Home
News

Airtel பயனர்களே இந்த 6 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் தான் இப்போ பெஸ்ட்: கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

ஏர்டெல் (Airtel)நிறுவனம் தொடர்ந்து அருமையான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் கம்மி விலையில் பல புதிய திட்டங்களை கொண்டுவந்துள்ளது. அந்த புதிய திட்டங்களும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

ஏர்டெல் 5ஜி சேவை?

ஏர்டெல் 5ஜி சேவை?

குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 5ஜி சேவை இந்தியாவில் அதிக எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் இந்நிறுவனம் இன்னும் சில மாதங்களில் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தும் என்று ஏற்கனவே தகவல் வெளிவந்துள்ளது.

 6 அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டங்கள்

6 அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டங்கள்

எனவே இப்போதே அதிக வேலிடிட்டி தரும் ஒரு சில நல்ல ப்ரீபெய்ட் திட்டங்களை தேர்வு செய்வது நல்லது. மேலும் இப்போது ஏர்டெல் நிறுவனம் கம்மி விலையில் சிறந்த டேட்டா நன்மையை வழங்கும் 6 அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.299 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.299 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் உள்ளது.

குறிப்பாக இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும் என்பதுகுறிப்பிடத்தக்கது. விங்க் மியூசிக், அப்பல்லோ 24/7, இலவச ஹலோ டியூன், ரூ. 100 ஃபாஸ்டேக் கேஷ்பேக் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் ரூ.265 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.265 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.265 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விங்க் மியூசிக், இலவச ஹலோ டியூன் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் ரூ.399  ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.399 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.399 ரீசார்ஜ் திட்டம் தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

இதுதவிர ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவின் மூன்று மாதங்களுக்கு அணுகல், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக், இலவச ஹலோ டியூன் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.319  ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.319 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.319 ரீசார்ஜ் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக ஒரு மாதம் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது ஏர்டெல் ரூ.319 ரீசார்ஜ்.

இதுதவிர ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ. 100 ஃபாஸ்டேக் கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள்,விங்க் மியூசிக், இலவச ஹலோ டியூன் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.359  ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.359 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.359 ரீசார்ஜ் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது ஏர்டெல் ரூ.359 ரீசார்ஜ்.

இதுதவிர ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, ரூ. 100 ஃபாஸ்டேக் கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக், இலவச ஹலோ டியூன் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.479 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.479 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.479 ரீசார்ஜ் திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக 56 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது ஏர்டெல் ரூ.479 ரீசார்ஜ்.

இதுதவிர ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ. 100 ஃபாஸ்டேக் கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக், இலவச ஹலோ டியூன் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
6 Airtel Recharge Plans That Offer Best Data Benefits: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X