Home
News

திடீர் விலை உயர்வு முதல் புது OTP ரூல்ஸ் வரை.. 2024-ல் Telecom துறையை தெறிக்கவிட்ட 6 அறிவிப்புகள்!

2024 ஜூன் மாத இறுதி வரை இந்திய டெலிகாம் துறையில் (Telecom Department) எந்த சலசலப்பும் இல்லை. ஆனால் ஒரே இரவில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது என்பது போல ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் ரீசார்ஜ் விலை உயர்வை அறிவிக்க, உடனே ஜியோ (Jio) நிறுவனமும் தனது ரீசார்ஜ் திட்டங்களின் மீதான விலை உயர்வை அறிவிக்க, கடைசியாக வோடபோன் ஐடியாவும் (Vodafone Idea) விலை உயர்வை அறிவித்த்து

2024 ஜூலை முதல் வாரத்தில் அமலுக்கு வந்த - இந்திய தனியார் நிறுவன டெலிகாம் பயனர்களுக்கான விலை உயர்வை - ஒரு அநியாய விலை உயர்வு என்றே கூறலாம். ஏனென்றால் ரூ.155 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த ஜியோ திட்டம் ரூ.189 ஆக விலை உயர்த்தப்பட்டது. இது 22% உயர்வை குறிக்கிறது. மூன்று தனியார் நிறுவனங்களும் ஒரே நேரத்தில் விலை உயர்வை அறிவித்தது தான், 2024 ஆம் ஆண்டில் டெலிகா துறையில் நடந்த "முதல் சம்பவம்" ஆகும்!

2024-ல் Telecom துறையை தெறிக்கவிட்ட 6 அறிவிப்புகள்!

இரண்டாவது சம்பவத்திற்கு சொந்தக்காரர் - பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். ஆனால் இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் எதையுமே செய்யவில்லை. அதாவது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகிய தனியார் நிறுவனங்களை போல.. பிஎஸ்என்எல் எந்த விலை உயர்வையும் அறிவிக்கவில்லை. இதன் விளைவாக பல எண்ணிக்கையிலான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல்-க்கு ஜம்ப் அடித்தனர்; இன்னமும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) தரவுகளின்படி, பிஎஸ்என்எல் நிறுவனமானது கடந்த ஆகஸ்ட் 2024 இல் சுமார் 2.5 மில்லியன் (அதாவது 25 லட்சம்) புதிய பயனர்களை சேர்த்தது. இந்த எண்ணிக்கை தற்போது இன்னும் அதிகரித்து இருக்கும்; பிஎஸ்என்எல்-ன் ஒட்டுமொத்த பயனர் எண்ணிக்கை ஒரு நல்ல நிலையை அடைந்து இருக்கும். சரியான புள்ளிவிவரங்கள் அடுத்த சில வாரங்களில் வெளியாகும்.

மூன்றாவது சம்பவம்; தரமான சம்பவம் - விட்டதை பிடிக்க ஜியோ நிறுவனமானது பல தரமான தீபாவளி சலுகைகளை அறிவித்தது. முதலாவதாக 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் மீது ஜியோவின் தீபாவளி தமாக்கா ஆபர் அறிவிக்கப்பட்டது - 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.899 மதிப்புள்ள காலாண்டு திட்டம் மற்றும் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.3,599 மதிப்புள்ள 1 ஆண்டு திட்டம்.

இந்த 2 ஜியோ திட்டங்களையும் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,350 மதிப்புள்ள வவுச்சர்கள் கிடைத்தது. அவைகளை மைஜியோ ஆப் வழியாக ரீடீம் செய்துகொள்ள முடிந்தது. ரூ.3350 மதிப்புள்ள வவுச்சர்களில் ரூ.3000 மதிப்புள்ள ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) வவுச்சர், ஏஜியோவின் (Ajio) ரூ.200 மதிப்புள்ள கூப்பன், ரூ.150 மதிப்புள்ள ஸ்விக்கி (Swiggy) வவுச்சர் ஆகியவைகள் அடங்கும். இலவசமாக கிடைக்கும் வவுச்சர் நன்மைகளோடு, ரூ.899 மற்றும் ரூ.3,599 திட்டங்களின் கீழ் வழக்கமான நன்மைகளும் கிடைக்கும்.

அதாவது ரூ.899 திட்டத்தின் கீழ் ட்ரூ அன்லிமிடெட் 5ஜி டேட்டா , அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 2 ஜிபி டேட்டா + கூடுதலாக 20 ஜிபி டேட்டா என மொத்தம் 200ஜிபி டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் 90 நாட்களுக்கு கிடைக்கும். ரூ.3,599-ன் கீழ் தினமும் 2.5 ஜிபி டேட்டா என மொத்தம் 912.5 ஜிபி டேட்டா, ட்ரூ அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவை 365 நாட்களுக்கு கிடைக்கும்.

