சந்திரயான்-3 வெற்றிக்கு பின்னணியில் இந்த 6 நிறுவனங்கள் இருக்கிறதா? டாட்டா, கோத்ரெஜ் உடன் ISRO..
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ-ISRO) புதன்கிழமை சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறக்கி சரித்திரம் படைத்தது. இந்த சாதனையையே படைத்த நான்காவது நாடாகவும், சந்திரனின் தெற்குப் பகுதியில் மெதுவாக தரையிறங்கிய முதல் நாடாகவும் இந்தியா மாறியுள்ளது.
இந்த சாதனையை இஸ்ரோ மட்டும் தனித்து நின்று செய்து முடிக்கவில்லை என்பதே உண்மை. ஆம், சந்திரயான்-3 (Chandrayaan-3) திட்டத்தின் வெற்றிக்கு தனியார் துறை பங்குதாரர்களின் முக்கிய உதவிதான் காரணம் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. சில முன்னணி நிறுவனங்களின் உதவியுடன் தான் நமது இந்தியாவின் சந்திரயான்-3 மிஷன் வெற்றியடைந்துள்ளது.

கோத்ரேஜ் ஏரோஸ்பேஸ், பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ், லார்சன் மற்றும் டூர்போவின் விண்வெளி பிரிவு, மிஷ்ரா தாது நிகம், எம்டிஏஆர் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் லிமிடெட் (டிசிஇ) மற்றும் வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் போன்ற தனியார் துறை பிராண்டுகள் சந்திரயான் மிஷன்னுக்கு தேவையான முக்கிய கூறுகள் மற்றும் பொருட்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தன.
1. லார்சன் மற்றும் டூர்போவின் விண்வெளிப் பிரிவு (Larsen and Tourbo's aerospace wing)
இது சந்திரயான் 3 ஏவுவதற்கு எல் & டியின் (L & T) விண்வெளிப் பிரிவு முக்கிய பாகங்களை வழங்கியது. இதில் ஹெட்-எண்ட், மிடில் மற்றும் நோசில் வாளி பாகங்கள் போன்ற முக்கிய பூஸ்டர் துண்டுகள் அடங்கும்.
2. வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் (Walchandnagar Industries)
ஊடக அறிக்கைகளின் படி, நிறுவனம் ஏவுகணை வாகனத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமான பூஸ்டர் பிரிவுகளான S200, ஃப்ளெக்ஸ் முனை கட்டுப்பாட்டு டேங்கேஜ்கள் மற்றும் S200 ஃப்ளெக்ஸ் முனை வன்பொருள் ஆகியவற்றை இந்நிறுவனம் வழங்கியது.
3. மிஸ்ர தாது நிகம் (Mishra Dhatu Nigam)
நிறுவனம் கோபால்ட் அடிப்படை உலோகக் கலவைகள், நிக்கல் அடிப்படை உலோகக் கலவைகள், டைட்டானியம் உலோகக் கலவைகள் மற்றும் சந்திரப் பயணத்தில் பயன்படுத்தப்படும் ஏவுகணை வாகனத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு இரும்புகள் போன்ற முக்கியமான பொருட்களை வழங்கியது.

4. கோத்ரெஜ் ஏரோஸ்பேஸ் (Godrej Aerospace)
கோத்ரெஜ் ஏரோஸ்பேஸ் முக்கிய எஞ்சின்கள் மற்றும் த்ரஸ்டர்களை தயாரித்ததாகக் கூறப்படுகிறது. இதில் முக்கிய நிலைக்கான L110 மற்றும் மேல் நிலைக்கு CE20 இன்ஜின் த்ரஸ்ட் சேம்பர் ஆகியவை அடங்கும்.
5. டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் (Tata Consulting Engineers) (TCE)
டிசிஇ திட்டத்திற்கான முக்கிய உள்நாட்டு அமைப்புகள் மற்றும் துணை அமைப்புகளை உருவாக்கியது. இது பணியின் துவக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது.
6. அங்கிட் ஏரோஸ்பேஸ் (Ankit Aerospace)
சமீபத்திய அறிக்கைகளின் படி, நிறுவனம் அலாய் ஸ்டீல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபாஸ்டென்சர்கள் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட டைட்டானியம் போல்ட்களை வழங்கியது. அவை மிஷன் நீடித்துழைப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சந்திரயான்-3 க்கான பேட்டரிகள் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டன. BHEL இன் வெல்டிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (WRI) சந்திரயான்-3 க்கு பை-மெட்டாலிக் அடாப்டர்களை வழங்குவதற்கும் பொறுப்பாக இருந்தது. இஸ்ரோவுடன் அணைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து அட்டகாசமான பணியை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








