Home
News

Smart TV-ஐ துடைக்க இனி இந்த துணிகளை பயன்படுத்த வேண்டாம்.. ஏன்? இதோ முழு விவரம்..

தற்போதைய காலகட்டத்தில் பலரது வீடுகளில் ஸ்மார்ட் டிவிகள் (Smart TV) தான் இருக்கிறது. குறிப்பாக சாதரண டிவியை தற்போது அதிகளவில் யாரும் பயன்படுத்துவது கிடையாது. அதாவது மேம்பட்ட புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிகள் வெளிவருகின்றன. அதேசமயம் ஸ்மார்ட் டிவிகள் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கின்றன. எனவே தான் அதிக மக்கள் ஸ்மார்ட் டிவிகளை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது உங்கள் வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் டிவியை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும். ஒருவேளை சரியான முறையில் சுத்தம் செய்யாவிட்டால், அது விரைவில் பழுதடைந்துவிடும். எனவே, உங்கள் வீட்டில் இருக்கும் டிவியை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பதை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Smart TV-ஐ துடைக்க இனி இந்த துணிகளை பயன்படுத்த வேண்டாம்.. ஏன்?

1. முதலில் நீங்கள் ஸ்மார்ட் டிவியை சுந்தம் செய்வதற்கு முன்பு டிவியின் பிளக் பாயிண்டிலிருந்து வயரை அவிழ்த்துவிடுங்கள். அதுபோல, டிவியின் திரையை ஈரமான துணியால் துடைக்க கூடாது. அதேபோல் ரசாயனங்கள் கலந்த திரவங்களைப் பயன்படுத்தி ஸ்மார்ட் டிவிகளை சுந்தம் செய்ய கூடாது. காரணம் என்னவென்றால் இந்த ரசாயனம் கலந்த பொருட்கள் டிவியின் திரையினை சேதப்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொள்க.

2. அதேசமயம் ஸ்மார்ட் டிவியை கடினமான ப்ரெஷ்கள் கொண்டு தேய்த்து சுத்தப்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் கீரல் விழும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது, இதுதவிர டிவியின் பிரைட்னஸ் அம்சத்தையும் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

3. உங்கள் ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்ய மைக்ரோஃபைபர் துணியை லேசான ஈரப்பதத்துடன் வைத்து துடைக்க வேண்டும். குறிப்பாக மிகவும் மென்மையாக தான் துடைக்க வேண்டும், அழுத்தி துடைக்க கூடாது. மேலும் டிவியின் இதர பகங்கள் மற்றும் போர்டுகளில் இருக்கும் தூசியினை நீங்க ஏர் ப்ளோவர் பயன்படுத்தலாம்.

4. அதேபோல் டிவியின் திரையில் (TV Screen) இருக்கும் கறைகளை நீக்க ஸ்கிரீன் கிளீனர் பயன்படுத்தலாம். அதேபோல் ஸ்மார்ட் டிவியில் உள்ள கறைகளை நீக்க விரல் நகங்களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். இதனால் திரையில் கீரல்கள் ஏற்படும். எனவே உங்கள் வீட்டில் ஸ்கிரீன் கிளீனர் இருந்தால் பயன்படுத்துங்கள்.

5. குறிப்பாக தண்ணீரை நேரடியாக ஸ்மார்ட் டிவியின் திரையில் தெளிக்க வேண்டாம். ஏனெனில், தண்ணீர் டிவியின் உள்ளே சென்று, அதை சேதப்படுத்திவிடும் என்பதை கவனத்தில் கொள்க. அதேபோல் முகம் துடைக்கும் துண்டுகள், நியூஸ் பேப்பர், காட்டன் துணிகள் அல்லது பாலிஸ்டர் துணிகளை கொண்டு டிவி ஸ்க்ரீனை துடைக்கவே கூடாது. இவை அனைத்தும் டிவியின் ஸ்க்ரீனை சேதப்படுத்தும்.

Smart TV-ஐ துடைக்க இனி இந்த துணிகளை பயன்படுத்த வேண்டாம்.. ஏன்?

6. மேலும் டிவி ஸ்க்ரீனை துடைத்த பிறகு, அதை நன்றாக உலர விட வேண்டும். அதை சரியாக காயவிடாத பட்சத்தில், ஒரு சில ஈரமான புள்ளிகள் மீண்டும் ஒரு கறையாக மாறிவிடும். பிறகு நீங்கள் டிவியின் ஸ்க்ரீனை துடைத்ததற்குப் புண்ணியமே இல்லமால் போய் விடும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் உங்கள் டிவியின் ஆயுளை அதிகரிக்கலாம். குறிப்பாக டிவியை சுத்தம் செய்யும்போது எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

photo credit: sparkleandshine.today

More from GizBot

Best Mobiles in India

English summary
6 Easy Ways to Clean Smart TV Screen Without Damage: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X