இரண்டாவதாக, 2024 தீபாவளி சலுகையின் ஒரு பகுதியாக 2 ஜியோபாரத் 4ஜி ஃபீச்சர் போன்களின் (JioBharat 4G Feature Phones) மீது தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது. இதன்கீழ் ஜியோபாரத் கே1 கார்பன் 4ஜி (JioBharat K1 Karbonn 4G) மற்றும் ஜியோபாரத் வி2 4ஜி (JioBharat V2 4G) ஆகிய 2 மாடல்களும் வெறும் ரூ.699 க்கு வாங்க கிடைத்தது. நினைவூட்டும் வண்ணம் இவ்விரு மாடல்களின் அசல் விலை ரூ.999 ஆகும். அதாவது இவ்விரு போன்கள் மீதும் ரூ.300 தள்ளுபடி கிடைத்தது.

மூன்றாவதாக ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான ம்யூசிக்-ஸ்ட்ரீமிங் தளமான ஜியோசாவன் சேவை தொடர்பான ஒரு சலுகை அறிவிக்கப்பட்டது. இதன் கீழ் ஜியோசாவன் ப்ரோ சந்தாவானது (JioSaavn Pro Individual Subscription) 3 மாத காலத்திற்கு, எந்த கட்டணமும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக கிடைத்தது ஜியோசாவன் ப்ரோ சாந்தாவின் கீழ் விளம்பரம் இல்லாத ம்யூசிக் ஸ்ட்ரீமிங் மற்றும் மிக உயர்ந்த தரத்தில் அன்லிமிட் டவுன்லோட்கள் ஆகிய முக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

இந்த சலுகையை பெற, புதிய பயனர்கள் ஜியோசாவன் ப்ரோவில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்தவுடன், அவர்கள் 3 மாதங்களுக்கு எந்த தடையும் இல்லாமல் ம்யூசிக்கை கேட்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படி அடுக்கடுக்கான ஆபர்கள் மூலம் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் சேர்த்தது என்றே கூறலாம்.

நான்காவது சம்பவத்தை இரங்கி செய்தது பிஎஸ்என்எல் தான். விலை உயர்வின் போது தானாகவே தனக்கு ஏற்பட்ட சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டாலும் கூட, பிஎஸ்என்எல் நிறுவனம் கூடுதலாக சில விஷயங்களை செய்ய வேண்டி இருந்தது. எனவே பிஎஸ்என்எல் நிறுவனமும் 2024 தீபாவளி சலுகையை அறிவித்தது.

பிஎஸ்என்எல்-ன் தீபாவளி பண்டிகை கால சலுகையின் கீழ் ரூ.1999 திட்டத்தின் (BSNL Rs.1999 Plan) விலை குறைக்கப்பட்டது. இந்த திட்டம் ரூ.100 தள்ளுபடியுடன் ரூ.1899 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்தது. அந்த நேரத்தில் இந்த விலை மாற்றம் பிஎஸ்என்எல் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிரதிபலித்தது. அதே சமயம் இது நவம்பர் 7, 2024 அன்று முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டு, சொன்ன தேதியோடு நிறுத்தவும்பட்டது.

ரூ.1899 ஆக விலை குறைக்கப்பட்ட ரூ.1999 திட்டத்தின் கீழ் மொத்தம் 600ஜிபி டேட்டா (600GB Data) கிடைத்தது. இது ஒரு வருடாந்திர திட்டம் (Annual Plan) ஆகும். அதாவது 365 நாட்களுக்கு சர்வீஸ் வேலிடிட்டியை (365 Days Service Validity) வழங்கும் ஒரு திட்டமாகும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், கேம்கள் மற்றும் ம்யூசிக் போன்ற கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது

2024 ஆம் ஆண்டின் மிக முக்கியமான ஐந்தாவது சம்பவத்தை ஜியோ செய்தது. முகேஷ் அம்பானி தலைமையிலான டெலிகாம் நிறுவனமான ஆன ரிலையன்ஸ் ஜியோ, ரூ.601 மதிப்புள்ள ஒரு புதிய திட்டத்தை (Jio Rs 601 plan) அறிமுகம் செய்தது. ஜியோ நிறுவனம் இந்த திட்டத்தை ட்ரூ 5ஜி அப்கிரேட் கிஃப்ட் வவுச்சர் (True 5G upgrade gift voucher) என்று அழைக்கிறது.

ஜியோவின் ரூ.601 திட்டமானது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். இது ஒரு வருடம் முழுவதும் வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்குவதோடு மட்டுமில்லமால் 5ஜி கனெக்டிவிட்டியை வழங்காத ஜியோ திட்டங்களுடன் இணைக்கப்படும் ஆதரவையும் கொண்டுள்ளது. இன்னும்புரியும்படி சொன்னால் இது 4ஜி நெட்வொர்க்கில் உள்ள பயனர்களை 5ஜியை அனுபவிக்க அனுமதிக்கும் ஒரு திட்டமாகும்.

