிக்கக்னைசேஷன், ஆட்டோமேட்டிக் லேன்குவேஜ் டிரான்ஸ்லேஷன் போன்றவைகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. கூடவே மெஷின் லேர்னிங் இன்ஜினியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது!

2. சாஃப்ட்வேர் இன்ஜினியர் (Software engineer)
சாஃப்ட்வேர் இன்ஜினியர் பற்றி பெரிய அளவிலான விளக்கம் தேவைப்படாது. சாஃப்ட்வேர் இன்ஜினியர் என்பது சாஃப்ட்வேரின் வடிவமைப்பு, மேம்பாடு, சோதனை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் கம்ப்யூட்டர் சயின்ஸின் ஒரு முக்கிய கிளை ஆகும்.
வல்லுனர்களின் கூற்றுப்படி, 2021 மற்றும் 2031 க்கு இடையில் சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கான தேவை 25 சதவிகிதம் வளரும்.

01. டேட்டா சயின்டிஸ்ட் (Data scientist)
பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் போட்டித்தன்மையுடன் இருக்கவும் - டேட்டாவை நம்பி உள்ளன. டேட்டாவை தெரிந்துகொள்வதன் மூலம் அவர்களால் வாய்ப்புகளைக் கண்காணிக்கவும், சந்தைப் போக்குகளைக் கணிக்கவும், வணிக வளர்ச்சிக்கான உத்திகளை உருவாக்கவும் முடிகிறது.
ஒட்டுமொத்தமாக, வணிக உரிமையாளர்கள் சிறந்த முடிவுகளை எடுக்க டேட்டா மிகவும் உதவிகரமாக உள்ளன. இந்த இடத்தில் தான் - டேட்டா சயின்டிஸ்ட்கள் உள்ளே நுழைகிறார்கள்.

இந்த வேலை ஏன் டிமாண்ட் ஆகும்?
கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல் மற்றும் அறிவியல் முறைகளை ஒன்றிணைத்து வடிவங்களைக் கண்டறிந்து பெரிய அளவிலான டேட்டா தொகுப்புகளிலிருந்து "தேவையான" அறிவை பிரித்தெடுப்பதே டேட்டா சயின்டிஸ்ட்டின் முக்கிய வேலை ஆகும்.
டேட்டா சயின்டிஸ்ட்களுக்கான வேலைவாய்ப்பு 2021 முதல் 2031 வரை 36 சதவீதம் வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470