நம்ப வச்சு ஏமாத்திருக்காங்க- கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்த 6 முக்கிய ஆப்ஸ்: 15000 பயனர்களின் தகவல் திருட்டு!

|

ஷார்க்போட் ஆண்ட்ராய்டு ஸ்டீலர் மென்பொருள் ஆனது பயனர்களின் நற்சான்றிதழை உள்ளிடச் செய்து அவர்களின் தரவைத் திருடியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஆறு வைரஸ் எதிர்ப்பு செயலிகள்

ஆறு வைரஸ் எதிர்ப்பு செயலிகள்

கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள ஆறு வைரஸ் எதிர்ப்பு செயலிகள் ஆனது 15000 பயனர்களின் தரவை திருடியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த செயலியால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் இத்தாலி மற்றும் இங்கிலாந்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பயன்பாடுகளை நிரந்தரமாக நீக்கி இருக்கிறது.

ல்வேர் எதிர்ப்பு மென்பொருள்

ல்வேர் எதிர்ப்பு மென்பொருள்

கூகுள் ப்ளே ஸ்டோரில் மால்வேர் எதிர்ப்பு மென்பொருளாக காட்சியளித்த ஆறு ஆப்ஸ்கள் சுமார் 15,000 ஆண்ட்ராய்டு பயனர்களின் முக்கிய தரவைத் திருடியதாக தகவல்கள் வெளியானது. கூகுள் இந்த விதிமீறலைக் கண்டறிந்த உடன் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பயன்பாடுகளை நிரந்தரமாக நீக்கி இருக்கிறது.

செக் பாயிண்ட் ரிசர்ச்சின் அறிக்கை

செக் பாயிண்ட் ரிசர்ச்சின் அறிக்கை

இதுகுறித்த செக் பாயிண்ட் ரிசர்ச்சின் அறிக்கைப்படி, ஷார்க்போட் ஆண்ட்ராய்டு ஸ்டீலர் மென்பொருளைப் பயன்படுத்தி வைரஸ் தடுப்பு பயன்பாடுகள் என்ற பெயரில் பாஸ்வேர்ட்கள், வங்கி விவரங்கள் மற்றும் பயனர்களின் பிற தனிப்பட்ட தகவல்களை திருடுவதை மூன்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த ஆப்ஸ் ப்ளே ஸ்டோரில் 15,000-க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களை பெற்றிருக்கிறது.

தீம்பொருளிலிருந்து தனித்து நிற்கிறது

தீம்பொருளிலிருந்து தனித்து நிற்கிறது

இந்த தீம்பொருளானது ஜியோஃபென்சிங் (Geofencing) அம்சம் மற்றும் ஏய்ப்பு நுட்பங்களை செயல்படுத்துகிறது, இந்த தீம்பொருள் பயன்பாடானது பிற தீம்பொருளிலிருந்து தனித்து நிற்கிறது. இந்த ஆண்ட்ராய்டு தீம்பொருளானது உலகளிவில் அரிதாக பயன்படுத்தப்படும் ஒரு அம்சமான டொமைன் ஜெனரேஷன் அல்காரிதம் (டிஜிஏ) எனப்படும் ஒன்றை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது என செக் பாயின்ட் அறிக்கை கூறுகிறது.

ஆறு தீங்கிழைக்கும் ஆப்ஸ்கள் பட்டியல்

ஆறு தீங்கிழைக்கும் ஆப்ஸ்கள் பட்டியல்

கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள இந்த ஆப்ஸ் பயனர்களின் தனிப்பட்ட தரவைத் திருடியுள்ளது. வைரஸ் தடுப்பு என்ற பெயரில் தோற்றமளிக்கும் இநத் பயன்பாடுகளானது, வங்கித் தகவல்களை திருடும் ஷார்க்போட் ஆண்ட்ராய்டு தீம்பொருளின் மூலம் 15,000-க்கும் மேற்பட்ட பயனர்களை தாக்கப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சியில், பாதிக்கப்பட்ட சுமார் 1000 சாதனங்களின் ஐபி அட்ரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானோர் இத்தாலி மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஆடம் க்ளீன் பூஸ்டர் ஆன்டி வைரஸ், ஆன்டி வைரஸ் சூப்பர் க்ளீனர், ஆல்பா ஆன்டிவைரஸ் க்ளீனர், பவர்ஃபுல் க்ளீனர் ஆன்டி வைரஸ், சென்டர் செக்யூரிட்டி ஆன்டி வைரஸ் என்ற பெயரில் இரண்டு என மொத்தம் ஆறு ஆப்ஸ்கள் ஆகும்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்

கூகுள் ப்ளே ஸ்டோரில் தீங்கிழைக்கும் என கண்டறியப்பட்டு பின் நீக்கப்பட்டுள்ளது. ஷார்க்போட் பயன்பாடானது அனைத்து சாத்தியமான பயனர்களையும் குறிவைக்கவில்லை, புவிஃபென்சிங் அம்சத்தை பயன்படுத்தி சீனா, இந்தியா, ரோமேனியா, ரஷ்யா, உக்ரைன் மற்றும் பெலேரஸ் உள்ளிட்ட பயனர்களை புறக்கணிக்கிறது என தகவல்கள் தெரிவிக்கிறது. ஷார்க்போட் பயன்பாடானது பயனர்கள் உள்நுழையும் போது தங்கள் நற்சான்றிதழை சமர்பிக்க ஊக்குவிக்கிறது. பின் இந்த நற்சான்றிதழ் சாளரங்கள் ஹேக்கர்களுக்கு மாற்றப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கிறது.

புதிய மால்வேர் கண்டுபிடிப்பு

புதிய மால்வேர் கண்டுபிடிப்பு

சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, சமூக வலைத்தளங்களில் பயனர்களின் தகவல்களை திருடும் புதிய மால்வேர் ஒன்று மைக்ரோசாப்ட் ஸ்டோர் தளத்தில் இருந்து பரவி வருவதாக தகவல் வெளிவந்தது. அதாவது இந்த புதிய மால்வேர் பெயர் எலக்ட்ரான் பாட் என்று கூறப்பட்டது. குறிப்பாக இந்த மால்வேர் கூகுள், சவுண்ட்கிளவுட், பேஸ்புக், யூடியூப் கணக்குகளில் இருந்து அவர்களுடைய தரவுகளை திருடுவதோடு மட்டும் இல்லாமல், அந்த கணக்குகளின் கட்டுப்பாடுகளையும் எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

செக்பாயிண்ட் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கை

செக்பாயிண்ட் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கை

மேலும் இதுதொடர்பாக செக்பாயிண்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வ ஸ்டோர் தளத்தில் இருந்து பரவி வரும் இந்த மால்வேர் 5000-க்கும் மேற்பட்ட கணினிகளை தாக்கியுள்ளதாகவும், பின்பு பயனர்களின் சமூக வலைதள கணக்குகளை கட்டுப்பாட்டில் எடுத்து, அந்த கணக்குகள் மூலம் அடுத்தவர்களின் பக்கங்களை லைக் செய்தல், கமெண்ட் செய்தல் உள்ளிட்ட செய்பாடுகளை செய்தவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய வகை மால்வேர் மைக்ரோசாப்ட் ஸ்டோரில் இருந்து புரோகிராம்களை, கேம்ஸ்களை தரவிறக்கம் செய்வது மூலம் பரவுகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே மைக்ரோசாப்ட் விண்டோஸ் பயன்படுத்தும் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

File Images

Source: 91mobiles.com

Best Mobiles in India

English summary
6 Antivirus Apps In The Google Play Store Stole 15000 Android Users Personal Data

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X