2024 ஜூலை மாதம் அமலுக்கு வந்த விலை உயர்விற்கு பின்னர் 2ஜிபி தினசரி டேட்டா அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டாவை வழங்கும் ஜியோ திட்டங்களுடன் மட்டுமே இலவச ஜியோ 5ஜி டேட்டா நன்மை அணுக கிடைக்கிறது. எனவே, 1.5ஜிபி டெய்லி டேட்டாவை வழங்கும் ஜியோ திட்டத்தை ரீசார்ஜ் செய்தவர்கள் 5ஜி டேட்டாவை பெற முடியாத சிக்கல் இருந்தது

இந்த சிக்கலை சரி செய்யும் நோக்கத்தின் கீழே ரூ.601 மதிப்புள்ள 5ஜி அப்கிரேட் வவுச்சர் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.601 ஆனது மொத்தம் 12 தனிப்பட்ட டேட்டா வவுச்சர்களை உள்ளடக்கிய திட்டமாகும். அதாவது இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு.. அடுத்த 1 ஆண்டுக்கு ஒவ்வொரு மாதமும், வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்கும் ரூ.51 மதிப்புள்ள டேட்டா வவுச்சர் கிடைக்கும். இப்படி மொத்தம் 12 மாதங்களுக்கு 12 டேட்டா வவுச்சர்கள் கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் இந்த வவுச்சர்களை ஒவ்வொரு மாதமும் மைஜியோ ஆப்பில் இருந்து ரிடீம் செய்ய வேண்டும். தற்போது இந்த திட்டம் ஜியோவின் அதிகாரப்பூர்வ ஆப் ஆன மைஜியோ (MyJio) மற்றும் ஜியோ இணையதளம் வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. மற்ற டேட்டா வவுச்சர்களை போலவே ரூ.601 டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்ய வேண்டுமென்றால், பயனர்களின் ஜியோ மொபைல் எண்ணி ஆக்டிவ் ஆக உள்ள ஒரு பேஸிக் திட்டம் இருக்க வேண்டும் என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்

கடைசி சம்பவம் (ஜியோ அல்ல, ஏர்டெல் அல்ல, பிஎஸ்என்எல் அல்ல) டிராய் செய்தது. ஆம் டிராய் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது ஒடிபி தொடர்பான புதிய விதிகளை டிசம்பர் மாதத்தில் அமலுக்கு கொண்டு வந்தது. முதலில் இந்த விதிகள் 2024 நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. பின்னர் பல காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு டிசம்பரில் அமலுக்கு வந்தது.

டிராய் அறிவித்த புதிய வழிகாட்டுதல்களின்படி, முதன்மை நிறுவனங்களிலிருந்து (Principal Entitie - PEs) வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ்களை கண்காணிக்க முடியும் என்பதை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (Telecom Operators) உறுதி செய்ய வேண்டும். மெசேஜ் டிரேசிபிலிட்டி (Message traceability) தொடர்பான இந்த புதிய விதிகள் வங்கிகள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து வகைகளுக்கும் பொருந்தும்.

ஆரம்பத்தில், பொருந்தாத அனுப்புநர் விவரங்கள் (Mismatched sender details) அல்லது தெளிவான அனுப்புநரின் அடையாளம் (Clear sender identity) இல்லாத எந்தவொரு மெசேஜ்களுமே பிளாக் செய்யப்படும் என்று டிராய் கூறி இருந்ததால், இது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த கூடும் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் கவலை எழுப்பின. ஏனென்றால் ஆன்லைன் வழியாக பணம் செலுத்துவது முதல் பார்சல்களை டெலிவரி செய்வது வரையிலாக.. பல்வேறு சேவைகளுடன் ஒடிபி மெசேஜ்கள் (OTP Messages) இணைக்கப்பட்டுள்ளது.

அப்படியான ஒடிபி மெசேஜ் டிரேசிபிலிட்டியை கொண்டுவருவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பல வகையான சேவைகளின் போது சிரமத்தை சந்திக்க நேரிடும். மேலும் டெலிமார்க்கெட்டுகள் மற்றும் முதன்மை நிறுவனங்கள் ஆனது இந்த புதிய விதியை பின்பற்ற தேவையான தொழில்நுட்பத்தை கொண்டிருக்கவில்லைஎன்பதால் நவம்பர் 1 என்கிற காலக்கெடு நீடிக்கவும் பட்டது. பின்னர் டிசம்பர் மாத இரண்டாவது வாரத்தில் அமலுக்கும் வந்தது.

More from GizBot

Best Mobiles in India

English summary
6 Big Announcements Offers From Jio Airtel Vi BSNL TRAI Which Shocked Telecom Users in 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X