Home
News

பிஎஸ்என்எல் பயனர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 சிறந்த திட்டங்கள்

பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட சிறந்த பிராட்பேண்ட் திட்டங்களையும் சேவைகளையும் பாரத் ஃபைபர் சேவையின் கீழ் வழங்குகிறது. குறிப்பாக சிறந்த சலுகைகள் கொண்ட திட்டங்களை வைத்துள்ளது இந்த பிஎஸ்என்எல் நிறுவனம்.

நிறுவனம் ரூ.1000-க்கு கீழ்

அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.1000-க்கு கீழ் பல திட்டங்களை வழங்குகிறது. அப்படியாக பிஎஸ்என்எல் பாரத் ஃபைபரிலிருந்துரூ.1000-க்கு கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் சிறப்பான திட்டங்களை இப்போது நாம் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.499 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.499 திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.499 திட்டம் ஆனது ஃபைபர் பேஸிக் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டம் 3,300GB (3.3TB) மாதாந்திர டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 30 Mbps இணைய வேகத்தில் டேட்டாவை பயன்படுத்த முடியும். மேலும் 3.3TB க்கு பின்னர் 2 Mbps என்கிற இணைய வேகம் கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் உள்ளது என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 பிஎஸ்என்எல் ரூ.599 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.599 திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 திட்டம் ஆனது ஃபைபர் பேஸிக் பிளஸ் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டம் 3,300GB (3.3TB) மாதாந்திர டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 60 Mbps இணைய வேகத்தில் டேட்டாவை பயன்படுத்த முடியும். மேலும் 3.3TB க்கு பின்னர் 2 Mbps என்கிற இணைய வேகம் கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் உள்ளது என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.779 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.779 திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.779 திட்டம் ஆனது சூப்பர் ஸ்டார் 300 என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டம் 300 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 50 Mbps இணைய வேகத்தில் டேட்டாவை பயன்படுத்த முடியும். மேலும் 300 ஜிபி டேட்டாவிற்கு பின் 2 Mbps என்கிற இணைய வேகம் கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் உள்ளது என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்பின்னர் இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவும் இந்த பிஎஸ்என்எல் ரூ.779 திட்டத்தில் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.799 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.799 திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.799 திட்டம் ஆனது ஃபைபர் வேல்யூ என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டம் 3,300GB அளவிலான டேட்டாவை வழங்குகிறது.. குறிப்பாக இந்த திட்டத்தில் 100 Mbps இணைய வேகத்தில் டேட்டாவை பயன்படுத்த முடியும். மேலும் 3,300 ஜிபி டேட்டாவிற்கு பின் 2 Mbps என்கிற இணைய வேகம் கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் உள்ளது என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் OTT சாந்தா நன்மைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 பிஎஸ்என்எல் ரூ.949 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.949 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.949 திட்டம் ஆனது சூப்பர் ஸ்டார் 500 என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 50 எம்பிபிஎஸ் வேகத்திலான 500 ஜிபி அளவிலான டேட்டாவைப் பெற முடியும். பின்பு டேட்டா வரம்பிற்கு பின்னர் 2 Mbps என்கிற இணைய வேகம் போன்ற நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் இலவச குரல் அழைப்பு நன்மைகள், டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.999 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.999 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.999 திட்டம் ஆனது ஃபைபர் பிரீமியம் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதில் பயனர்கள் 200 எம்.பி.பி.எஸ் வரையிலான வேகத்தின் கீழ் 3,300 ஜிபி அளவிலான டேட்டாவைப் பெறமுடியும். பின்பு டேட்டா வரம்பிற்கு பின்னர் 2 Mbps என்கிற இணைய வேகம் போன்ற நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் இலவச குரல் அழைப்ப நன்மைகள், டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
6 Best Broadband Plans BSNL Users Must Know: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X