அடுத்த 3 மாசத்துக்கு ஜமாய்.. Jio ஒரே போடு.. Airtel அங்குட்டு ஓடு.. 5G டேட்டா முதல் OTT வரை.. 6 ஆப்ஷன் இருக்கு!
1 வருடம் அல்லது 6 மாத காலத்திற்கு வேலிடிட்டியை வழங்கும் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் அளவிற்கு பட்ஜெட் இல்லையென்றால்.. அதே சமயம் ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்வதிலும் சலிப்பு இருந்தால்.. உங்களுக்கு 3 மாத காலத்திற்கு (84 நாட்களுக்கு) செல்லுப்படியாகும் திட்டங்களே பெஸ்ட்!
"அதுதான் டா என் ஸ்பெஷாலிட்டி" என்று கூறும்படியாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் கீழ்.. வெவ்வேறு விலைகளில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 6 திட்டங்கள் ஆனது 3 மாத கால வேலிடிட்டியை வழங்குகின்றன. 84 நாட்கள் வேலிடிட்டி, கூடவே டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், ஓடிடி போன்ற நன்மைகளை விரும்புபவர்கள்.. கீழ்வரும் 6 திட்டங்களில், எதை வேண்டுமானாலும் ரீசார்ஜ் செய்யலாம்:

01. ஜியோ ரூ.395 ரீசார்ஜ் திட்டம்: இதுதான் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் மிகவும் மலிவான ஜியோ ரீசார்ஜ் ஆகும். இது மொத்தம் 6ஜிபி அளவிலான ஹைஸ்பீட் டேட்டாவை மட்டுமே வழங்கினாலும் கூட, இதனுடன் ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் அணுக கிடைக்கும். இதன்கீழ் 5ஜி ஸ்மார்ட்போன்களை கொண்ட ஜியோ பயனர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டா நன்மைகள் கிடைக்கும்.
மற்ற நன்மைகளை பொறுத்தவரை, இது மொத்தம் 1000 இலவச எஸ்எம்எஸ்களை வழங்கும் மற்றும் 84 நாட்களுக்கு முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் வழங்கும். கூடவே ஜியோ டிவி, ஜியோ சினிமா (பிரீமியம் கன்டென்ட் தவிர்த்து) மற்றும் ஜியோ கிளவுட் சேவைகளுக்கான அணுகல்களையும் வழங்கும்.

02. ஜியோ ரூ.666 ரீசார்ஜ் திட்டம்: 84 நாட்கள் வேலிடிட்டி உடன் டெய்லி டேட்டாவையும் தேடுபவர்களுக்கு இதுதான் பெஸ்ட் சாய்ஸ். இது தினமும் 1.5ஜிபி ஹைஸ்பீட் டேட்டாவுடன் வருகிறது. டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் ரூ.395-ஐ போலவே இதுவும் ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை வழங்கும்.
மற்ற நன்மைகளை பொறுத்தவரை, இது தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்கும் மற்றும் செல்லுபடியாகும் 84 நாட்களுக்கு முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் வழங்கும். கூடவே ஜியோ டிவி, ஜியோ சினிமா (பிரீமியம் கன்டென்ட் தவிர்த்து) மற்றும் ஜியோ கிளவுட் சேவைகளுக்கான அணுகல்களையும் வழங்கும்.

03. ஜியோ ரூ.758 ரீசார்ஜ் திட்டம்: இந்த திட்டத்திற்கும் மேலே பார்த்த ரூ.666 திட்டத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் உள்ளது. இது 3 மாத காலத்திற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் (Disney+Hotstar subscription) வருகிறது. மற்றபடி இது ரூ.666 வழங்கும் அதே நன்மைகளை 84 நாட்களுக்கு வழங்கும்.
04 & 05. ஜியோ ரூ.805 மற்றும் ரூ.806 ரீசார்ஜ் திட்டங்கள்: ஜியோவின் ரூ.805 மற்றும் ரூ.806 திட்டங்கள் ஆகிய இரண்டுமே 84 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகின்றன. இரண்டுமே டெய்லி 2ஜிபி ஹைஸ்பீட் டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி, ஜியோ சினிமா (பிரீமியம் கன்டென்ட் தவிர்த்து) மற்றும் ஜியோ கிளவுட் சேவைகளுக்கான அணுகல்களை வழங்குகின்றன.

இரண்டிற்கும் இடையேயான முக்கிய வேறுபாட்டை பொறுத்தவரை, ரூ.806 திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் சோனிலைவ் (SonyLIV) சந்தாவை பெறுவார்கள். அதே நேரத்தில் ரூ.805 ரீசார்ஜ் பேக்கை தேர்ந்தெடுப்பவர்கள் ஜீ5 (Zee5) சந்தாவைப் பெறுவார்கள். அதாவது எந்த ஓடிடி சேவை வேண்டும் என்கிற விருப்பத்தின்கீழ் பயனர்கள் தங்களுக்கான ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.
06. ஜியோ ரூ 1198 ரீசார்ஜ் திட்டம்: இந்த பட்டியலில் கடைசியாக உள்ள மற்றும் விலை உயர்ந்த திட்டம் இதுதான். இது 84 நாட்களுக்கு தினமும் 2ஜிபி அளவிலான ஹைஸ்பீட் டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி, ஜியோ சினிமா பிரீமியம் மற்றும் ஜியோ கிளவுட் சேவைகளுக்கான அணுகல்களை வழங்குகிறது.
கூடவே அமேசான் ப்ரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலைவ், ஜீ5, லயன்ஸ்கேட் பிளே, சன் நெக்ஸ்ட், ஹாய்சொய், எபிக் ஆன் உட்பட 14 ஓடிடி ஆப்களுக்கான சந்தாவையும் வழங்கும். மேலும் ஜியோ ரூ.1198 திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 18ஜிபி ஹைஸ்பீட் டேட்டாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications